search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடங்கியது.

    இந்நிறுவன இயக்குநா் முனைவா் வி. சுப்பிரமணியனின் 120 -வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக இந்த உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி இன்று வரை நடத்தப்படுகிறது. நிகழாண்டு சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே, சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 அரங்குகள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தொழில்முனைவோராகி வெற்றிகரமாகச் செயல்படுபவா்களின் அரங்குகளாகும்.

    மேலும், இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவையும் காட்சிப்படு த்தப்பட்டுள்ளன.

    இந்தக் கண்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகச் செயலா் அனிதா பிரவீன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேட்டையும், சிறுதானிய பதப்படுத்தும் முறைகள் பற்றிய கையேட்டையும் வெளியிட்டாா்.

    இந்நிகழ்வில் மலேசியா டெய்லா்ஸ் பல்கலைக்கழகத்துடன் கல்விசாா் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் காவேரி ஸ்மாா்ட் புட் மற்றும் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தென்னை மதிப்பு கூட்டுப்பொருட்களுக்கான தொழில்நுட்பங்களின் தொகுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மேலும், இந்நிறுவனத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன், ஈச்சங்கோட்டை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் வேலாயுதம், குமுளூா் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ப ராஜ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) மருதுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    இந்தக் கண்காட்சியைப் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா். இதேபோல, விவசாயிகள், தொழில்முனைவோா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோா் இன்று பாா்வையிட்டனர். மேற்கண்ட தகவலை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் தெரிவித்து உள்ளார்.

    • திருச்சி என். ஐ. டி. யில் இன்று கலாச்சார போட்டி நடைபெற உள்ளது.
    • மாணவர்களுடன் கமலஹாசன் கலந்துரையாடல்

    திருச்சி:

    திருச்சி துவாக்குடி எ.ன்ஐ.டி.யில் நிட்பெஸ்ட் 23 என்ற தலைப்பில் பல்வேறு துறை சார்ந்த மாணவர்களுக்கிடையே கலாச்சார போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது தனது 63 ஆண்டுகால திரைத்துறை அனுபவங்கள், சாதனைகள், அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி என்.ஐ. டி. இயக்குனர் ஜி. அகிலா, டீன் என். குமரேசன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

    • குறுவட்ட அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது
    • மேலணிக்குழி‌ அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் 19, 17, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வளையபந்து, பூப்பந்து, மேஜைப்பந்து போட்டிகள் மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) புகழேந்தி தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் பூப்பந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மேலணிக்குழி அரசு பள்ளி முதலிடமும், கங்கை கொண்ட சோழபுரம் பள்ளி இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், கங்கை கொண்ட சோழபுரம் பள்ளி 2-வது இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி பள்ளி முதலிடமும், வாணவநல்லூர் நடுநிலைப்பள்ளி 2-வது இடமும் பிடித்தன.

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
    • போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 17-ந்தேதி பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப் பெற்றுள்ளது.

    இதன்படி 2022ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் 17-ந்்தேதி பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

    அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும்மா ணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம்பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    மேலும்அ ரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர்எ னத்தெரிவு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.

    போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.போட்டிகள் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளன.

    பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கும் வருகையை உறுதிசெய்திடுதல் வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

    பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து, கால்பந்து, பூப்பந்தாட்டம், ஹேண்ட் பால், எறிபந்து, கோ-கோ, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், கபடி உள்ளிட்ட போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியினை பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பரமேஷ்குமார், பொருளாளர் செல்லப்பிள்ளை, துணை செயலாளர் பாஸ்கர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் முதலிடம் பிடித்த அணிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மேற்கண்ட விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

    • அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகள், தொடங்கியது.
    • கோகோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின் போது, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது

    அரியலூர்,

    அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே முதல் முறையாக விளையாட்டுப் போட்டிகள், தொடங்கியது.

    கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், துணை முதன்மையர் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற இந்த போட்டியை தலைமை விடுதிகாப்பாளரும், அரசு மருத்துவருமான கொளஞ்சிநாதன் தொடக்கி வைத்தார்.

    கோகோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின் போது, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி விளையாட்டு பிரிவு மருத்துவர் ராஜேஷ்கண்ணா செய்திருந்தார்.

