search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 கிலோ"

    • 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • குடும்ப அட்டைதாரா்களுக்கு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் துறைமங்கலம் நியாய விலை கடையில், கூட்டுறவுத் துறை சார்பில் சாலையோர வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய நடுத்தர பெண் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ வணிக எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் எரிவாயு சிலிண்டர் விற்பனையைத தொடக்கி வைத்து பேசியதாவது:

    எரிவாயு சிலிண்டர் முதன் முறையாக பெறும் போது ரூ. 1,520 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு, அதை மீண்டும் நிரப்புவதற்கு ரூ. 576.50 செலுத்த வேண்டும். இம் மாவட்டத்திலுள்ள 197 முழுநேரக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் அதிகம் உள்ள 3 பகுதி நேரக் கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, பெரம்பலுார் வட்டத்தில் 48 நியாயவிலைக்கடைகளும், ஆலத்துார் வட்டத்தில் 43 கடைகளும், குன்னம் வட்டத்தில் 50 கடைகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 59 கடைகளும் என மொத்தம் 200 நியாயவிலைக் கடைகளில் செயல்படுத்தப்படும் என்றார்.

    இந் நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், இந்தியன் ஆயில் நிறுவன மண்டல மேலாளர் ஜெயபிரகாஷ், நகர் மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • சேலம் வழியாக சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சாவுடன் கேரள வாலிபர் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே சிறப்பு பிரிவு போலீசார் முத்துவேல், தமிழ்செல்வன், ஸ்ரீநாத் ஆகியோர் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாட்னா-எர்ணாகுளம் ரெயிலில் எஸ்-10 பெட்டியில் கறுப்புநிற பையில் 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் விஜயவாடா ரெயில் நிலையத்தில் ஏறிய பாலக்காடு மண்ணலூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பிரமோது(22) என்பவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×