என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் கூட்டம்"
- அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோம்பை, பஞ்சந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
- தொழிலாளிகள் தார் சாலை அமைக்கும் பணியில் இடம் பெற வேண்டுமென பேரூராட்சி கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
வடமதுரை:
அய்யலூர் முதல் நிலை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கோம்பை, பஞ்சந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 5வது வார்டு அய்யனார் கோவில் பிரிவு முதல் பஞ்சந்தாங்கி வரை சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. 7வது வார்டில் கலர்பட்டியில் இருந்து புத்தூர் சாலை வரை மண் பாதையை மேம்படுத்தி தார் சாலை, கழிவுநீர், சாக்கடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பகுதியில் உள்ள தொழிலாளிகள் தார் சாலை அமைக்கும் பணியில் இடம் பெற வேண்டுமென பேரூராட்சி கவுன்சிலர் பிரியங்கா தினேஷ் கோரிக்கை வைத்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.
- கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டது முதல் இது நாள் வரை மண் அள்ளும் எந்திரத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது.
- எனவே தீர்மானம் நிறைவேற்றி சொந்தமாக எந்திரம் வாங்கப்படும் என்றார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் துணை தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் மீனா, பொறியாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தேச செலவினம் என்று குறிப்பிடாமல் அதற்குரிய தொகையை குறிப்பிட்ட வேண்டும். இது குறித்து பலமுறை கூட்டத்தில் தெரிவித்த பின்பும் இதுவரை அப்படியே தான் செயல் படுகிறீர்கள் என கவுன்சிலர் கண்ணன் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த கமிஷனர் இனிமேல் செலவு தொகை குறிப்பிடப்படும் என்றார். கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டது முதல் இது நாள் வரை மண் அள்ளும் எந்திரத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது. இதற்கு சொந்தமாக மண் அள்ளும் எந்திரம் வாங்கி இருக்கலாமே என கவுன்சிலர் கண்ணன் கேட்டார். இதற்கு பதில் அளித்த துணைத்தலைவர் கூறுகையில்,
அமைச்சரும் நகராட்சிக்கு சொந்தமாக மண் அள்ளும் எந்திரம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே தீர்மானம் நிறைவேற்றி சொந்தமாக எந்திரம் வாங்கப்படும் என்றார். கவுன்சிலர் அனைவரும் அவரவர் வார்டுகளுக்கு ட்பட்ட குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் மீனா நான் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். தொடர்ந்து அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சின்டெக்ஸ் புதிதாக அமைத்து தர வேண்டும் .
- பிபிஎல் லிஸ்ட் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி முடிவு செய்யப்படும்.
தாராபுரம் :
தாராபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
முபாரக் அலி (தி.மு.க.):- எனது வார்டில் 78 வறுமைக்கு கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பதிவிற்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதுவரை அதன் மேல் என்ன நடவடிக்கை. தாராபுரம் நகராட்சி வணிக வளாகத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய தொழில் செய்பவர்கள் அனுமதி வாங்காமல் கடையை நடத்துகிறார்கள்.நடவடிக்கை எடுக்கப்படுமா?.
தலைவர்:- பிபிஎல் லிஸ்ட் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி முடிவு செய்யப்படும் .அனுமதி இல்லாமல் தீ தொடர்பான தொழில் செய்பவர்கள் மீது விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .
கல்பனா (அ.தி.மு.க.):- கோடை காலம் வருவதால் எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சின்டெக்ஸ் புதிதாக அமைத்து தர வேண்டும் .
தலைவர்:- தேவைப்படும் இடங்கள் பற்றிய விவரம் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீனிவாசன்(தி.மு.க.):- குடிநீர் பராமரிப்புக்காக தற்காலிக பணியாளர்கள் நியமனம் பற்றி தீர்மானம் வந்துள்ளது. இதை நிரந்தர பணியாளராக போட வேண்டும்.
