search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பெரியகருப்பன்"

    • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
    • தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் மகளிர் சுய உதவி குழு வளர்ச்சி அடைய செய்தனர்.

    சென்னை:

    சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் அமல தாஸ் வரவேற்றுப் பேசினார். 

    சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்கள். 

    விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் முதல்-அமைச்சர் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து தற்பொழுது அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். 

    251 குழுக்களுக்கு 4.98 கோடி வாரி வழங்கி மகளிரின் இன்னலை போக்கியவர் நமது முதல்வர். கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தொழில் செய்வதற்கு உதவியாக வருமுன் காப்போம் என்கின்ற வாசகத்திற்கு இணங்க 18 குழுக்களுக்கு 1.21 கோடி கடன் உதவியாக தந்திருப்பவர் நமது முதல்வர். 

    பொதுமக்கள், தொழில் முனைவோர் அதிக வளர்ச்சி பெற வேண்டும் என்கின்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் 452 பேருக்கு 3.18 கோடியை அவர்களது வாழ் வாதாரத்திற்காக கடனாக வழங்கக் கூடிய முதல்வர் நமது முதல்வர். கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, உட்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக் கூடிய ஒரே துறை நமது அரசின் கூட்டுறவு துறை தான்.

    இவ்வாறு அவர் பேசி னார். 

    அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது இந்து சமய அறநிலையத்துறை எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் நமது முதல்-அமைச்சர் பதவி ஏற்றதும் இந்து சமய அறநிலையத் துறையை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு வழங்கினார். அவர் அந்தத் துறையில் என்னை விட கூடுதலாக மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    மகளிர் சுய உதவிக் குழு என்கின்ற ஒன்றிற்கு விதை விதைத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்.

    தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் மகளிர் சுய உதவி குழு வளர்ச்சி அடைய செய்தனர். மறைந்த நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் அது மிக பெரிய அளவில் வருவதற்கு நமது முதல்-அமைச்சர் தான் காரணம். 

    ஏனெனில் நமது முதலமைச்சர் அப்பொழுது அமைச்சராக இருந்த போது தான் மகளிர் சுய உதவிக் குழு மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுத்தது. 

    அன்று மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்தி திறன் பட செயலாற்றியவர் தான் நமது முதல்-அமைச்சர். 

    நமது முதல்-அமைச்சர் மகளிர்களின் பொருளாதாரம் உயர்வதற்கு 20 ஆயிரம் கோடி வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தார். ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட கூடுதலாக கடந்த 2022 -ம் ஆண்டு 21 ஆயிரம் கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

    தற்போது இந்த துறை நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நமது முதல்-அமைச்சர் போல் மிகவும் சிறப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

    ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என்று எண்ணுபவர் நமது முதல்-அமைச்சர். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விவசாய கடன் வெறும் ரூ.6000 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நமது முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கான கடன் தொகையின் அளவு ரூ.12 ஆயிரம் கோடியை எட்ட உள்ளது.  

    இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முக சுந்தரம் உள்பட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • 1,150 பேருக்கு பட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தொடங்கி வைத்தார்.

    முதல்வர்அப்பாஸ் மந்திரி வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்வியியல் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார்.

    சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1,150 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    முன்னாள் கல்லூரி மாணவியும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதின், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
    • சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கே:- பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்களே? என்ன காரணத்தால் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை?

    ப:- பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார். அதில் சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள். பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பை கொடுக்கும் போது ஒரு சில இடங்களில் எங்காவது தவறு நடந்திருந்தால் அதை மிகைப்படுத்தி காட்டும் காரணங்களால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முடிவு எடுத்திருக்கலாம்.

    கே:- பொங்கல் பணம் ரூ.1000 மக்களுக்கு எப்படி கொடுக்க போகிறீர்கள்? டோக்கன் வழங்கப்படுமா?

    ப:- அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முறையான அறிவிப்பு வெளியிடுவோம். எனவே மக்களை குழப்பிவிட வேண்டாம். நாளை மாலை 3 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம்.

    கே:- தவறுகள் நடைபெறாத அளவுக்கு பொங்கல் தொகுப்பை வழங்க முடியாதா?

