search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச"

    • மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 889 பணிக்காலியிடங்கள் கொண்ட பார்மசிஸ்ட் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிவகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்பொழுது மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 889 பணிக்காலியிடங்கள் கொண்ட பார்மசிஸ்ட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு வருகிற 28-ந்தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பு களில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசிஎண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவுசெய்து பயன்பெ றலாம்.

    மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வுவினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்று ள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர்,பாலினம்,தந்தைம ற்றும் தாய் பெயர், முக வரி,ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித் தேர்வு என்பதை தேர்வு செய்யவேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்ததேர்வுக்குதயா ராகிறோம் என்பதைதேர்வு செய்து,அதில் வரும் பாடக் குறிப்புகளைதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம்,ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான பகுதி யும் கொடுக்கப்பட்டு ள்ளது.

    அரசு போட்டித்தேர்வு களுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

    அத்துடன் ஊக்கஉரை கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7 மணியிலிருந்து 9 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (MRB), 889 மருந்தாளுநர் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (MRB), 889 மருந்தாளுநர் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மருந்தாளுநர் பணி களுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சித்தோடு அடுத்த கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

    அப்போது சித்தோடு அடுத்த கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்ட–த்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது:

    நாங்கள் மேலே குறிப்பிட ப்பட்டுள்ள முகவரியில் 5 வருடங்களுக்கு மேலாக ஆதிதிராவிடர் நலத் துறைக்கு சொந்தமான காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எங்கள் மனு மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஒரே இடத்திற்கு 3 நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளார். சொந்த வீடு வைத்திருப்ப வர்களுக்கே பட்டா வழங்கியுள்ளார். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் தனி தாசில்தார் பயனாளிகள் தேர்வு செய்வதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக தனி தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் வந்து எங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சேலம் கோட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

    சீருடை

    நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவ- மாணவி களின் பழைய பஸ் பாைச உபயோகப்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்பதில்லை. மேலும், மாணவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடப்பாண்டுக்காக இலவச பஸ் பாஸ் பயண அட்டை மற்றும் 50 சதவீ தம் கட்டணம் சலுகை பயன்படுத்தும் அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாணவர்க ளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் பள்ளிகளிடம் இருந்து, அந்தந்த பணிமனைகளில் கேட்டு பெறப்பட்டுள்ளது.

    2.75 லட்சம் பஸ் பாஸ்கள்

    அதன்படி, சேலம் கோட்டத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் இலவச பஸ் பாஸ் அட்டையும், 50 சதவீதம் சலுகை கட்டணத்தில் பயணிக்கக்கூடிய அட்டையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு இல்லாதோர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் நலச் சேவை அமைப்பினர் தலைவர் என்.ஈஸ்வரி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினா்.

    இது குறித்து மக்கள் நல சேவை அமைப்பின் தலைவா் ஈஸ்வரி கூறுகையில் கடந்த 3 மாதங்களாக இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதனால் ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினோம். இனியும் தாம–தப்படுத் தும்பட்சத்தில் காலியாக உள்ள அரசுக்குச் சொந்த மான நிலங்களில் நாங்களாகவே குடியேறி விடு–வோம் என்றாா்.

    • 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அச்சமின்றி இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயது மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனை வருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் வருகின்ற அடுத்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அச்சமின்றி இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.750 உதவித்தொகையுடன் பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.
    • மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதியுடன் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் கலெக்டர் பங்களா அருகே அய்யந்திருமாளிகை ரோட்டில் இயங்கி வரும் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இங்கு சேருவதற்கு 10-ம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் பட்டம் பெற்ற பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    ஓராண்டு தொழிற்பிரிவுகளான கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், வரவேற்பு கூட அலுவலக உதவியாளர், 2 ஆண்டுகள் தொழிற்பிரிவுகளான கட்டிடப்பட வரைவாளர், மின்சார பணியாள், கம்பியர் மின்னணுவியல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்பியர் கருவிகள், ஏ.சி., பிரிட்ஜ் டெக்னீசியன் ஆகிய பயிற்சிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.

    மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இன்டர்நெட் வசதியுடன் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணினி மற்றும் தொழிற்கல்வி பெற விரும்பும் பெண்கள், இல்லத்தரசிகள் பயிற்சியில் சேரலாம். வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணம் கிடையாது.

    இலவச பஸ் பாஸ் மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். பாடப்புத்தகம், வரைபட கருவிகள், 2 செட் சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி ஆகியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும். வருகிற 20-ந் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×