search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு நாள்"

    • வருகிற 15-ந் தேதி மூவேந்தர் முன்னேற்ற கழக இணைத்தலைவர் டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஏழை-எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவி சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர் வழங்குகிறார்.

    மதுரை

    மூவேந்தர் முன்னேற்ற கழக இணைத்தலைவர் டி. ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்வி ஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு 15-ந் தேதி திருமங்கலத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுதிறாளிகளுக்கு வெண்கோல், உணவுப்பொருட்கள், வேட்டி-சேலை உள்ளிட்டவைகளை சுந்தர செல்வி ஒச்சாத்தேவர் வழங்குகிறார். அன்று மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார் மற்றும் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • 28-ம் ஆண்டு நினைவு நாள் முத்து கவுண்டர் காலனியில் நடந்தது.
    • நினைவிடத் தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரூர்,

    அரூர் அம்மன் கிரானைட்ஸ், ஏ.ஜி.கிரானைட்ஸ் உரிமை யாளர் முத்துராமசாமியின் தந்தையும், முன்னாள் எம். பி.யுமான முத்துகவுண்டரின் 28-ம் ஆண்டு நினைவு நாள் முத்து கவுண்டர் காலனியில் நடந்தது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்து கவுண்டர் நினைவிடத் தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து பிரேமா முத்து கவுண்டர் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சாந்தி முத்துராமசாமி, நேயா அஸ்வின் முத்து, வைஷ்ணவி ரத் னபிரசாத், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், முன்னாள் அமைச் தமிழ் சர் முல்லைவேந்தன், நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலா ளர் நல்லசாமி, மோகன், ராஜ்வேல், சின்னப்பகவுண்டர், பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கர், விவசாய சங்க பொறுப்பாளர்கள் தங்கராஜ், பொன்னுரங்கன், பழனிச்சாமி, கதிரேசன், இ.ஆர்.கே.பள்ளி தாளாளர் செல்வராஜ், பஸ் உரிமையர்கள் தியாகராஜன், முருகேசன், ஈஸ்வரமூர்த்தி, அரிமா இளையப்பன், மேகநாதன், தீபக், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், தேசிங்குரா ஜன், கொ.ம.தே.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் அசோகன், மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், பெருமாள், கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட செயலா ளர் பிரபாகரன், குமரன், சந்திரன், ஈஸ்வரன், பூபதி, ரத்தினவேலு, ராமசந்திரன், மாதேஷ், ராமர் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

    திருச்சி :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பரும், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், வன்னை அரங்கநாதன், செந்தில், மதிவாணன் மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றியச்செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

    • வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜ.க.கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ஜ.க.திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

    இதில் பா.ஜ.க.கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளர் மகேந்திரன், பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம்மணி, பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி,மற்றும் நிர்வாகிகளான பொன்னுசாமி, சுப்பு,சுப்பிரமணியம், ராமு, துரை உள்பட கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • கருணாநிதி புகழை பறை சாற்றும் வகையில் கைகளை உயர்த்தி புகழ் கோஷங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதனையடுத்து அங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மவுன ஊர்வலமாக வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு, மத்திய கொடி கம்பம் வழியாக அரண்மனையை வந்தடைந்தனர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த கருணாநிதி படத்திற்கு காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அனைவரும் ஒன்று கூடி கருணாநிதி புகழை பறை சாற்றும் வகையில் கைகளை உயர்த்தி புகழ் கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் தி.மு.க. செயலாளரும், நகர் மன்றத் தலைவருமான.கார்மேகம், இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் அமைச்சர்கள் சுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி.

    முன்னாள் எம்.எல்.ஏ.முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளர் ஹமீது சுல்தான், மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் அகமது, கவுன்சிலர்கள் சுகைபு, முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின்4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
    • 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின்4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடந்த கலைஞர் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் பி.ஏ.சேகர், ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ருக்மணி சேகர், சவுந்தர்ராஜன், மற்றும் சம்பத், விஜயலட்சுமி, மலர்க்கொடி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் பஸ் நிலையம் முன்பு நகர தி.மு.க. சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு, நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜசேகரன்,சுகன்யா ஜெகதீஸ்,வசந்தாமணி தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் குட்டி பழனிச்சாமி,கவுஸ்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடத்தில், ஒன்றிய தி.மு.க.சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,பல்லடம்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜ், வைஸ் முத்துக்குமார், என். எஸ். கே. நகர் கிட்டுசாமி, இளைஞரணி கௌதம், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,மற்றும் விமல் பழனிச்சாமி, எஸ்.எம்.பழனிச்சாமி,சாமிநாதன், பாலகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது.
    • மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருமங்கலம் நகராட்சி முன்பு மதுரை சாலையில் தெற்கு மாவட்ட செய லாளர் மணிமாறன் தலைமையில் மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் திமுக அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லதா அதியமான், முத்துராமலிங்கம், சாமி நாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பாச பிரபு மதன்குமார், விமல், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்க பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், கப்பலூர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
    • கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

     மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் உத்தம தலைவர், தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், செம்மொழி கண்ட நாயகர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 4-ந் ஆண்டு நினைவுதினம் வருகிற 7-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாபெரும் அமைதிப் பேரணி புறப்பட்டு, திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகம் சென்றடைந்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

    கருணாநிதி நினைவே ந்தலை போற்றும் இந்த நிகழ்ச்சிகளில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னோடிகள், ஊராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் வருகிற 7-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை, கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்

    திருச்சி:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் வருகிற 7-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, 7-ந்தேதியன்று காலை திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் தங்களுக்கு கீழ் இயங்கும் வட்ட, வார்டு, கிளை கழகங்களில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    இந்த நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை, கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்
    • மாவட்ட செயலாளர் அமைச்சர் காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வருகிற 7ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முதல் அ மைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள். நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் கொண்ட கொள்கையாலும் சரித்திர சாதனைகளாலும் கலாச்சார நினைவுகளோடும் நம்மோடு வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் வாழ, தமிழர் வாழ, தமிழ்நாடு வாழ, தமிழ் கலாச்சாரம் வாழ, தலைவர் மு. கருணாநிதியின் நினைவை போற்றி புகழ் பாடுவோம்.

    தமிழின தலைவர் கருணாநிதி உருவ படங்களுக்கு வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம், பேரூர், கிராம கிளை கழகங்களில் மற்றும் வட்ட கிளைக் கழகங்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவோம்.

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி உள்ளிட்ட அனைத்து அணியினரும் கிளைகள் தோறும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக, எழுத்தாளராக , கவிஞராக, இலக்கியவாதியாக, தலைசிறந்து விளங்கிய தமிழகத்தின் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி எனது தலைமையில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. வடசேரி அண்ணா சிலை அருகிலிருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக பொன்னப்ப நாடார் திடலில் அமைக்கப் பட்டிருக்கும் கருணாநிதி திருஉருவ படத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்த உள்ளனர். ஆகவே கழகத்தின் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் .

    மேலும் தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழகங்களில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    • முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவுநாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • அப்துல் கலாம் நினைவு நாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 7-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிட கட்டிடம் மலர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நினைவு நாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு வந்த அப்துல்கலாம் குடும்பத்தினர் நினைவிடத்தில் சிறப்பு தொழுகை நடத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அப்துல் கலாமின் பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத், அண்ணன் மகள் நசிமா மரைக்காயர் மற்றும் ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதன்பின் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    ×