என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருட முயற்சி"
- பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.
- கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோலாயத்தில் உள்ள ஒரு வீட்டில் திருட சென்ற கொள்ளையர்கள் உதவிக்கு போலீசாரை அழைத்து கைதான சம்பவம் நடைபெற்றது.
கோலாயத்தில் வார்டு எண் 10-ல் அமைந்துள்ள மதன் பரீக் என்பவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 2 மணியளவில் திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் பரீக் அருகில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைடுயத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனைக் கண்ட திருடர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து தப்ப முயன்றனர். ஆனால் ஜன்னலை உடைக்க முடியாததால் செய்வதறியாது தவித்தனர். வெளியே சென்றால் பொதுமக்கள் கையில் சிக்கினால் அவ்வளவுதான் என உணர்ந்த அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடர்கள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான்.
- கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
ராம்ஜிநகர்:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டதாக புகார் வந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்ணாடி உடைத்து திருடப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகளின் படங்கள் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையம் மட்டும் அல்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதன் பலனாக டெல்லியில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்தவர்கள். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையர்கள் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தது தெரியவந்தது. இதற்காக திருச்சியில் இருந்து புறப்பட்டு ஜாம்நகர் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் பல திட்டங்கள் போட்டும் உள்ளே போக முடியவில்லை. இதனால் ஜாம்நகர் வந்து திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து ராஜ்கோட் போலீஸ் சூப்பிரெண்டு ராஜு பார்கவ் கூறும்போது:-
இக்கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான். மதுசூதனன்தான் தலைவனாக இருந்து கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி தருபவன். இந்த கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டி திறந்து இருந்தது.
- நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அலு வலகம் எதிரே பல்வேறு மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல் பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையை அதன் உரிமையாளர் வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார்.
இதை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையின் மேற்பகுதியில் மேல் உள்ள ஓடு நகர்ந்து இருப்பது தெரிய வந்தது.
இதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையில் வைக்கப்பட்டு இருந்த பண பெட்டியும் திறந்து இருந்தது.
இது குறித்து கடை உரிமையாளர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.
இதில் கொள்ளையர்கள் கடையின் ஓட்டை பிரித்து பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்க்றார்கள். அங்கு பணம் இல்லாத காரணத்தினால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அவற்றை அப்படியே விட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.
மேலும் கடையில் பொரு ட்கள் அப்படியே இருந்தது. அங்கு எதுவும் எடுத்து செல்லாதது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யார் என தெரிய வில்லை.
மேலும் சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபு ணர்கள் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் வந்து சோதனை செய்து தடய ங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் குறித்து தீவிர மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் வி.பி.நந்தவனம் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(64). இவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியூரில் உள்ளனர். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டுள்ளது. தனது வீட்டின் மாடியில் இருந்து பழனிவேல் அங்கு பார்த்துள்ளார். அப்போது அந்த வீட்டின் மாடியில் இருந்து 3 மர்ம நபர்கள் கீழே குதித்து ஓடி உள்ளனர். திடீரென அவர்களின் 2 பேர் பழனிவேல் வீட்டின் ஜன்னல் கதவையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பழனிவேல் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்த லோகநாதன் (21), 114 காலனியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரஞ்சித் குமாரை தேடி வருகின்றனர்.
- கையும் களவுமாக பிடித்தனர்
- போலீசில் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைநகர் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 37).
இவர் தனது வீட்டில் இருந்தபோது, நேற்று அதி காலை அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம், மணி பர்ஸ் ஆகியவற்றை திருட முயன் றுள்ளார்.
இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.
அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்தபால்னாங்குப்பம் கங் காநகர் பகுதியை சேர்ந்த அரு ணாச்சலம் என்பவரது மகன் ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கர சன் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தார்.
- பத்ரகாளிஅம்மன்கோவிலின்தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்
- இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோதுஇரும்பு உண்டியலைஉடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் பத்ரகாளிஅம்மன் கோவில். உள்ளது.இந்த கோவிலின் தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது கோவில் முன் பகுதியில் சிமெண்ட் தரையில் புதைத்து வைக்கபட்டிருந்த இரும்பு உண்டியலையாரோ மர்ம நபர்கள் இரவு கடப்பாரையால் குத்தி உடைக்க முயற்சி செய்ததும், அதனை உடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது. கோவிலில் இருந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை.
இது குறித்து இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேற்று காலை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வந்த போது பள்ளியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சிய டைந்து உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் இல்லாததால் பள்ளியின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாருக்கு செல்லும் மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார்.
- இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மை யத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம் மெஷினை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி திறக்க முயற்சி செய்து உள்ளார். ஏ.டி.எம் மெஷினை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.
தொடர்ந்து, அங்குள்ள இ-சர்வைலன்ஸ் கருவி மூலம் வங்கி மேலாளர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஸ்ரீதர் வங்கி ஊழியர்கள் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.டி.எம் உடைக்கப்பட்டு இருந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலும் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டூடியோ, காயில் கட்டும் கடை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது.
அங்கு இருந்து ஆட்டோ டிரைவர்கள் சத்தம் கேட்டு சந் தேகத்திற்குரிய வகையில் சுற்றி இருந்த நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசார ணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனால் போலீசார் திருப்பத்தூர் டவுன் காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப் போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் டோல்கேட் தர்காநகர் பகுதியைச் சேர்ந்த பர்கத் (வயது 20) என்பதும், கடைகளில் திருட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்கத்தை கைது செய்தனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் உள்ளது. இங்கு பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து பொறுப்பாளர் பாண்டியன் கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கேட்டவரம்பாளையம் ஆவின் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தின் ஜன்னல் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை உடைக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ள முக்கிய பொருள்களையும் ஆவணங்களையும் திருட முயற்சி செய்துள்ளதாக புகார் செய்துள்ளார்.
இதன் பெயரில் கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா இணைப்பை துண்டித்தார்
- ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்
கோவை,
கோவை போத்தனூர் - வெள்ளலூர் ரோட்டில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா இணைப்பை துண்டித்தார்.
பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றார். அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனை பார்த்த ஆலய நிர்வாகிகள் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சுவரில் துளையிட்டு துணிகரம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற் பார்வையாளராக நந்த குமார் பணிபுரிந்து வருகிறார்.
விற்பனை யாளர்களாக தனஞ் செழியன் , ஏழுமலை ஆகியோர் வேலை பார்க்கிறார்கள் . நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் டாஸ் மாக் கடை பூட்டி விட்டு வீட்டிற்கு சென் றுள்ளனர்.
பின்னர் நேற்று மதியம் விற்ப னையாளர்கள் பேரும் ரண்டு கடையை திறக்க வந்த போது கடையின் பின் பக்கத்தில் மர்ம நபர் கள் துளையிட்டு திருட முயற்சிசெய்தது தெரியவந்தது . இத னையடுத்து விற்பனை யாளர்கள் கடையை ஆய்வு செய்த போது கடையில் 38 பீர் பாட்டில்கள் உடைத்து நொருக்கப்பட்டிருந் மதுபாட்டில்கள் திருட்டு போகவில்லை.
இது தொடர்பாக மேற்பார்வையாளர் நந்தகுமார் அவளூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்