search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரவாதிகள் ஊடுருவல்"

    • கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • குமரி மாவட்டத்தில் 48 கடற்கரை கிராமங்களில் கிராம விழிப்புணர்வு கூட்டங்கள்

    கன்னியாகுமரி:

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீசாரும் இணைந்து "சாகர்கவாச்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை கடந்த 2 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்த கடலோரபாதுகாப்பு ஒத்திகையை தமிழக கடலோர பாதுகாப்பு குழும ராமநாதபுரம் மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார். அதன்பிறகு கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.அதன்பின்னர்அவர்அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ராமநாதபுரம்மண்டலத்தில் 53 கடலோர பாதுகாப்பு குழும சோதனைச் சாவடிகள் உள்ளன.

    22 கடலோர காவல் நிலையங்களும்செயல்பட்டுவரகின்றன.16 அதிநவீனபடகுகளும்நீரிலும்நிலத்திலும் ஓடக்கூடிய15படகுகளும்பாதுகாப்புபணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்தப்படகுகள் இல்லாத பகுதிகளில் மீனவர்களின் மீன்பிடி படகு களை வாடகைக்கு எடுத்து ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம்.

    கன்னியாகுமரி யில் கடலோர பாதுகாப்பு பணிகளுக்காக 4 அதி நவீன படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடல் வழியாக தீவிர வாதிகள் ஊடுருவலை கண்காணத்து வருவதோடுமட்டுமின்றி ஆபத்துக் காலங்களில் மீனவர்களுக்கு உதவியும் செய்து வருகிறோம். தெற்கு மண்டலத்தில் 350 முதல் 400 காவலர்கள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு உதவும் வகையில் குமரி மாவட் டத்தில் 48 கடற்கரை கிராமங்களில்கிராம விழிப்பு ணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு உதவுவதோடுசந்தேகப்படும் வகையில் யாரேனும் கடற்பகுதிகளில் ஊடுரு வினால் அரசுக்கு தகவல் தரும் வகையில் அவர்களை பயிற்சி அளித்து வருகிறோம்.

    தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவு வதற்கான எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. சுற்றுலா தலமாக விளங்கும் கடலோரப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்ப டுத்தும் வகையில் கடலோர பாதுகாப்புகுழுமபோலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடற்கரை பகுதிகளை சுகாதாரமாக பேண வலியுறுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் மற்றும் நம்பியால் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×