என் மலர்
நீங்கள் தேடியது "இ-சேவை மையம்"
- தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
- திறப்பு விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செந்தில், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், கந்தசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, அற்புதராஜ், கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.
- ஆன்லை னில் விண்ணப்பிக்க https://www.tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in/ என்ற இணையதளம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது :-
தமிழ் நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனை வோர்கள் ஆகிய நிறுவ னங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகா மையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக் கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகா மையிலேயே வழங்குவதற் கான வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக் கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத் திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிக ரித்து இ-சேவை மையங்க ளில் பொது மக்கள் காத் திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட் டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத் திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லை னில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை 14.04.2023 இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்பு றங்களில் இ-சேவைமையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 ஆகும். நகர்ப்புறத்திற்கான கட்ட ணம் ரூ.6000 ஆகும். இவ் விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட் டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்க் குரிய பயனர் பெயர் மற் றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக் கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
- அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்னணு நிறுவனம், அரசு கேபிள் டி.வி., நிறுவனம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இ - சேவை மையங்கள் நடத்தப்படுகி ன்றன.வருவாய்த்துறையில் மேற்கொள்ளும் அனைத்து விதமான பணிகளும் இம்மையங்களில் மேற்கொ ள்வதால் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படு கிறது. வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு தீர்வு காண படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்க ளையும் ஊக்குவிக்கும் வகையிலும், அனைத்து இணைய வழி சேவைகளும் பொதுமக்க ளின் இருப்பிட த்துக்கு அருகிலேயே கிடைக்கும் வகையிலும், அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் துவக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பிரத்யேகமாக வலைதளம் உருவாக்கியி ருக்கிறது.இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.www.tnesevai.tn.gov.in அல்லது www.tnega.tn.gov.in இணைய தளம் வாயிலாக ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கிராமப்பகுதிகளில் துவக்குவதற்கு ரூ.3,000, நகர பகுதியில் ரூ.6,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
பயனர் எண் மற்றும் கடவுச்சொல், விண்ணப்ப த்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என ஊரக வளர்ச்சி துறை தெரிவித்து ள்ளது. இதுதொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி, அச்சுப்பொறி, வருடி சாதனம், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்.
மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்.
அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.3.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகிறது. தற்போது www. tnesevai.tn.gov.in (அல்லது)www. tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.4.2023 வரை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முக மையால் விண்ணப்பத்தை சரிபார்க்க ப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000 மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுவரை, 1,369 விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்ற அனைவரையும், இத்திட்டத்தில் விண்ணப்பி த்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- இதற்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் மையங்களை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகிலேயே பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இந்த மையங்களில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தை பற்றி கூடுதல் தகவல்கள் பெறவும், இணைய வழியில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கடைசி நாளாகும். அன்று இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்க உள்ளது.
மேலும் அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.
இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழிசேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/, https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.
விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும் கிராமப்புறங்களில் இ-சேவை செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும்.
மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.
இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கூறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார்.
- குமார் ஜெயிந்த் ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார்.
கடலூர்:
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார். வட்ட அளவிலான ஆய்வு பணிகளில் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மேற்கொண்டனர். பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயிந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், கடலூர் கோட்டாச்சியர்அதியமான் கவியரசு, நில அளவை பதிவேடு துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, தொடர்பு அலுவலர் தாசில்தார் பூபால சந்திரன், பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, துணை தாசிலார்கள் சிவகுமார், கிருஷ்ணா கவுரி, தேவநாதன் ஆகியோர் இருந்தனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- விண்ணப்பங்களை மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
செய்யாறு:
செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் வகையில் புதியதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொது மக்களின் பயன்பா ட்டிற்காக தொடங்கி வைத்தார்.
மேலும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இந்த மையத்தில் இலவசமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்தி, சௌந்தர பாண்டியன் மற்றும் கோபு, ஆறுமுகம், ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுைர மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க 13 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- மண்டலத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 336 இளைஞர்கள் மற்றும் தொழில் முனை வோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீட்டை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் முகமை ஆளுமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், கலெக்டர் அனீஸ் சேகர், வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்சு நிகம், மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, மிசா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது.
- மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கான பயிற்சிக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 350 இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள். அரசு கேபிள் டி.வி.வாரியம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம், கிராம தொழில் முனைவோர் சார்பில் நடக்கும் இ-சேவை மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றார்கள்.
மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பயிற்சி அளித்தார். கூட்டத்தில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் இ-சேவை மையம் அதிகரித்து வருவதால் போட்டியும் அதிகரித்துள்ளது. இ-சேவை மையத்தினர் அதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அனைத்து மையங்களிலும் இரண்டு திரைகளை கொண்ட கணினியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விண்ணப்பதாரர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, இ-சேவை மையத்தினர் தட்டச்சு செய்யும்போது, அதை எதிர்புறம் உள்ள விண்ணப்பதாரர் பார்த்து தவறு இருந்தால் அதை கூறி திருத்த முடியும். சான்றிதழுக்கான கட்டண பட்டியலை இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.
- வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை.
- கிராமம்தோறும் இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு அரசுத்துறையும், கணினிமயமாகி வருகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதற்காக 2016 முதல் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைக்கோடியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை. அதற்காக தொலைதூரத்தில் இருக்கும் இ-சேவை மையம் சென்றுவருகின்றனர்.பொதுமக்கள் சிரமத்தை குறைக்கவும், அரசு சேவைகளை விரிவுபடுத்தவும், வருவாய் கிராமத்துக்கு ஒரு இ-சேவை மையம் செயல்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறுகையில், கிராமம்தோறும், இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. புதிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- பெயர் திருத்தம், ஆதார் கார்டு மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
- பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அவினாசி :
அவினாசி தாலூகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ சேவை மையம் உள்ளது.பெயர் திருத்தம் ,ஆதார் கார்டு பெறுதல், போன் நம்பர் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்கள் இசேவை மையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்களிடம் அலுவலர்கள் இங்கு சர்வர் ரிப்பேராகிவிட்டது ,ஒன்றும் செய்ய முடியாது, இன்னும் 2 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என்றும், அப்படி அவசரம் என்றால் தாலுகா அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடை பெயரை சொல்லி அங்கு சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில் அதிகாரிகளின் இந்த செயலால் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.