என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்பார்ப்பு"
- கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
- தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது.
குனியமுத்தூர்,
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவ்விடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகளும் இங்கு நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
ஆனால் இன்றைய நாள் வரை அது பயன்பாட்டில் இல்லாமல் வெறுமனே நின்று கொண்டு காட்சியளிக்கிறது. இதனால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வருபவர்களும், பஸ் ஏற வருபவர்களும் அவசரத்துக்கு இதனை உபயோகப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் நீண்ட நாட்களாக சிறுநீர் கழிப்பதற்கு பொது கழிப்பிடம் இல்லாமல் இருந்தது. கோவை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் இப்பகுதியில் இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கழிப்பிடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது. எனவே கோவை மாநகராட்சி உடனே தலையிட்டு இதனை திறக்க வேண்டும். இதேபோன்று மாநகராட்சி பகுதி முழுவதும் வைக்கப்பட்டு, உபயோகமில்லாமல் இருக்கும் இந்த சிறுநீர் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அறந்தாங்கியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமையுமா? என்று பொதுமக்ககள் எதிர்பார்க்கின்றனர்
- புதுக்கோட்டை பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
அறந்தாங்கி,
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து கடந்த 1974-ம் ஆண்டு புதுக் கோட்டை மாவட்டம் உதய மானது .புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை, அறந் தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலி மலை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இதில் புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகரா ட்சிகளும், ஆலங்குடி , இலுப்பூர், அரிமளம், கீர னூர், கறம்பக்குடி, பொன்ன மராவதி, கீரமங்களம், அன் னவாசல் ஆகிய 8 பேரூரா ட்களும்,புதுக்கோட்டை, அறந்தா ங்கி, இலுப்பூர் ஆகிய 3 வருவாய் கோட்டங்களும் மற்றும் 12 வட்டங்கள் அடங்கிய சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பெரிய மாவட்டமாக புதுக் கோட்டை திகழ்கிறது.பரந்து விரிந்த மாவட்ட மாக இருப்பதால் அரசின் சலுகைகள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது தேவை களை விரைந்து செயல்ப டுத்தி கொள்வும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தவும்,மாவட்டத்தின் 2-வது பெரிய நகராட்சியை கொண்ட அறந்தாங்கியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஒரு குழுவாக அமைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர்.குறிப்பாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுயில் 3 தாலுகாக்களும், உதவி கலெக்டர் அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், சுகாதார அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை,மாவட்டக் கல்வி அலுவல கம், ஒருங்கிணைந்த நீதிம ன்றங்கள், சிறைச்சாலை, மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம், போக்கு வரத்து பணிமனை, பொது ப்பணித் துறை உள்ளிட்ட அநேக அலுவலகங்களும் உள்ளன. இருந்த போதிலும் மாவட்டத்தின் தலைமை யகம் புதுக்கோட்டையில் உள்ளதால் இங்கிருந்து மக்கள் தொலைதூரத்தில் சென்று மாவட்ட கலெ க்டரை சந்திக்க வேணடி்யு ள்ளது.இது குறித்து ம.ஜ.க. மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முபாரக் அலி கூறுகையில்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு 40,50 கிலோ மீட்டர் தூர த்தில் உள்ள மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திற்கு சென்று வர மிகவும் சிரம த்தை சந்திக்க வேண்டி யுள்ளது.இதனால் அறந்தாங்கி நகரை தலைமையிடமாகக் கொண்டு அறந்தாங்கி மாவ ட்டம் அமைத்து தரபல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகி ன்றனர்.அப்படி அமைக்கும் பட்ச த்தில் அதற்குரிய சட்டமன்ற தொகுதிகளாக அறந்தாங்கி ஆலங்குடி தொகுதிகளை சேர்த்து அமைத்துக் கொள் ளலாம் அல்லது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியோடு பேராவூரணி தொகுதியை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.அதே போன்று சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் கர்ணா கூறுகையில், புதுக் கோட்டைக்கு நிகராக அற ந்தாங்கியிலும் மக்கள் தொகை பெருக்கம் அடை ந்துவிட்டது.ஏற்கனவே அறந்தாங்கி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் கட்டமை ப்புகள் சீரமைக்கும் பணிகள் தாமதமடைந்து வருகிறது.
இதே அறந்தாங்கி மாவட் டமாக இருந்திருந்தால் பணி கள் விரைந்து முடிக்கப்பட்டி ருக்கும், அதே போன்று அறந்தாங்கியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவ ட்டங்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகி றது,ஆனால் மக்கள் தொகை பெருகியபோதிலும் பேருந்து நிலையம் இன்னும் விரி வாக்கம் செய்யப்பட வில்லை. மேலும் தற்போது ள்ள நெருக்கடியில் காவல் நிலையம் இரண்டாக பிரிக்க வேண்டும் இதெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அறந்தாங்கியை தலைைமயிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
- பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது.
- ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது.
