என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசுபள்ளி"
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக உள்ளனர்.
சுரண்டை:
சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடந்தது.
புதிய வகுப்பறை
மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றிய குழு துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன், நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பி ரமணியத்துரை வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மரக்கன்று நட்டு பேசினார்.அப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் இன்று இஸ்ரோ மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், உயரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டிடத்தை கட்டிக் கொடுத்த மனிதநேயமிக்க மாண வர்களை உருவாக்கி யதும் இதே அரசு பள்ளி தான். முதல்-அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைத்து பள்ளி சிறப்பாக செயல்படும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாதேவி, உறுப்பி னர்கள் காசிநாதன், பாக்கிய ராஜ் ,சரஸ்வதி, ஹரிஹரன் ஆகியோர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் சேர்ந்தமரம் கிளை தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதி வேச முருகேசன், வீரசிகாமணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு,பிரேம் குமார் உட்பட பொதுமக்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியை மதுமதிவதனா நன்றி கூறினார்.
- ஆத்தூரில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடைபெற்றது.
- தற்காப்புக் கலைப்பயிற்சியின் அவசியம் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
ஆத்தூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவின் பெயரில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூரில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் மாணவிகள் தாங்கள் வெளியே செல்லும் பொழுதும், வரும்பொழுதும் தங்களை தாமே தற்காத்துக் கொள்வதற்காக உரிய பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, எவற்றையும் எதிர்கொள்ளும் விதம், வகுப்பறையில் பாடங்களை உற்று நோக்கி கவனித்தல் போன்ற திறன்கள் வளரும் என்று தற்காப்புக் கலைப் பயிற்றுனர் வேல்முருகன் கருத்துக்கள் வழங்கி பயிற்சியினை மேற்கொண்டார்.
பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி முன்னிலையிலும் பயிற்சி நடைபெற்றது. தற்காப்புக் கலைப்பயிற்சியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் போது ஆசிரியர் புனிதா உடன் இருந்தார்.
- பழமை காலங்களில் சிலை உள்ளிட்ட பல்வேறு பழமை காலம் பற்றியும் என அறிவியல் தமிழ் என பல்வேறு வகை பற்றி கண்காட்சியில் கூறப்பட்டிருந்தது.
- இதனை அடுத்து பெற்றோ ர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பொருளாளர் என பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
மதுக்கூர்:
மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம் என அனைத்து வகை பாடங்களுக்கான பல்வகை கண்காட்சி அரங்குகள் அந்தந்த பாட ஆசிரியர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்த பல்வகை கண்காட்சியில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, தானியங்கி சாதனம் பற்றியும், தமிழில் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றி பல்வேறு பழமை காலங்களில் சிலை உள்ளிட்ட பல்வேறு பழமை காலம் பற்றியும் என அறிவியல் தமிழ் என பல்வேறு வகை பற்றி கண்காட்சியில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கோவிந்தராஜ், காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மைதிலி ஆகிய பட்டதாரி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏனாதி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இதனை அடுத்து பெற்றோ ர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பொருளாளர் என பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இதில் அத்திவெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசண்முகவேலன் உட்பட ஆசிரியர்கள், ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- ரூ.50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர மண்புழு உரக்கூடத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.
- மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், பொக்காபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள தேன்வளா்ப்பு பெட்டியின் பயன்பாடு குறித்தும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர மண்புழு உரக்கூடத்தின் செயல்பாட்டினையும், பாரத பிரதமரின் நுண்ணுயிா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் 100 சதவீதம் மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள நுண்ணு யிா்ப் பாசன கருவியின் செயல்பாடு களையும் விவசாயிகளிடம் கலெக்டர் அம்ரித் கேட்டறிந்தாா்.
முன்னதாக, மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.9.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டாா். பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு, மாணவ, மாணவா்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் ஐஸ்வா்யா, தோட்டக்கலை அலுவலா் அரவிந்த்,
உதவி மகளிா் திட்ட அலுலா் ஜெயராணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
- காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் நேற்று வெளி யிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் கடந்த மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ உயர்கல்வி தகுதிச்சான்றுகளுடன் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அறை எண்.632-ல் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.tiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். தாராபுரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாராபுரம் ஐந்து முக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.dharapuram@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.udumalpet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பல்லடம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்லடம் மங்கலம் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுலகத்திலும், temporaryteacher.palladam@gmail.com என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி வரை ஆகும். தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உடுமலை:
உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக கல்வி இணை செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தும் பொருட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள மைதானங்கள், முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் ராஜேந்திரா ரோடு, அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் புதர் மண்டிக்காணப்படுகிறது. கூடைப்பந்து மைதான தரைதளம் சேதமடைந்துள்ளது. தவிர இரவு நேரத்தில், விஷமிகள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து மது அருந்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாணவர்களுக்கு வசதிகள் செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், மைதானம் பராமரிப்பின்றி புதர்மண்டிக்கிடப்பதால் மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களுக்கு, பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
- அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம்.
- ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்த கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை 17ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் நிலையில் திருப்பூரில் விண்ணப்பித்த 474 அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரின் 13 ஒன்றியம் வாரியாக அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இதற்கான சிறப்பு பயிற்சி தொடங்கியது. ஜூலை 15 வரை நடக்கும் இப்பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகில் உள்ள பள்ளிகளில் பங்கேற்று பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
பிளஸ் 2 முடிவு வெளியான நிலையில் நீட் தேர்விற்கு, 20 நாட்களே உள்ளன. மிக குறுகிய காலத்தில் மாணவர்களை தயார்ப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில்ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகின்றன.
காலை 9:30 மணி முதல் மாலை 4:30மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். அதிக மதிப்பெண் பெற இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டம், முந்தைய நீட் தேர்வு வினாத்தாட்களை ஒப்பிட்டு தமிழ், ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்