    ப:- அதுபற்றி முதல்-அமைச்சர் சிந்தித்து கொண்டு இருக்கிறார். இதுபற்றி முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் தனிப்பெரும் கருணை வள்ளலாரின் 200-வது முப்பெரும்விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில்அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 45 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    இந்த விழாவில் வள்ள லாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்பு களில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதைப் போட்டி போன்றவை மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 177 பேர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

    வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 பேருக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களை கவுரவிக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மற்ற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ்,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
    • கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோவிலில் திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

    அதனை தொடர்ந்து மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதே போன்று சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புலவர் செவந்தியப்பனின் மகன் துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திருப்பத்தூர்வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் தென்னவன், கல்லல் ஒன்றிய செயலாளர் அண்ணா மலை, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் குண சேகரன் உள்ளிட்ட 26 பேர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், தெற்கு ஒன்றிய செயலாளரும், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவருமான சண்முக வடிவேல், நெற்குப்பை பேரூராட்சி மன்ற தலைவர் புசலான், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்க வாசகம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற தலை வர் கோகிலாராணி நாராயணன், மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், மாவட்ட விவசாய அணி சாமிகண்ணு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய மாண வரணி அமைப்பாளர் சோமசுந்தரம், சீமான் சுப்பையா, எம்.புதூர் கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • இளையான்குடியில் ரூ.2.41 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெறுவதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெற்று வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், வேளாண் இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் இந்திரா, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி சாந்தாராணி, இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரகப் பகுதிகளில் 698 வீடுகள் கட்ட ரூ.16.75 கோடி நிதி ஒதுக்கீடு
    • அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

    கன்னியாகுமரி:

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்றிரவு கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

    இன்று காலை அமைச்சர் கள் பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் ரூ.50கோடி செலவில் முன்மாதிரி வட்டார வள மைய புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்மாதிரி வட்டார வள மைய கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து நுள்ளிவிளை ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தினை தொடங்கி வைத்தார். ஆத்திவிளை ஊராட்சியில் காளான் உற்பத்தி அலகை பார்வை யிட்டார். பின்னர் தச்சமலை யில் பழங்குடியினரின் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

    பின்னர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் சமத்துவ புரம் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22 -ஆம் ஆண்டில் ரூ.241.574 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது நடப்பு ஆண்டிலும் இது வரை ரூ. 101.973 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் வீடு தோறும் தரமான குடிநீர் போதுமான அளவு வழங்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. 9 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 95 ஊராட்சிகளில் 1,43,436 குடியிருப்புகளுக்கு ரூ.47.76 கோடி செலவில் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் நடப்பாண்டில் 28,851 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 80 சாலைகளை சீரமைக்க ரூ.42.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் ஊரகப் பகுதிகளில் 698 வீடுகள் கட்ட ரூ.16.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள 4 பெரியார் சமத்துவபுரங்களில் முதல் கட்டமாக 2 சமத்துவப்புரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1.348 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கும் தொழில்களை விரிவு படுத்துவதற்கும் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பெண்கள் முன்னேற்றத்திற்கு கடந்த ஆண்டு 10,226 சுய உதவி குழுக்க ளுக்கு ரூ.508.47 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் 44 மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.88 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற மகளிர் சத்தான உணவை பெறும் வகையில் 4,100 மகளிருக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து விதைத்தோட்டம் அமைப்பதற்கு செடிகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டுள்ளன .

    கிராமப்புற விவசாயி களின் வருமானத்தை பெருக் கும் வகையில் குமரி மாவட்டத்தில் 4 ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை அமைக்க ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தி.முக. மாவட்ட பொருளாளர் கேட்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. செயலா ளர் தாமரைபாரதி, மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான், கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.
    • 12 ஆயிரத்து 525ஊராட்சிகளும் இணைய வழி மூலம் இணைக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக தேவையான கட்டமைப்பு வசதிகளை முதல்-அமைச்சர் உருவாக்கி வருகிறார். இதற்காக எல்லா துறைகளுக்கும் ஆலோசனை வழங்கி உள்ளார். ஊரக வளர்ச்சி துறைக்கும் பல்வேறு பங்களிப்பை வழங்கி வருகிறார்.

    இந்த துறையை பொறுத்த வரை கிராமப்புற மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்காக தொடங்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழு.

    இதன் மூலம் வேலை வாய்ப்பு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டுள்ளது. கிராமப்புறங்களை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி 1 லட்சத்து 19 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்துள்ளோம்.

    ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மையம் கன்னியாகுமரியில் விரைவில் அமையும். இதற்கான இடத்தை இன்று ஆய்வு செய்துள்ளோம். இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எழிலாய்ந்த பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும்.

    12 ஆயிரத்து 525 ஊராட்சிகளும் இணைய வழி மூலம் இணைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வெகுவிரைவில் அனைத்து ஊராட்சிகளும் இணையங்களில் இணைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×