தலைவர்:- இனி எல்லாமே சென்சார் முறையில் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதுவரை மட்டுமே நமக்கு ஆட்கள் தேவை என்பதால் இந்த நடவடிக்கை.
கமலக்கண்ணன் (தி.மு.க.):- நமது நகராட்சி அலுவலகத்தில் கட்டிட பிரிவில் டெவலப்மெண்ட் ஏரியா 14 என்ற மேப்பை காணவில்லை. இதிலிருந்து தான் மற்ற பகுதிகளை அடையாளம் கண்டு கட்டிட அனுமதி வழங்கவேண்டும். எனவே நடவடிக்கை தேவை
தலைவர்:- .டி.பி.ஓ. என்னிடம் இது பற்றி தகவல் கூறியுள்ளார். சென்னையில் நகல் கேட்டு விண்ணப்பித்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் .
நாகராஜ் (அ.தி.மு.க.):- நகராட்சி பணிகள் மக்களை சென்றடையவில்லை என தி.மு.க. கவுன்சிலர்களே நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவது பற்றி புகார் கூறி உள்ளனர். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று இது காட்டுகிறது.
தலைவர்:- வார்டு பிரச்சினை மட்டும் கூறுங்கள். எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது .
அ.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் கூறிய குற்றச்சாட்டிற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்ச லிட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது.
ஸ்ரீதரன்(தி.மு.க.):- எனது வார்டில் பைபாஸ் ரோட்டில் குப்பைகளை எரிப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எரிப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- குப்பைகளை அள்ளுவதற்கு பதில் தீ வைத்து விடுகிறார்கள். இது சரியான முடிவு அல்ல.கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தாராபுரம் நகராட்சி ஸ்பெஷல் கிரேடாக தரம் உயர்த்தப்பட்டதற்கும் ஜூன் மாதத்தில் இருந்து நகராட்சி பகுதியில் அரசு சார்பில் காலை அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஆரணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் எஸ்.வி.நகரம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவிதாபாபு பேசியாதாவது:-
எங்கள் எஸ்.வி.நகரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் உள்ளன. அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுவதால் யாரிடம் பிரச்சனை கூறுவது என்று தெரியவில்லை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிக்கின்றேன்.
எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து ஒன்றிய துணை சேர்மன் ராஜேந்திரன் பேசியதாவது:-
பஞ்சாயத்து ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிறிய அளவில் கூட மதிப்பில்லை ஆகையால் வட்டார வளர்ச்சி நிதியில் ஒதுக்கபட்ட ரூ.8 லட்சத்து 88 ஆயிரம் ஓதுக்கபட்ட 453 நெம்பர் கொண்ட தீர்மானத்தை நிராகரித்து ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கையொழுதிட்ட வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி அனைத்து கவுன்சிலர்களும் கையொழுத்திட்டு தீர்மானத்தை நிராகரித்தனர். பஞ்சாயத்துக்கு ஒதுக்கிய நிதியை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றி தீர்மானத்தை நிராகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றபட்டது. இதில் மற்ற அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
- நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் ஒரே மாதிரியான அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி கூச்சல் போட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் யாக ப்பன், ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய பாரபட்சமின்றி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் ஒரே மாதிரியான அளவில் நிதி ஒதுக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி கூச்சல் போட்டனர்.
துணைத்தலைவர் யாகப்பன், அனைத்து கவுன்சிலர் வார்டு பகுதி களுக்கும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் வகையில் ஒரேமாதிரியாக நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நெசவு தொழிலுக்கான கட்டிட ங்கள் பழுதடைந்து பாம்புகள், பல்லிகளின் புகலிடமாக புதர்மண்டி கிடக்கிறது. அதனை அகற்றி விடவேண்டும்.
நிலக்கோ ட்டை ஒன்றிய பகுதியில் உள்ள செங்கட்டாம்பட்டி கண்மாய் வழியாக சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய், குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய், கொங்கர் குளம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரப்புவதற்கு ஏதுவாக வைகை ஆற்று படுகையில் இருந்து புதிய கிளை வாய்க்கால் வெட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.
