என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருத்துவ காப்பீடு"
- நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
மயிலாடுதுறை மாவ ட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையார், குத்தாலம் ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு மருத்துவ மருத்துவமனையிலும், கொள்ளிடத்தில் விஷ்னு மருத்துவமனை, மயிலாடுதுறையில் சாந்தி, கிருஸ்ணா, ராம் எலும்பு முறிவு மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கூர், திருவெண்காடு, குத்தாலம், கொள்ளிடம், மணல்மேடு ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,
கொள்ளிடத்தில் சாய் ஸ்கேன் சென்டர், மயிலாடுதுறையில் அபினி மற்றும் மயூரா, ஆகிய 3 இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில்; பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7.5.2021 முதல் இன்று வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ் 97 நபர்களுக்கும், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 1702 நபர்களுக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 169 நபர்களுக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 178 நபர்களுக்கு என 2146 நபர்களும், 4164 நபர்கள் பொது சிகிச்சை என மொத்தம் 6310 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 149 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் நடந்த முகாமில் 74 பேருக்கும், காங்கயத்தில் நடந்த முகாமில் 149 பேருக்கும் புதிதாக மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் 60 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை எடுக்காதவர்கள் ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்) ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73730 04271 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 அரசு ஆஸ்பத்திரிகள், 26 தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய வற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளி களுக்கான உரிய சிகிச்சை கள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை, புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2021 ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல், தற்போது வரை 1,268 பேருக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ்) 3,893 பேர், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 1,633 பேர், புற்றுநோய் சிகிச்சை 381 பேர், கல்லீரல் நோய் சிகிச்சை 82 பேர், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 2,894 பேர், தண்டுவடம் சிகிச்சை 106 பேர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை 479 பேர், கண்நோய் அறுவை சிகிச்சை 1,946 பேர், என மொத்தம் 12 ஆயிரத்து 682 பேருக்கு, ரூ. 17 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 314 மதிப்பில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில் மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
- புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?
முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.
இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.
இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.
எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.
கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.
வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூர் அருகே பேரண்டபள்ளி ஊராட்சியில், பயனாளிகளுக்கு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரண்டபள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நஞ்சப்பா முன்னிலை வகித்தார்.
இதில் வார்டு உறுப்பினர்கள் தேன்மொழி சங்கர், முகமது அலி, ஊராட்சி செயலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது.
- திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
- அடித்தட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது.
திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சை பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார்.
திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தினமாக இது அமைகிறது என்றும், இந்த நடவடிக்கை பாலியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்
பின்னர் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
- பொது விநியோக திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிறைவு உரையாற்றினார்.
கூட்டத்தில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் கூட்டுறவு துறை மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கு துறை ஆகிய இரண்டு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுவதால் பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
பொருள்களின் எடை குறைகளை தவிர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் உறைகளில் அடைத்து தரவேண்டும். பொதுவிநியோகத் திட்ட ஊழியர்களுக்கு முழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதில் உள்ள சிக்க ல்களை நீக்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவன ங்களில் பணியாற்றும் ஊழிய ர்களுக்கு கருணை ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கூட்டுறவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பராமரிக்கும் முறையினை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சித்ரா, சிஐடியு மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன், கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் சாந்தகுமாரி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் விஜயன் வரவேற்றார். இறுதியில் மாநில குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்