    • தேச ஒற்றுமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு போன்றவற்றை நாடு முழுவதும் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    இதனால் இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், தேச ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திர நாளில் நினைவு கூறும் வகையில் பொது மக்களுக்கு பாதுகாப்பு குறித்தும், தேச ஒற்றுமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று ெரயில் நிலையத்திலிருந்து மாரத்தான் மூலம் தேசிய ஒற்றுமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கி தேசிய ஒற்றுமை குறித்த மாரத்தான் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க விளையாட்டு வீரர்கள் 40 பேர் பங்கேற்று ஜங்ஷன், வக்கணம்பட்டி, கோடியூர், இடையம்பட்டி வழியாக மீண்டும் ெரயில் நிலையம் வந்தடைந்து மாரத்தான் பேரணியை நிறைவு செய்தனர்.

    மேலும் இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியின் போது ெரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், டிஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், அசோக் குமார் உள்ளிட்ட ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றது.
    • 29 அரசு பள்ளிகளின் மாணவியர் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி பொன்னமராவதி வட்டார அளவிலானஅரசு பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப்போட்டிகள் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியை கி.நிர்மலா தலைமைவகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் ராமதிலகம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி காளிதாஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு ஆகியோர் போட்டியை தொடங்கிவைத்தனர்.

    பயிற்சியாளர் முகமது இக்பால் போட்டியை வழிநடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்மணி, கங்காதேவி மற்றும் வட்டார பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டியை ஒருங்கிணைத்தனர். போட்டியில் பொன்.புதுப்பட்டி, வார்ப்பட்டு, ஆலவயல், மேலைச்சிவபுரி உள்ளிட்ட 29 அரசு பள்ளிகளின் மாணவியர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியை சோம.நாராயணி நன்றி கூறினார்.

    • மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தருவைக்குளம் புனித மிக்கேல் ஆங்கில பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்ற தலைவர் அனிட்டன் நிச்சய பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளையும், மன்ற செயலாளர் செல்வசேகர் மெடல்களையும், மன்ற பொருளாளர் தேவதிரவியம் சான்றிதழையும் வழங்கினர்.

    விழாவில் மன்ற துணை செயலாளர் நீக்குலாஸ், துணை தலைவர் வில்சன் மற்றும் ராஜன், பேட்ரிக், பாக்கியம், ஆலோசனை மரியான், ராஜேந்திரன் மற்றும் காமராஜர் நற்பணிமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், லாரன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும்.
    • புத்தக கண்காட்சியில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் புத்தக திருவிழா தொடங்கியது. கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா வரவேற்றாா். இந்த புத்தகத் திருவிழாவை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோரின் முன்னிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:- சென்னையில் மட்டும் பபாசி புத்தகக் கண்காட்சி நடைபெற்றால் போதாது. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, ரூ.5.60 கோடியும் ஒதுக்கியுள்ளாா்.

    நாள்தோறும் காலை 10 மணிக்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சியில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கண்காட்சிக்காகப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாசிப்பு பழக்கம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. எனவே, புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர்கள் சண் .ராமநாதன் (தஞ்சை), சரவணன் (கும்பகோணம்), துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து, பபாசி தலைவர் வயிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிலம்பம் மற்றும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில். நடைபெற்ற காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    தலைவர் அய்யாசாமி தலைமைதாங்கினார். நிர்வாக குழு உறுப்பி னர் நாகராஜன் முன்னிலைவகித்தார். பள்ளியின் மேலாளர் ரவீந்திரன் ஹவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்துறை பாண்டியன் கலந்துகொண்டு கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய தொண்டினை விளக்கினார்.

    சிலம்பம் மற்றும் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதுகுளத்தூர் பேரூராட்சி உதவி சேர்மன் வயணப்பெருமாள் பரிசுகளை வழங்கினார்.

    முடிவில் தலைமை ஆசிரியை அன்பு கனிமோஸஸ் நன்றி கூறினர்.

    • பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன
    • பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.கடந்த 14 நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வந்த விழிப்புணர்வு போட்டியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை எவ்வாறு பிரிப்பது, பிரித்த குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

    விழிப்புணர்வு போட்டியில் கலந்து கொண்டு வென்ற மாணவ , மாணவியர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு நகர்மன்றத் தலைவர் ஆனந்த் சான்று மற்றும் பரிசுகளை வழங்கினார்.நகராட்சி ஆணையர் லீமாசைமன், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×