என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பூர் மாணவர்"
- தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார்.
- கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.
அவிநாசி :
அவிநாசியிலுள்ள ஸ்ரீ ரமணசேவா ஆஸ்ரமம் குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருண்பாண்டி, நவீன் மற்றும் கவுதம் ஆகியோர் சேவூர் மற்றும் கருக்கன்காட்டுப்புதூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
3 பேரும் 20ந் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.இதில் 16 வயது பிரிவில், நவீன் முதலிடம், கவுதம் இரண்டாமிடமும், 16-18 வயது பிரிவில், அருண்பாண்டி மூன்றாம் இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து 25ம் தேதி அரசு பள்ளிகளிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் அருண்பாண்டி முதலிடம் பிடித்தார்.இதனால் அருண்பாண்டி, சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களை தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார். இதற்காக அவரை கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.
- மாணவரின் சுவர் ஓவியத்தை கல்லூரி நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக குழுவுக்கு அனுப்பி வைத்தது.
- தற்போது மாணவர் சஞ்சயின் ஓவியத்தை மிகப்பெரிய சுவர் ஓவியமாக அங்கீகரித்துள்ளது லிம்கா.
திருப்பூர்:
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன் துறையில் படிக்கும் மாணவர் சஞ்சய்குமார். இவர் கடந்த 2020 ஜூன் மாதம் தொடர்ந்து 25 நாட்கள் முயற்சி செய்து 504 சதுர அடியில் அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங் எனப்படும் புதிர் ஓவியம் தீட்டினார். பிரபல ஓவியர்கள் ரவிவர்மா, பிக்காசோ, உலக வரைபடம், பிரபல இசை வல்லுனர் பீட்டோ உருவம் பொறித்த ஆக்டோபஸ், பேஷன் துறை முன்னோடியான அலெக்சாண்டர் மெக்குயின் படங்களை சுவரில் தத்ரூப ஓவியமாக வரைந்தார்.
மாணவரின் இந்த சுவர் ஓவியத்தை கல்லூரி நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக குழுவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது மாணவர் சஞ்சயின் ஓவியத்தை மிகப்பெரிய சுவர் ஓவியமாக அங்கீகரித்துள்ளது லிம்கா. மேலும் இந்த ஓவியம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் லிம்கா தரப்பில் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சாதனை ஓவியம் தீட்டிய மாணவரை நிப்ட் -டீ கல்லூரி தலைவர் மோகன், முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், இணை செயலாளர்கள் விஜயகுமார், சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்