- கூட்டத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குண்டடம்:
ருத்ராவதி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மீனா கவுரி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள், துணைத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புது ருத்ராவதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரனுக்கு பேரூராட்சி சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ,அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்
புதுக்கோட்டை :
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுதாஅடைக்கலமணி மற்றும் துணைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவரஞ்சனி, பிரியங்கா, பழனியப்பன், வளர்மதி, பழனியாண்டி, ஆதிலட்சுமி, முருகேசன், மாணிக்கம், அடைக்கலமணி, அழகுரத்தினம், கல்யாணி, செந்தில் விஜயா, பழனிச்சாமி உள்ளிட்டோர் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக துரைசாமி என்பவர் அரசு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து எந்த ஒரு விபத்துகளும் இல்லாமல் நல்ல முறையில் வாகனத்தை இயக்கி பராமரித்து வந்ததற்காக ரூ.500 ஊக்கத்தொகையை தமிழக அரசின் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி சேர்மன் சுதா அடைக்கலமணி ஆகியோர் துரைசாமியிடம் வழங்கினர். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா அன்று துரைசாமி மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் சிறந்த ஓட்டுநருக்கான சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூடலூா் நகா்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
- காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
ஊட்டி:
கூடலூா் நகா்ம ன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்து க்கு நகராட்சித் தலைவா் பரிமளா தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் சிவராஜ், கமிஷனர் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:- காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அந்த பகுதியில் குடிநீா், மின்வசதி செய்து தரவேண்டும். மாக்கமூலா பகுதியிலுள்ள பொதுகிணறுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும். முதல்மைல், புறமணவயல், நேதாஜி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்து தரவேண்டும்.
நடுகூடலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. பல இடங்களுக்கு குடிநீா் வந்து சோ்வதில்லை. மங்குழியில் மழையில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்.
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏழுமுறம் பாலத்தை விரைவில் அமைத்துத் தரவேண்டும். யானைகள் நடமாடும் பகுதியான தொரப்பள்ளி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தொரப்ப ள்ளியிலிருந்து இருவயல் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்துத் தரவேண்டும். எஸ்.எஸ்.நகா் பகுதியில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, நடைபாதை அமைத்து தரவேண்டும்.
நகராட்சியின் சுகாதாரத் துறையில் செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பதில்லை. கூடலூா் பஸ் நிலையம் அருகில் கழிவறைகள் கட்ட வேண்டும். நகரில் குறுகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிா்க்க முறையான பாா்க்கிங் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.
விவாதத்தில், வெண்ணிலா(திமுக), இளங்கோ (திமுக), வா்கீஸ் (காங்), ஷகிலா (மு.லீக்), லீலா வாசு (சி.பி.எம்.), ராஜு(காங்), சத்தியசீலன் (திமுக), உஷா (திமுக), கௌசல்யா (திமுக), உஸ்மான் (காங்), அனூப்கான்(அதிமுக) ஆகியோா் பேசினா்.
- மாநகராட்சி இரண்டாவது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
- மண்டல குழு தலைவர் தலைமை தாங்கினார்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.ஜெயநிர்மலா தலைமை தாங்கினார். உதவி ஆணையர் அக்பர் அலி, உதவி செயற்பொறியாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர்கள் வி.சி.கே.பிரபாகரன், எல்.ஐ.சி. சங்கர், செந்தில் பஞ்சநாதன், சண்முகப்பிரியா, கதீஜா, லீலா, ரிஸ்வானா பானு, கீதா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகள், மராமத்து மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் இளநிலை பொறியாளர்கள் ராஜா, திவாகர், சுந்தரவடிவேல், ரவிக்குமார், சுகாதார அலுவலர் டேவிட், சுகாதார ஆய்வாளர் லோகேஷ், உதவி வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்