என் மலர்
நீங்கள் தேடியது "போலி டாக்டர் கைது"
- உரிய தகுதி இன்றி மருத்துவம் பார்ப்பது உறுதியாகவே மணிகண்டன் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திராவிடம் புகார் தெரிவித்தார்.
- அதன் பேரில் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திரா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
சூலூர்:
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்.
இவரது மனைவி சத்யா(வயது49). இவர் கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
இந்த மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் கொடுப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாகவும் ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அதிகாரிகள் அந்த கடையை கண்காணிக்க தொடங்கினர். மேலும் சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்கு உண்மையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறதா என்பதை அறிய சம்பவத்தன்று அந்த மருந்து கடைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்த சத்யாவிடம், தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் மருத்துவம் பார்த்து விட்டு மருந்துகளையும் கொடுத்தார்.
அவர் உரிய தகுதி இன்றி மருத்துவம் பார்ப்பது உறுதியாகவே, இதுகுறித்து மணிகண்டன் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திராவிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திரா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக சத்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். விசாரணை முடிந்த பின்பு அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
- விசாரணையில் ராஜா மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது.
- ஊசி மற்றும் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், சட்டப்படி அதனை அகற்றாமலும் வைத்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையத்தில் போலியாக ஒரு கிளீனிக் செயல்பட்டு வருவதாகவும், அங்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மீது சந்தேகம் இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், அலுவலக கண்காணிப்பாளர் செ.ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட 'நல்லாண்டவர்' என்ற கிளீனிக்கில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு அலோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு சிகிச்சை அளித்து வந்த அவிநாசியை சேர்ந்த ராஜா (வயது 44) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது.
இதுபோல் ஊசி மற்றும் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், சட்டப்படி அதனை அகற்றாமலும் வைத்துள்ளார். இதையடுத்து கிளீனிக்கை அதிகாரிகள் குழு சீல் வைத்தது. இது தொடர்பாக மேல் விசாரணை நடத்த ராஜாவை திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வர உத்தரவிட்டிருந்தனர். அதன்பேரில் ராஜா அங்கு சென்றார்.
அப்போது கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கிளீனிக்கின் ஆவணங்கள் மற்றும் பதிவு, ராஜாவின் படிப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு பதிலாக மற்றொருவர் மருந்துகள் விற்பனை செய்து வந்ததும், ராஜா அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும், அதற்கு தகுதியான படிப்பு அவர் படிக்காததும் உறுதியானது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பான அறிக்கை மாவட்ட கலெக்டர் வினீத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலி மருத்துவர் ராஜா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஊத்துக்குளி காவல்நிலையத்தில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் புகார் அளித்தார். இதையடுத்து ராஜா கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்திருப்பது போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி கூறியதாவது:-
ராஜா அலோபதி முறையில் சிகிச்சை அளித்துள்ளார். நோயாளிகளுக்கு எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு உள்ளிட்டவைகளை கைப்பற்றி உள்ளோம். இவை அனைத்தும் முறையாக மருத்துவம் பயின்றவர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தி உள்ளார். மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் பாறைக்குழியில் எரித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் கிளீனிக் மூடி சீல் வைக்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டம் 1997-ன் படி அனைத்து மருத்துவமனைகளிலும் (டிஎன்சிஇஏ) எனப்படும் தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டத்துக்கான பதிவு சான்றிதழ், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பார்வையில் படும் படி, அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் வைத்திருக்க வேண்டும். அலோபதி, சித்தா உட்பட அனைத்து விதமான சிகிச்சைக்களுக்கு இந்த சான்று அவசியம். இது இல்லாத மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அதேபோல் அனைத்து மருத்துவமனைகளும் இதனை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருந்த செம்பியன் டாக்டர் ஆகும் வகையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.
- செம்பியன் கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தியதாக கூறப்படுகிறது.
அண்ணாநகர்:
தரமணியை சேர்ந்தவர் செம்பியன் (வயது 34). இவர் அப்பகுதியில் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்தார். ஆஸ்பத்திரியுடன் மெடிக்கலும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் செம்பியன் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது செம்பியன் மருத்துவம் படிக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்தது உறுதியானது.
இதையடுத்து செம்பியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருந்த செம்பியன் டாக்டர் ஆகும் வகையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த அவரது பெயரில் உள்ள செம்பியன் என்பவர் மருத்துவம் படித்து விட்டு டெல்லியில் டாக்டராக உள்ளார்.
இதனை கண்டுபிடித்த போலி டாக்டர் செம்பியன் அவரது சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்று ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள டாக்டர் செம்பியன் தனது உயர்படிப்பு சான்றிதழை பதிவு செய்ய முயன்ற போது தான் தனது பெயரில் தரமணியில் போலியாக ஆஸ்பத்திரி நடத்தியது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து டாக்டர் செம்பியன் மருத்துவ கவுன்சிலில் அளித்த புகாரின் அடிப்படையில் போலி டாக்டர் செம்பியன் சிக்கிக் கொண்டார்.
அவர் கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தியதாக கூறப்படுகிறது.
கொரோனா கால கட்டத்திலும் அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று உள்ளனர்.
தற்போது செம்பியன் போலி டாக்டர் என்பது தெரியவந்து உள்ளதால் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
என்ஜினியரிங் படித்த செம்பியன் எப்படி சிகிச்சை அளித்தார்? மருத்துகளை பரிந்துரைத்தது எப்படி? ஆன்லைன், யூடியூப் பார்த்து சிகிச்சை அளித்தாரா? என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- சுப்பிரமணியன் பார்மசி முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
- எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). இவர் பார்மசி படித்திருந்தார். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்து ஆளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் மாதாக்கோட்டை சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். மேலும் இவர் பார்மசி முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம், தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிளினிக்கை மூடினர். மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததாக சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குழந்தை இல்லாத பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்
- கடைக்கு சீல் வைத்தனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்கின்ற (வயது 49) இவர் கச்சேரி தெரு பகுதியில் மணி மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே அவருடைய மெடிக்கல் ஷாப்பில் குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்
மேலும் எம்பிபிஎஸ் டாக்டர்கள் கொடுக்காத அதிக வீரியம் வாய்ந்த மருந்துகளையும் கொடுத்து வந்ததாக பல்வேறு புகார்கள் வந்தது.
