search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசங்கர்"

    • மகளிரை, நடத்துநர் ஓட்டுநர்கள் அதிக மரியாதையுடன் நடத்த வலியுறுத்தல்.
    • பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைச்சர் அறிவுரை

    அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் கூறியுள்ளதாவது:

    தமிழக அரசின் கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் 173 கோடி மகளிர் பயணம் மேற் கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர்கள் இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க மகளிரை அதிக மரியாதையுடன் நடத்த வேண்டும். 


    மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படா வண்ணம், பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பேருந்துகளை இயக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க வேண்டும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுடன் Whatsapp Group-ஐ ஏற்படுத்த வேண்டும். நவ திருப்பதி போன்ற சுற்றுலா தொகுப்பை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் எல்லையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக விரைவாக அனுப்பி வைக்க நடவடிக்கை.
    • மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ளலாம்.

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப் படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது.

    தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்கள் (உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும்) பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை / தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் 03/08/2022 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள அருகிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கவும். பொது மக்கள் திருச்சி/மதுரை – சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பேட்டாவை நிர்ணயம் செய்ய போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டன.
    • சாதாரண பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்ய அனுமதித்ததால், பேட்டா குறைந்தது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 12ந் தேதி நடைபெற்ற போது, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

    அதன் அடிப்படையிலும், முதலமைச்சரின் அறிவுரையின் பேரிலும், சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×