search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில்"

    • பெங்களுர்-ராமேசுவரம் ெரயில் பரமக்குடி, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
    • ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள ஏராளமானோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.ராமேசுவரம் முதல் ஹூப்ளி வரை இயக்கப்படும் வாராந்திர ெரயில் (ெரயில் எண்.07355) தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக சென்று இறுதியாக ஹூப்ளி ெரயில் நிலையத்தை அடைகிறது.

    அவ்வாறு செல்லும் போது பெங்களூரில் உள்ள கார்மேலராம் மற்றும் தமிழ கத்தில் பரமக்குடி, சிவகங்கை ஆகிய ெரயில் நிலை யங்களின் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் அங்கு பணிபுரியும் தென் மாவட்ட பயணிகள் மிருந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஓசூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்வதால் அங்கிருந்து கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள், ெரயில்கள் இல்லாததால் பெங்களூர் பனஸ்வாடி, எஸ்வந்த்பூர் ெரயில் நிலையங்களுக்கு சென்று அதன்பிறகு கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் ெரயில் நிலையங்களுக்கு வர வேண்டி உள்ளது. இதன் காணமாகவும், பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

    பனாஸ்வாடி, எஸ்வந்த் பூர் ெரயில் நிலையங்களில் இருந்து மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் 3 ெரயில் நிலையம் செல்வதற்கு பயணிகள் ெரயில் சரியான நேரத்திற்கு இல்லை.

    ஓசூரில் இருந்து காலை 9 மற்றும்9½ மணி அளவில் 16212/06592 வண்டிகள் கார்மேலராம் வழியாக பனாஸ்வாடி, எஸ்வந்த்பூர் செல்கின்றன. ஆனால் ஹூப்ளி வாராந்திர ெரயில் ஓசூர் வரும்போது காலை 9 மணி அளவில் வருவதால் பயணிகள் ெரயிலை ஓசூரில் இறங்கி கன்டோன்மென்ட், கார்மலெராம், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள் பயணிகள் ெரயிலை பிடிக்க முடியவில்லை.

    அதேபோல் ஹுப்ளியில் இருந்து ராமேசுவரம் வரும்போது மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் பகுதி மக்கள் வாராந்திர ெரயிலை பிடிக்க எஸ்வந்த்பூர், பனாஸ்வாடி ெரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    சரியான நேரத்திற்கு இந்த ெரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ெரயில் குறித்த நேரத்தில் இல்லை. கார்மேலராம் ெரயில் நிலையத்திலிருந்து காலை 9 மணி அளவில் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்திற்கு சென்று ராமேசுவரம்- ஹூப்ளி வாராந்திர ெரயிலை பிடிக்க 3 மணி நேரம் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

    ஆதலால் மெஜஸ்டிக் மற்றும் கண்டோன்மென்ட், கார்மேலராம் ெரயில் பயணிகளுக்காக ராமேசுவரம்-ஹூப்ளி ெரயிலை கார்மேலராம் ெரயில் நிலையத்தில் நிறுத்தி சென்றால் தமிழ்நாடு மற்றும் பெங்களூர் பயணிகள் பயனடைவார்கள். ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    ெரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ெரயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த தகவலை சேலம்

    ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தை அமாவாசையையொட்டி மதுரை-காசிக்கு ஜனவரியில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • நபருக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம், பயண சீட்டுகளை www.ularail.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

    மதுரை

    தை அமாவாசை அன்று காசியில் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்வதற்காக மதுரையில் இருந்து சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ெரயில் மதுரையில் இருந்து ஜனவரி 16-ந்தேதி புறப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் 19-ந் தேதி திரிவேணி சங்க மத்தில் புனித நீராடி, அலோபிதேவி சக்தி பீடம் தரிசனம் செய்யலாம்.

    20-ந்தேதி கங்கையில் புனித நீராடி காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி சக்தி பீடத்தை தரிசனம் செய்யலாம். மாலையில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 21-ந்தேதி கயாவில் முன்னோருக்கு பிண்டபூஜை செய்து, மங்கள கவுரி சக்தி பீடத்தை தரிசிக்கலாம்.

    23-ந்தேதி காமாக்யா தேவி சக்திபீட தரிசனமும், 25-ந்தேதி கொல்கத்தா காளிதேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேசுவரர் தரிசனமும், 26-ந்தேதி ஒடிசா பூரி கொனார்க் சூரியகோவில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர், பிமலாதேவி சக்தி பீடம் தரிசனமும் முடித்து 28-ந்தேதி சுற்றுலா ெரயில் மதுரை திரும்புகிறது.

    ெரயில் கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் பஸ் வசதி ஆகியவை உள்பட நபருக்கு ரூ.21 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண சீட்டுகளை www.ularail.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 73058 58585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது.
    • ராமேசுவரத்தில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரை

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று ராமேசுவரம் சென்றார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி செலவில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள், ராமேசுவரம் -தனுஷ்கோடி புதிய ரெயில் பாதை திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமேசுவரம் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் தொடங்கும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்ததாரர் வரை படங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ராமேசுவரம் போன்ற பெரிய சுற்றுலா தலத்தில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடுக்கு தனித்தனி முனையங்கள் அமைய உள்ளன. அங்கு விசாலமான வாகன நிறுத்துமிடம், 2 மாடி ரெயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அமைய உள்ளன.

    புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்தில் முடிவடையும். ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்படும். ராமே சுவரம் வரையிலான மின்மயமாக்கல் பணிகள், உச்சிப்புளி கடற்படை விமானதள விரிவாக்கத்திற்கான ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு தொடங்கும் என்றார்.

    மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரெயில் விகாஸ் நிகம் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஓணம் பண்டிகையைaயொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
    • இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

    சேலம்:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு ெரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ெரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.

    அதன்படி மங்களூரு- தாம்பரம் சிறப்பு ெரயில் (வண்டி எண்-06050) வருகிற 11-ந் தேதி மங்களூருவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

    பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை - செகந்திராபாத் ெரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை-செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில், ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் சேவை, செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி செகந்திரா–பாத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 28-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணா–மலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை களில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் இரவு 8.45 மணிக்கு நாமக்கல்லை வந்தடைகிறது.
    • அதிக அளவில் பயணிகள் ஏறும்பட்சத்தில், ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ெரயில் நிரந்தர ெரயிலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல்:

    கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை களில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் இரவு 8.45 மணிக்கு நாமக்கல்லை வந்தடைகிறது. அதன்பிறகு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடைகிறது.

    மீண்டும் ஞாயிற்றுக்கி ழமை இரவு 9 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்ப டும் ெரயில் மறுநாள் (திங்கள்கிழமை)அதி காலை 4.20 மணிக்கு நாமக்கல்லுக்கு வந்து சேருகிறது. அதன்பிறகு, சேலம், பெங்களூரு வழியாக அன்று இரவு 7.25 மணிக்கு ஹூப்ளியைச் சென்றடைகிறது.

    விடுமுறை நாளில் இயக்கப்படும் இந்த ராமேசுவரம் சிறப்பு ெரயிலை நாமக்கல் மாவட்ட பொதுமக்கள், பக்தா்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதிக அளவில் பயணிகள் ஏறும்பட்சத்தில், ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ெரயில் நிரந்தர ெரயிலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என நாமக்கல் மாவட்ட ெரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் அறிவுறுத்தி உள்ளனா்.

    • மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரெயில் சேவை ஒரு மாதம் நீட்டடிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரெயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்த ரெயில் சேவை தற்போது ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தி–்ராபாத்தில் இருந்து ஆகஸ்டு 1 முதல் 22-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை செல்லும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து ஆகஸ்டு 3 முதல் 24-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மதுரை கோட்டத்தில் ‘கிராப் சார்ட்’ மூலம் ரெயில் இயக்கம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
    • தொலைபேசியில் மாலை 4 மணிக்கு அனைத்து ெரயில் நிலையத்திற்கும் பொதுவான அலாரம் வரும். அப்போது அவர்கள் கடிகாரத்தில் 4 மணி என சரிசெய்து கொள்வர்.

    மதுரை

    காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறை போல, ரெயில்கள் இயக்கத்திற்கும் கட்டுப்பாட்டு அறை உண்டு. இது மதுரை கோட்ட அலுவலகத்தில் செயல்படுகிறது. இங்கு தலைமை அதிகாரி ஒருவர் ரெயில்கள் இயக்குவதற்கான ஆலோசனை மற்றும் உத்தரவுகளை வழங்குகிறார்.

    மதுரை கோட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் போராட்டம் காரணமாக ரயில்கள் இயக்கம் தடைபடும் போது, அதற்காக மாற்று நடவடிக்கைகளை இந்த துறை உடனடியாக செயல்படுத்தும். இதற்காக அங்கு "கிராப் சார்ட்" போல ஒரு பக்கம் நேரம், மறுபக்கம் ரெயில் நிலைய பெயர்கள் எழுதி, கோடுகள் வரைந்து ரெயில் இயக்கம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் டயல் செய்ய வசதி இல்லாத கண்ட்ரோல் போன் உண்டு. அதில் அதிகாரி நிலைய பெயரை சொன்னால், மதுரை கட்டுப்பாட்டு அலுவலர் உடனடியாக பேசுவார். இந்த தொலைபேசியில் மாலை 4 மணிக்கு அனைத்து ரெயில் நிலையத்திற்கும் பொதுவான அலாரம் வரும். அப்போது அவர்கள் கடிகாரத்தில் 4 மணி என சரிசெய்து கொள்வர்.

    தேஜாஸ் போன்ற முக்கிய ரெயில்களுக்கு பிங்க் கலர், பயணிகள் ரெயில்களுக்கு சிவப்பு கலர், சரக்கு ரெயில்களுக்கு பச்சை கலர், தனியாக செல்லும் என்ஜினுக்கு கருப்பு கலர் கோடுகள் வரைந்து, ரெயில் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. அப்போது ஒற்றை ரெயில் பாதையில் கோடுகள் சந்திக்கும் இடங்களில், ஏதாவது ஒருரெயிலை நிறுத்தி வழி விடுவார்கள். தற்போது இந்த முறை கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த முறையில் பதியப்படும் ரெயில் வருகை மற்றும் புறப்பாடு நேரம் ஆகியவை பயணிகளுக்கு பல்வேறு செயலிகள் மூலம் உறுதியான தகவலாக வழங்கப்படுகிறது.

    சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரெயில்வே கோட்டங்களிலும் கட்டுப்பாட்டுத்துறை இயங்குகிறது. அவற்றைக் கண்காணிக்க சென்னை ரெயில்வே தலைமையகத்தில் தலைமை கட்டுப்பாட்டு துறை உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    ×