இதன் காரணமாக மருத்துவம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குனரும் கிடைத்த ரகசிய தகவலின்படி மருந்து கடைக்கு சென்ற இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து மற்றும் மாவட்ட மருந்து ஆய்வாளர் சபரிநாதன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள் ஆகியோர் சென்று மெடிக்கல் ஷாப்பில் ஆய்வு நடத்தினர்.
அப்போது சுப்பிரமணி வீரியம் மிகுந்த மருந்துகள் உபயோகிப்பதும் மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிப்பதை உறுதி செய்தனர்.
இதன் காரணமாக திருப்பத்தூர் டவுன் போலீசில் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியை கைது செய்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்த மாத்திரை மருந்துகளை கைப்பற்றி அனுமதி பெறாமல் மருந்துகள் விநியோகம் செய்த வந்த அவருடைய மெடிக்கல் ஷாப்புக்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்
- மருத்துவ பொருட்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் அரசு மருத்துவர் செல்வநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேற்று தாமலேரி முத்தூரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 48) என்பவர் தனது வீட்டில் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவரிடம் சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், சிரஞ்சி உள்ளிட்ட மருத்துவ உபகரணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதே போன்று மூக்கனூர் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.
சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆரோக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
போலி மருத்துவர் ஆரோக்கியராஜ் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.
- பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் பழனியப்பன் (வயது 36). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.
போலி டாக்டர்
அப்போது அவர், பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் பழனியப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர்.
4 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு விசாரணை, ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் நடுவர் நீதிமன்ற நீதிபதி முருகேசனுக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.6 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து முருகேசன் சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சேலம் நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது.
தலைமறைவு
இதனைத் தொடர்ந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராக கடந்த மார்ச் 13-ம் தேதி உத்தரவு போடப்பட்ட நிலையில், முருகேசன் ஆஜராகாமல் தலை முறைவாக இருந்தார்.
இதனை யடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பழனிசாமி மற்றும் போலீசார், தலைம றைவாக இருந்த போலி மருத்துவர் முருகேசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.
- திருப்பூரில் முறைகேடாக செயல்பட்டு வருகிற மருந்தகங்கள், கிளினீக்குள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்று சந்தேகப்படும்படி ஏதேனும் மருந்தகங்கள், கிளினீக்குகள், மருத்துவமனைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் முறைகேடாக செயல்பட்ட 13 கிளனீக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போலி மருத்துவர்கள் பீதியில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் செயல்பட்டு வருகிற மருத்துவமனைகள் மற்றும் கிளினீக்குகள், மருந்தகங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இவை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காட்டில் செயல்பட்டு வருகிற இஷ்வந்த் என்ற கிளினீக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் வினீத்திற்கு புகார் வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர்கள் ஹரி கோபாலகிருஷ்ணன், ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று இஷ்வந்த் கிளினீக்கில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு ஒருவரின் பெயரில் உரிமம் பெறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த உரிமத்தை அண்ணாத்துரை என்பவர் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மேலும், ஒரு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்ட கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுபோல் அண்ணாத்துரை என்பவர் ஆயுர்வேத மருத்துவம் படித்துள்ளதாக தெரிவித்த நிலையில், அவரது படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் முறைகேடாக செயல்பட்டு வந்த 13 கிளினீக்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலி மருத்துவர்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-
திருப்பூரில் முறைகேடாக செயல்பட்டு வருகிற மருந்தகங்கள், கிளினீக்குள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்று சந்தேகப்படும்படி ஏதேனும் மருந்தகங்கள், கிளினீக்குகள், மருத்துவமனைகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 மாதத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளோம். இதில் முறைகேடாக செயல்பட்ட 13 கிளினீக்குள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
- பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
- மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் வீராணம் அடுத்த பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் கிளினிக்கில் நேற்று சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படி வேம்படிதாளம் அரசு மருத்துவமனை சித்தா உதவி டாக்டர் வெற்றிவேந்தன், மருந்துகள் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மருந்தாளுனருக்கு படித்து விட்டு, கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு பரமேஸ்வரன் (வயது 41) என்பவர் அலோபதி சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
அதன்பேரில் போலீசார், இந்திய மருத்துவ கவுன்சில், 1956-ன் கீழ் வழக்குப்பதிந்து, பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.
- சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
- விசாரணைக்கு பின் கிருஷ்ணன் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது63). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பின் பணகுடியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதனைதொடர்ந்து கிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான மாத்திரைகள், ஊசி மருந்துகள் இருப்பதும், அவர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை முரட்டான்பத்திரி பகுதியில் போலி டாக்டர் ஒருவர் வீட்டில் மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் மருத்துவத் துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையில் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் இருசப்பன் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் முரட்டான்பத்திரி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது புதுஜெயில் ரோடு மில் காலனியில் வசிக்கும் ராஜ சேகரன் (வயது 48) என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ராஜசேகரன் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் மதுரை நரிமேடு பகுதியில் செயல் பட்டு வரும் ஒரு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார் என்பதும், இந்த அனுபவத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.
இதுமட்டுமின்றி அவர் பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருத்து வக்குழுவினர் கரிமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.
- மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
புகார்களின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.