என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓட்டம்"
- இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
- திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Congratulations to Deepthi Jeevanji for her spectacular Bronze medal win in the Women's 400M T20 at #Paralympics2024! She is a source of inspiration for countless people. Her skills and tenacity are commendable. #Cheer4Bharat pic.twitter.com/QqhaERCW0q
— Narendra Modi (@narendramodi) September 3, 2024
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் "பாராலிம்பிக்ஸ் 2024 ல் பெண்கள் 400 மீட்டர் டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். அவர் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை என பதிவிட்டுள்ளார்.
Congratulations to Deepthi Jeevanji on winning bronze medal in women's 400m - T20 event at the Paris 2024 Paralympics. She has demonstrated resilience and dedication in the face of several adversities. I wish her still higher achievements in the future.
— President of India (@rashtrapatibhvn) September 3, 2024
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் "பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ - டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். பல துன்பங்களை எதிர்கொண்டாலும் அவர் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இன்று நடந்த பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- எந்த உடற்பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும்?
- தசைகளின் செயல்பாடுகள்தான் முக்கியமானது.
உடற்பயிற்சி செய்பவர்கள் மத்தியில், 'எந்த உடற்பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும்?' என்ற கேள்வி அடிக்கடி எட்டிப்பார்க்கும். சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்பதை அறிந்திருக்கவும் செய்வார்கள். அதேவேளையில் சில பயிற்சிகள் ஏன் மற்ற பயிற்சிகளை விட அதிக கலோரிகளை எரிக்கின்றன என்பதை புரிந்து கொள்வது அவசியம்.
இந்த விஷயத்தில் தசைகளின் செயல்பாடுகள்தான் முக்கியமானது. அவை எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறதோ அதற்கேற்பவே பலன் கிடைக்கும். அத்துடன் வயது, பாலினம், உடல் எடை, உடல் அமைப்பு, மருத்துவ ரீதியான காரணங்கள் உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமானது.
அதிக கலோரிகளை எரிப்பதையே நோக்கமாக கொண்டவர்கள் ஆரம்பக்கட்டத்தில் ஓட்டப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது சரியானது. ஓடுவது இதயத்துடிப்பை திறம்பட உயர்த்த உதவும். தசை குழுக்களின் செயல்பாட்டையும் தூண்டிவிடும். அதனால் கலோரிகளை எரிக்கும் விஷயத்தில் ஓட்டம் சிறந்த தேர்வாக அமையும். சராசரியாக, ஒரு ஓட்டப்பந்தய வீரர் நிமிடத்திற்கு 12 கலோரிகளை எரிக்கிறார். நீங்கள் ஓடும் வேகம், தூரம், நிலப்பரப்பு ஆகியவற்றின் தன்மைக்கு ஏற்ப கலோரிகளை இன்னும் கூடுதலாக எரிக்க முடியும்.
ஓட்டப்பயிற்சியை விரும்பாதவர்கள் அதை விட எளிய பயிற்சியான நடைப்பயிற்சியை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு அடுத்தக்கட்டமாக நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து செய்யும் பயிற்சிகள், யோகா உள்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டும் கலோரிகளை எரிக்கலாம்.
எந்தெந்த பயிற்சிகளை மேற்கொள்வது எவ்வளவு கலோரிகளை எரிக்க உதவும் என்று பார்ப்போம்.
மிதமான உடல் செயல்பாடு (ஒரு மணி நேரத்திற்கு)
ஸ்ட்ரெட்சிங்: 180 கலோரிகள்
நிதானமாக பளு தூக்குதல்: 220 கலோரிகள்
நிதானமாக சைக்கிள் ஓட்டுதல்: 290 கலோரிகள்
நடனம்: 330 கலோரிகள்
கோல்ப்: 370 கலோரிகள்
தீவிரமான உடல் செயல்பாடு (ஒரு மணி நேரத்திற்கு) கூடைப்பந்து விளையாடுதல்: 440 கலோரிகள்
பளு தூக்குதல் : 440 கலோரிகள்
வேகமான நடைப்பயிற்சி: 460 கலோரிகள்
நீச்சல்: 510 கலோரிகள்
10 மைல் அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் சைக்கிள் ஓட்டுதல்: 590 கலோரிகள்
ஓடுதல்: 590 கலோரிகள்
- திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது.
- சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி, கால்கோல் விழா ஆகியவற்றை ஒன்றிணைத்து 'வெல்லும் ஜனநாயக மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா, தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைவதால் இதனை எழுச்சியுடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் திருமாவளவன் செய்து வருகிறார். சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்கிறார்கள்.
மாநாட்டையொட்டி சமத்துவச் சுடர் ஓட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு திருமாவளவன் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடக்கும் சுடர் ஓட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் த.பார்வேந்தன் தலைமை தாங்குகிறார். 4 நாட்கள் சுடர் ஓட்டம் ஓடி மாநாட்டு பந்தலில் அதனை திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார்.
இதனை வழக்கறிஞர்கள் பார்த்திபன், வேல்முருகன், காசி, சொக்கலிங்கம், உதயகுமார், சத்தியமூர்த்தி, கராத்தே பாண்டியன், தினேஷ், திலீபன், செஞ்சுடர் ராமதாஸ், பிரபுவளவன், செல்வகுமார், சரிதா, அன் பழகன், முருகையன், ரத்தினவேல், மணிமாறன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
- கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
- போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை:
சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.
முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.
4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
- பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
- மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நல துறை சார்பில் நடந்த பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சமூகநல அலுவலர் ரவிபாலா தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது. இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.
- இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குழந்தை மற்றும் கணவருடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அனைவரும் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
அப்போது அதிகாலை 4 மணி அளவில் இளம்பெண் தனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து இளம் பெண்ணின் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தனது மகளை மீட்டு தரும்படி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
- கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டது.
- மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பெரியோர் முன்னிலையில் நிச்சயம் செய்து வைத்தனர். ஆனால் இளம்பெண்ணுக்கு அந்த வாலிபரை பிடிக்கவில்லை.
சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் படித்த கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் மகள் திரும்பி வராததால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
வடக்கிப்பாளையம் அருகே உள்ள புதுகாலனியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிளஸ்-1 மாணவியை தேடி வருகின்றனர்
- குடிபோதையில் படுத்திருந்தவரை தாக்கியதால் பழிக்குப்பழி வாங்கினார்
- தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கோவையில் தங்கியிருந்து ஆடிஸ் வீதியில் டீக்கடை நடத்தி வந்தார். பகுதிநேரமாக சமையல் காண்டிராக்ட் வேலையையும் எடுத்து செய்து வந்தார்.
நேற்று காலை ராஜேஷ் ஆடிஸ்வீதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை ரேஸ்கோர்ஸ் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி னர். விசாரணையில் ராஜேசை அவரது நண்பரே கொலை செய்துள்ள விவரம் தெரியவந்தது. ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூருக்கு சமையல் வேலைக்கு சென்று வந்தார். பின்னர் வேலையாட்களுக்கு சம்பள பணத்தை பிரித்து கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் ஒன்றாக மதுபானம் அருந்தி உள்ளனர். தொடர்ந்து ராஜேஷ் மட்டும் ஆடிஸ் வீதிக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது அங்கு உள்ள பிளாட்பார பெஞ்சில் பென்னி என்பவர் படுத்திருந்தார். அப்போது ராஜேஷ், இது எங்களின் இடம். நீ ஏன் இங்கு வந்து படுத்து இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் பென்னிக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று எச்சரித்து விட்டு டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு மது குடித்து உள்ளார்.
அப்போது அவர் தன்னை தாக்கிய ராஜேஷை கொலை செய்வது என்று முடிவெடுத்தார். இதற்காக ஒரு உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆடிஸ் வீதிக்கு புறப்பட்டு வந்தார்.
அங்கு உள்ள பிளாட்பார பெஞ்சில் ராஜேஷ் குடிபோதையில் படுத்திருந்தார். அவரை பென்னி உருட்டு க்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்தில் பலியானார். ராஜேசும்,
அதன்பிறகு பென்னி உருட்டுக்கட்டையை தூர வீசி எறிந்துவிட்டு கோவை ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பி சென்று உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.கோவை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் பென்னி கேரளாவுக்கு தப்பி செல்வதை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.
தொடர்ந்து பென்னியின் பின்புலம் குறித்து ஆடிஸ் வீதி பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம், நெல்லிப்பாடா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
கோவையில் சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவரை படுகொலை செய்துவிட்டு, கேரளாவில் பதுங்கி உள்ள பென்னியை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன்ஒருபகுதியாக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அங்கு முகாமிட்டு கொலையாளிக்கு வலைவிரித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- மகளுக்கும் திருமணமாகி பாட்டி ஆனவர் 30 வயது வாலிபருடன் கள்ளக்காதல்
- கணவருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் 42 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த திருமண மாகாத 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமை யில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். பெண் அடிக்கடி அவரது கள்ளக்காதலனுடன் செல்போன் மூலமாக பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணின் கணவர் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரும ணமாகாத வாலிபருடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகின்றனர்.
மாயமான பெண்ணின் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்தநிலையில் அந்த பெண், வாலிபர் ஒருவருடன் ஓட்டம் பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. மாநாடு பிரச்சார வாகனம்- தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
- அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரில் அதிமுக சார்பில் வரும் 20-ம்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் வரும் 20-ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாநாட்டின் டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனமும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டமும் சென்னையிலிருந்து துவங்கி மாநில முழுவதும் சுற்றி வந்து நாளை (19ம்தேதி) மதுரை சென்றடைகிறது. இந்த மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனம் மற்றும் மாநாடு தொடர் ஜோதி ஓட்டம் நேற்று பெரம்பலூர் வந்தது.
பெரம்பலூரில் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சாரம் வாகனம் மற்றும் ஜோதி ஓட்டம் நகர் முழுவதும் வலம் வந்தது. முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கணவர் இளம்பெண்ணிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்தார்.
- மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை,
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கணவருடன் கோவை விளாங்குறிச்சியில் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் தர்மபுரியில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இளம்பெண் அவரது கணவருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான 35 வயது கட்டிட தொழிலாளி வந்து சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கும், கட்டிட தொழிலாளிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் கட்டிட தொழிலாளியை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது கணவரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
நீண்ட நேரம் ஆகியும் இளம்பெண் திரும்பி வராததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்