search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மையம்"

    • மதுரையில் இன்று 13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
    • மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மதுரை

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் இன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 8833 மாணவ- மாணவியர் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணி அளவில் தேர்வு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடக்கிறது. முன்னதாக மதியம் 1:30 மணிக்குள் மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நீட் தேர்வுக்காக வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் இன்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப் பட்டன.

    அடுத்தபடியாக ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து தேர்வு அறையிலும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 1500 மாண வர்கள் குறைவாக தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் திறக்கப்பட்டது.
    • பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது.

    கூடுதல் மையங்கள் திறப்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். தன்னார்வலர் சித்ரா வரவேற்றார்.

    கூடுதல் மையங்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்னரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி முயற்சி எடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கூ்டுதலாக 296 மையங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் நன்றி கூறினார்.

    • ஒரே நாளில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு சேலத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
    • 154 பேருக்கு சிகிச்சை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் சேலம் மாநக–ராட்சியில் 17 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 7 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 9 பேரும் அடங்குவர்.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்க–ளுக்கும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளவும் கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×