search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239589"

    • ராஜபாளையத்தில் சாலையோர சிறு வியாபாரிகள்-தொழிலாளர்கள் சங்க 13-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமை தாங்கி பேசினார். தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சங்க பொதுசெயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களை ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டு வந்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து பேசினார். உணவு பாதுகாப்பு பற்றி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    தமிழ் மாநில சிறு வணிகம் மற்றும் தள்ளுவண்டி சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை சங்க பொதுசெயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • இவ்விழாவினை கல்லூரியின் தலைவர் ரேவதி இளங்கோவன் குத்துதுவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியின் 13 -வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவினை கல்லூரியின் தலைவர் ரேவதி இளங்கோவன் குத்துதுவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவினை கல்லூரியின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

    இவ்விழாவில் ஸ்ரீநிவாசா கல்வி அறக்கட்டளையின் கவுரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோவன், உதவித்தலைவர் வெங்கிடு, செயலர் ரஜினி, இயக்குநர் ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கல்லூரியின் முதல்வர் நந்தகோபால் ஆண்டு அறிக்கை வாசித்தார். எழுத்தாளர் ஆசிரியர், பொது மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஷ்யாமளா, ரமேஷ், பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் வெற்றிபெற நல்ல பல கருத்துக்கள் கூறி, கல்லூரியில் கடந்த வாரம் நடந்த விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி விழாவினை சிறப்பித்தார்.

    ஸ்ரீநிவாசா கல்வி அறக்கட்டளையின் சார்பாக பெற்றோரை இழந்த மாணவிக்கு கல்வி உதவித்தொகை ரூ.3,00,000 காசோலையாக வழங்கப்பட்டது. முடிவில் உயிர் மருத்துவத்துறை தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    • 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது.
    • நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் நுகர்வோர் குரல் அமைப்பின் 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது. நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

    ஜெய்ராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் வக்கீல்கள் சங்க செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். சேலம் முள்ளுவாடி கேட் மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக உணவு பாதுகாப்பு மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியி டப்பட்டது. நுகர்வோர் குரல் துணைச்செயலாளர் துரைராஜ், விழா வரவேற்பு குழு துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் அழகிரி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவின் பொழுது தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் நலன் கருதியும், சுற்று வட்டார கிராமப்புற குழந்தைகளின் நலன் கருதியும் இந்தகல்லூரி உருவாக்கப்பட்டது.

    மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது வேலைவாய்ப்பை பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசியில் நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பின் இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசன் குழும தலைவருமான அசோகன் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் படிப்புடன் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்துல்கலாம் கூறியது போல கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

    தொழில் முனைவோராக உருவெடுத்து பலருக்கு வேலை வழங்கும் நிலைக்கு மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் அந்த தோல்வியை உங்கள் வெற்றியின் படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியை கைவிடாமல் பெற்றோரின் நலனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நளினி அசோகன் பரிசு வழங்கினார். விழாவில் ஆங்கிலத்துறை, வணிகவியல் துறை, தமிழியல் துறை பேராசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    முன்னதாக துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முடிவில் வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டியில் உள்ள காந்திஜி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியின் 70-வது ஆண்டு விழா நடந்தது. செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வை யாளர் தமிழ்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வி குழு தலைவர் தனபால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேங்கடலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வு மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஆசிர்வாதம் பீட்டர், எஸ்தர்டார்த்தி மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தி நன்றி கூறினார்.

    • பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
    • மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எருக்குவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கமலநாதன் தலைமை தாங்கினார். எருக்குவாய் கண்டிகை வார்டு உறுப்பினர் சி.தரணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.கம்சலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.கே. ரசூல்ராஜ் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக கும்மிடிபூண்டி வட்டார கல்வி அலுவலர் டி.என்.முரளிதரன், கும்மிடிப்பூண்டி எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் என்.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியை அமைப்பாளர் பி.எஸ்.நாகராஜன் சிறப்பாக தொகுத்து வழங்கினார், முடிவில், உதவி ஆசிரியர் பி.சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.

    மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதன் பின்னர், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எருக்குவாய் கண்டிகை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி-புதிய பாரதம் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எஸ். ஜெ.நாடார் மெட்ரிக் பள்ளி 26-ம் ஆண்டு விழா, விளையாட்டு, பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 18 மாணவ- மாணவிகளுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பட்டம் வழங்கினார்.

    நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் களரி குகன், கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க தலைவர் ஜெயமுருகன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் விஸ்வநாதன், நாடார் மகாஜன சங்க நகர் தலைவர் மணிகண்டன், நாடார் மகாஜன சங்க மாவட்ட மகளிரணி தலைவர் பாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு விழாவில் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான், தேவகோட்டை தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பவுலியன்ஸ், சரவணன், திருப்புல்லாணி முத்தரையர் சங்க தலைவர் முனியசாமி, வீரமுத்தரையர் சங்கத்தலைவர் செல்வம், தாளாளர் இளையராஜா, கல்வி குழு தலைவர் சுந்தரம், முதல்வர் உமா லிங்கேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம், கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு வரவேற்று பேசினார்.பள்ளி ஆண்டு விழாவை யொட்டி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இலக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எல்.பி.பழனிசாமி, பரிசுகளை வழங்கினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் சிவகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி மற்றும் ஆசிரிய ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது..

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது.

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லபுத்தூர் அருகேயுள்ள கொங்கலா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மேரி தலைமை யில் நடைபெற்றது.

    டி.மானகசேரி ஊராட்சி மன்றத்தலைவி சுபிதா மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார். ஆசிரியை ஆனந்தவல்லி ஆண்டறிக்கை வாசித்தார்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மாநில தலைமை கராத்தே பயிற்சி யாளர் சென்சாய் செபஸ்தி யான் தலைமையி்ல் மாணவிகள் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்திக்காட்டினர்.

    கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.

    விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் வளர்மதி, வேல்துரைச்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்ட னர். ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    • தொண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சித்தூர் வாடி ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வின்சென்ட் அன்பரசு தலைமையில் நடந்தது.

    தலைமை ஆசிரியர் சுசைராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிளமெண்ட் ராசா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பைலோன் மேரி நன்றி கூறினார்.பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    ×