உடுமலை:
நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று பலன் தரக்கூடிய நிலைப்பயிரான தென்னை விவசாயம் உடுமலை பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.விவசாயியோடு சேர்த்து எண்ணற்ற தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பாற்றி வந்த தென்னை விவசாயம் இன்று குற்றுயிரும் குலைஉயிருமாக அழிவின் விளிம்பில் உள்ளது. கொப்பரை விலை வீழ்ச்சி, ஆட்கள் பற்றாக்குறை, பருவநிலை மாறுபாட்டால் நோய் தாக்குதல், பராமரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு, தேங்காய் மற்றும் இளநீருக்கு போதிய விலை இன்மை காரணமாக தேங்காய் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் தென்னை விவசாயத்தை கைவிட்டும் வருகின்றனர். இந்த நிலையில் வறட்சியும் தென்னை விவசாயிகளை கடுமையாக தாக்கி வருகிறது. பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது. அதன் தாக்குதலில் இருந்து சமாளிக்க முடியாமல் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தனர்.ஆனாலும் காற்று மற்றும் வெப்பத்தின் கோர தாண்டவத்திற்கு முன்பு விவசாயிகளின் முயற்சி வீணற்று போனது.கண்ணும் கருத்துமாக பிள்ளை போன்று பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் பலன் கொடுத்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் துடித்து துடித்து மாண்டு போனது கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழிலை நாடிச்செல்ல வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் உடுமலை பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.
பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.
மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அவ்வழியாக செல்வதும், விளையாடுவதும் ஆக உள்ளனர்.
எனவே, பள்ளியும் அருகில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
- இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
- மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
- நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும்
திருச்சி:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீடித்தது. அதேபோல் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தொடர்மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் நகர், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூர், தண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூர், பூவாளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர், நொச்சியம், கிளியநல்லூர், எதுமலை,
மணிகண்டம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வேங்கூர், கீழகல்கண்டார் கோட்டை, முசிறி வட்டத்தில் அய்ய ம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தர், தொட்டியம், உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளர்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்தும், போதிய அளவு உரங்கள் வழங்கவும் வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி உர சாக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தாண்டு நல்ல பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்து வருவதால் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.
திருச்சி-3 கோ.ஆர்.50, டி.கே.எம்.13, விஐடி1 ஆகிய நெல் ரகங்கள் உயிர் உரங்கள் வழங்கப்படுவதுடன் விதை நேர்த்தி செய்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 330 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
- குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
- உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.
ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.
இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.
இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.
உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
.நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
- இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்த றியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.
ஈரோடு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், விதவைகள், ஆதரவற்றோர், மிக மூத்தோர், அந்தி–யோதயா அன்னயோஜனா திட்ட கார்டுதாரர்கள் போன்றோருக்கு ரேஷன் கடைகள் மூலம், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.
அத்துடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை கிடைத்தது.
கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்தறியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடப்பாண்டு பட்ஜெட்டிலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானிய கோரிக்கையிலும், இதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தெரிவிக்காததுடன் நேற்று வரை ஆர்டர் வழங்கவில்லை. இதனால், பொங்கலின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-
பொங்கலின்போது வினியோகிப்பதற்காக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை ஆர்டர் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் கைத்தறியிலும், 70 சதவீதம் விசைத்தறியிலும் நெய்து வழங்கப்படும்.
இந்த ஆர்டரில் 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.
தற்போது ரயான் நூல் விலை உயராத நிலையில், துணி விலை மீட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் சரிந்து, விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்திலும், தொடர்ந்து விசைத்தறியை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம்.
வழக்கமாக பட்ஜெட்டில் நிதியும், எவ்வளவு எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்தி செய்வது என அறிவிக்கப்படும். மே மாதத்துக்குள் நூலுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தந்த பகுதிக்கு நூலும், சொசைட்டி மூலம் நிதியும் வழங்கப்படும்.
ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கினால் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற டையும். பொங்கலுக்கு முன் 90 சதவீதம் பேருக்கு சென்றடையும்.
நடப்பாண்டு நிதி அறிவிப்பு இல்லை. டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யாததால் நூல் வரத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கு மேலாகும். இருப்பினும் விரைவாக பணி வழங்கினால் முடங்கி கிடக்கும் விசைத்தறிகளுக்கு தொடர் வேலை கிடைக்கும்.
கடந்தாண்டு போல இல்லாமல் விரைவாக வேட்டி, சேலையை உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பாகும். இதுபற்றி, அரசு விரைவான முடிவை அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம் ஈரோடு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் பயன் பெறும். பல லட்சம் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை ெபாதுச் செயலாளர் பதவி ராஜன்செல்லப்பாவுக்கு கிடைக்குமா? என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணைப்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு இந்த பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.
இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
மேலும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மதுரை மாநகர மேயராகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவி இவருக்கு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டது.
- தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர்.
விழுப்புரம்:
செஞ்சி பஸ் நிலையம் ரூ 6.74 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு பழைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலையில் உள்ள தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் அனைத்து பஸ்களும் வந்து சென்றுகொண்டிருந்தன.
இந்நிலையில் ஏற்கனவே செஞ்சி கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணி தற்போது பஸ் நிலையத்தில் இருந்து கூட்டு ரோடு வரை தொடங்கியுள்ளதால் கூட்ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்க சாலை தடுக்கப்பட்டதாலும் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரமுடியாமல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.
எனவே செஞ்சி கூட்டுச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சென்னை செல்லும் பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.