search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோதம்"

    • முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • நிலத்தகராறில் முன்விரோதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    கலவை அடுத்த கன்னிகாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவருக்கும் பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணா துரை (55). என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அண்ணாதுரை நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அவருக் கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையின் கை மற்றும் கால்களில் வெட்டி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த அண்ணா துரையை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வாழை ப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த லோகநாதனை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மா ம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கையால விளை முதலார், செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஜாண்கிறிஸ்டோபர்.

    இவரது மனைவி ஷீபா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபு மனைவி ஜெயலலிதாவுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று காலையில் பஞ்சா யத்து குழாயில் தண்ணீர் எடுத்துவரும் போது 2 தரப்பினரும் வாய் தகராறு வந்து மோதிகொண்டார்கள். 2 தரப்பினரும் அரிவா ளால் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இதில்இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்காயம் அடைந்த ஜாண் கிறி ஸ்டோபர், அவரது மனைவி ஆகிய 2 பேரும் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாபு, அவரது மனைவி ஜெயலலிதா ஆகிய 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதன் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு சொந்தமான இடம் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருப்பதாகவும், அவர்கள் குடிசைக்கு தீ வைத்திருக்கலாம் என்று அன்னபூரணம் கூறியள்ளார்.
    • அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில், அக். 20-

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்னபூரணம் (வயது 70).

    இவர் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் வெளியே தான் சமையல் செய்து வருகிறார். நேற்று இரவு சமையல் பணி முடிந்ததும், வழக்கம் போல் வீட்டுக்குள் சென்று அன்னபூரணம் படுத்து விட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை, இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அன்னபூரணம் வீட்டுக்குள் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்.

    தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், நாகர்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனக்கு சொந்தமான இடம் தொடர்பாக சிலருடன் முன்விரோதம் இருப்பதாகவும், அவர்கள் குடிசைக்கு தீ வைத்திருக்கலாம் என்று அன்னபூரணம் கூறியள்ளார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ்,சதிஷ், சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர்.
    • முருகன் மனைவி தட்டி கேட்டபோது அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42)இவரது வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ், (22) சதிஷ், (27) சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

    சம்பவத்தன்று முருகன் வீட்டில் இல்லாத சமயத்தில் நித்திஷ், சதிஷ், சக்தி, ஆகியோர் முருகனின் வீட்டின் கேட்டை உடைத்தும் பொருட்களை சேதப்படுத்தினர். இதனை முருகன் மனைவி தட்டி கேட்டார். உடனே அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில், வடலூர் போலீ சார்வழக்கு பதிவுசெய்து.நித்திஷ், சதிஷ், ஆகியோர்களை கைது செய்தனர்.  

    • ஏட்டு முத்துக்குமரன் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
    • பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் குண்டு சாலை நடேசன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 43). கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறை ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டு முன்பு தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து ஏட்டு முத்துக்குமரன் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் இவரது கார் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து முத்துக்குமரன் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அைணத்தார். பின்னர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது ஏட்டு காருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து தப்பி ஓடினார்களா? அல்லது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மத்திய சிறைச்சாலையில் பகுதியில் உள்ள உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு முன்விரோதம் காரணமாக சிறை சாலையில் பணிபுரிந்த போலீஸ், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் , மீண்டும் போலீசார் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜ்குமார் என்பவரது வீட்டில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் பிரவீன் மற்றும் மணிமாறன் பெட்ரோல் குண்டு வீசினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோசனை முனியன் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (எ) பிரவீன் (வயது 29) அதே பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (எ) மணிமாறன். இவர்கள் இருவருக்கும் ரோசனை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் இடையே முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 28-ம் தேதி ராஜ்குமார் என்பவரது வீட்டில் மற்றும் வீட்டின் முன்புறம் உள்ள கடையில் பிரவீன் மற்றும் மணிமாறன் பெட்ரோல் குண்டு வீசினர்.

    இதனால் ராஜ்குமார் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா பெட்ரோல் குண்டு வீச்சில் கைது செய்ய ப்பட்ட பிரவீன் மற்றும் மணிமாறனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் பிரவீன் மற்றும் மணிமாறனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடை த்தனர்.

    • சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
    • 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் இந்திரா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25). சென்னை ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த இந்திரா, அண்ணாதுரை, செல்வி, முத்துராமன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், முத்துராமன், செல்வி, பூமாதேவி ஆகிய 4 பேர் மீதும், செல்வி கொடுத்த புகாரின் பேரில் வைத்தியநாதன், செல்வி, சதீஷ், சித்ரா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • கும்பல் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான இவர் நேற்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதிக்கு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இரும்பை மகாகளேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வழிமறித்தது. உஷாரான ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஏரிக்கரை பகுதிக்கு ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொன்றது. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோட்டக்கரையை சேர்ந்த குமரவேல், சந்துரு, சங்கர் மனைவி சரஸ்வதி, அவரது மகன் மனோஜ், குமரவேல் மனைவி சாந்தி, ஏழுமலை, புதுவை கருவடிகுப்பத்தை சேர்ந்த குமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொலை முன்விரோதத்தில் நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சரஸ்வதி, மனோஜ், சாந்தி ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். மீதம் உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அப்போது அவர்கள் திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சிக்னல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    • ராஜபாளையத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு இந்த விரோதம் இருந்து வந்தது.

    விருதுநகர்

    ராஜபாளையம் சோலைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை பார்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து குருசாமி தரப்பினரும், கண்ணன் தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுபற்றி குருசாமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கண்ணன் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குருசாமி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த சிறுவனுக்கு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெய்யூர் காணாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 41). இவருக்கும் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்த விமல்தாஸ் (36) என்பவருக்கும் கோவில் திருவிழாவின் போது நடந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று காணாங்குளம் ராஜேஷ் வீட்டின் அருகில் வந்த விமல்தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷின் 13 வயது மகனை 4 பேரும் சேர்ந்து கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விமல்தாஸ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×