search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி அமாவாசை யாகம்"

    • உலக மக்களின் நலன் வேண்டி ஆனி மாத அமாவாசை யாகபூஜை நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி ஆனி மாத அமாவாசை யாகபூஜை நடைபெற்றது.

    இந்த யாக பூஜையை சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது.

    இந்த பூஜையில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×