search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டு"

    • ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன் லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே வில்லியனூர் தட்டாஞ் சாவடிபகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வில்லியனூர் அருகே உள்ள பத்துக்கண்ணு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 24) என்பவர் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்க வந்தார். அப்போது அவர் கூடுதலாக ஒரு சாம்பார் பாக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன்லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதலாக மாறியது.

    அப்போது ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் கையில் வைத்திருந்த அரிவாளால் அஜித்குமாரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஓட்டலில் திரண்டு இருந்த அஜித் குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
    • இருதரப்பு புகாரின் அடிப்படையில் தகராறுக்கான காரணம் குறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 46), வெல்டர். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 37). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார்., இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், கொதிக்கும் எண்ணையை ஸ்ரீதேவி மீது சுந்தரமூர்த்தி ஊற்றினார்., துடிதுடித்த தாயை மீண்டும் தாக்க முயற்சி செய்த தந்தையை ஆத்திரமடைந்த 16 வயது மகள் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து இருதரப்பு புகாரின் அடிப்படையில் தகராறுக்கான காரணம் குறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • எங்கள் குடும்ப பிரச்சினை என்று கூறி அண்ணன் தம்பியான சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன்ஆகிய இருவரும் கத்தியால் ராஜேஷ் தலையில் தாக்கினார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    ஆவடி:

    திருநின்றவூர் நடுகுத்தகை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக நவமணி இருந்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் நேற்று இரவு நடுகுத்தகை காந்தி நகர் அருகே அண்ணன்-தம்பி சண்டையை சமரசம் செய்ய முயன்றார். வாக்குவாதம் ஏற்பட்டு இது எங்கள் குடும்ப பிரச்சினை என்று கூறி அண்ணன் தம்பியான சுந்தரமூர்த்தி (வயது 25), சவுந்தரராஜன் (வயது 24) ஆகிய இருவரும் கத்தியால் ராஜேஷ் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜேசை அருகில் உள்ளவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    • ஆனந்தராஜ் அரிவாளால் அக்பர் அலியை வெட்டியதாக தெரிகிறது.
    • தலைமறைவான லோகப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள தத்துவாஞ்சேரி காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 50). விவசாயி. இவரது சகோதரர் ரொஜப்தீன்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாதபுரம் பழைய தெருவை சேர்ந்த லோகப்பனுக்கும் (52) முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சிதம்பரநாதபுரம் பகுதியில் உள்ள பயிரை பார்வையிடுவதற்காக நேற்று மாலை அக்பர் அலி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது லோகப்பன், அவரது மகன் அரவிந்தன், லோகப்பனின் தம்பி ஆனந்தராஜ் ஆகியோர் அக்பர்அலியை மறித்தனா். பின்னர் லோகப்பன் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோர் அக்பர்அலியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் ஆனந்தராஜ் அரிவாளால் அக்பர்அலியை வெட்டியதாக தெரிகிறது.

    இதில் அக்பர்அலி படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ்(48), அரவிந்த்(28) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான லோகப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைப்பு
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே பனங்கால விளை, மல விளை, பகுதியை சேர்ந்த வர் ஜெஸ்டின் ஜெயக் குமார் (வயது 42), பால் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு கவிதா (40) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 7 வகுப்பும், 5 வகுப்பும் படித்து வருகிறார் கள்.

    ஜெஸ்டின் ஜெயகுமா ரின் தந்தை கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயினால் நடக்க முடி யாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஜெஸ்டின் ஜெயகுமார் மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இவரது மனைவி கவிதா குலசேகரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று இருந்தார். திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    உடனே அக்கம்பக்கத்தி னர் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் கயிற்றி னால் தூக்கில் தொங்கியதை பார்த்து கவிதா அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே வீட்டின் அருகில் உள்ளவர்கள் உதவி யுடன் கீழே இறக்கி பார்க்கும் போது இறந்தது தெரிய வந்தது. இதுபற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்கு பதிவு செய்து ஜெஸ்டின் ஜெயகுமார் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத் தார்.

    • தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளிக்கு அரிவாள் வெட்டு.
    • இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் வசிக்கும் நெசவு தோழிலாளி கங்காதரன் (வயது30). இவருடைய தங்கையை தாரமங்கலம் சக்கரை விநாயகர் கோவில்

    பகுதியை சேர்ந்த சந்தான கோபால் (38) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து

    வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சந்தான கோபால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    மேலும் பணம் வாங்கி வரச்சொல்லியும் தொந்தரவு செய்து வந்துள்ளார். கங்காதரன் இதனை கண்டித்து வந்த தால் ஆத்திரம் அடைந்த சந்தானகோபால் நேற்று மதியம் கங்காதரன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி, பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து கங்காதரன் வெட்டி யுள்ளார்.

    கங்காதரன் அங்கி ருந்து தப்பி ஓடிய போது அவரை தொடர்ந்து விரட்டி சென்று வெட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சந்தானகோபால் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி கங்காதரனிடம் வாக்கு மூலம் பெற்று தாரமங்கலம் போலீசார் சந்தானகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடும்ப தகராறில் மைத்துனரை அரிவா ளால் வெட்டிய சம்பவம்

    தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
    • குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

    நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • இரு தரப்பைச் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு
    • தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள கீழ மணக்குடி யைச் சேர்ந்தவர் விக்டர் (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் 

    அப்போது அங்கு வந்த சார்லஸ் (47), ஜான் பிரிட்டோ (26) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தகறாறு செய்து உள்ள னர். மேலும் அரிவா ளால் விக்டரின் இடது கன்னத்தில் வெட்டினர். இதை தடுக்க வந்த ஜோசப் பிராங்கோ (30), சகாயராஜ்(57) ஆகியோரும் அரிவாளால் வெட்டப்பட்டதாக தென் தாமரை குளம் போலீ சில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்களுடன் வந்த சிலர் தனது தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் விக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த சகாய மிதின்மோன்( 18) என்பவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் நண்பர்களு டன் விக்டர் வீட்டு பக்கம் சென்ற போது சுந்தர்( 42), சகாயராஜ், பிராங்கோ, ஜோசப் ஆன்றணி (50), தாசன் (45) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த விக்டர், ஜோசப் பிராங்கோ, சகாயராஜ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யிலும், சகாய மிதின் மோன் கன்னியாகுமரி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

    இது குறித்து தென் தாமரை குளம் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பபையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடந்த 18-ந் தேதி அஜின் (22) என்பவர் வேகமாக பைக் ஓட்டி வந்து, சகாய ஜோசப் (57) என்பவர் மீது மோதிய தாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • இரு நபர்களுக்கும் சொத்து தகராறு பிரச்சினை நிலுவையில் உள்ளது.
    • செல்வகுமாரை அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    அம்மாபேட்டைஅருகே உள்ள புலவர் நத்தம், குடியான தெருவை சேர்ந்த வர் ஜவகர் என்பவரது மகன் ராஜ்மோகன் (39).

    இவருக்கும்அவரது உறவினரான அவளிவ நல்லூரை அடுத்த சடையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்ப வரது மகன் செல்வ க்குமாருக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதன் காரணமாக ராஜ்மோகனை, செல்வக்குமார் கடத்தி வந்து அவளிவநல்லூர் கடைத்தெருவில் வெட்டியு ள்ளனர்.

    இதனால் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் துடிதுடித்து இறந்துள்ளார்.

    இறந்த ராஜ்மோகன் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்காக அனுப்பி வைத்து தப்பி ஓடிய செல்வகுமாரை அம்மாபேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அரிவாளால் வெட்டி விட்டு தப்பியதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.
    • அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38) கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (24). இவர்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்த–ன்று அய்யப்பனை, ஞான–பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான செல்வமணி (26), முருகதாஸ் (23) பாலகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.

    அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானபிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகதாஸ், செல்வமணியை தேடி வருகின்றனர்.ள

    • ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வி.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினுபிரியா (வயது25). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால் வினுபிரியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அசோகா. சம்பவத்தன்று அசோகா, வினுபிரியா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

    அதன் பின் அசோகாவின் கணவர் ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரிவாளால் வினுபிரியாவை வெட்டினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயம் அடைந்த வினுபிரியா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ராமச்சந்திரன், அவரது மனைவி அசோகா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    ×