என் மலர்
நீங்கள் தேடியது "தனியார் நிறுவனம்"
- தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்
- பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல.
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அதற்கு அவர் கையாண்ட வழிமுறை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார்.
இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அவர் தனது பதிவில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஊழியர்களை சின்ன சின்ன விஷயங்களுக்காக பாராட்டுவதால் கூட பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கும். பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும் என்று நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏஞ்சலாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை சங்கிலியால் கட்டிவைத்து நாய்களைப் போல மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, ஆனால் இது தொடர்பாக , விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
- செல்போன் டவர் அமைந்திருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விளாத்திகுளம்:
சினிமா ஒன்றில், 'வெட்டிவெச்சிருந்த கிணத்தை காணோம்' என்று வடிவேல் போலீசில் பரப்பரப்பான புகார் கொடுப்பதுபோல, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் செல்போன் டவர் காணோம் என்று ஒரு புகார் வந்துள்ளது.
விளாத்திகுளம் அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு, காமராஜ் நகர் ரோஸ்லின் மருத்துவமனைக்கு பின்புறம் சொந்தமாக இடம் இருக்கிறது. இந்த நிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 20 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ.20 லட்சம் அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்தபோது செல்போன் டவர் அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது. செல்போன் டவர் அமைந்திருந்த இடத்தில் கான்கிரீட் தூண்கள் மட்டுமே காட்சி அளித்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள் தனியார் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நில உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் டவரின் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
- பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பொருளா தார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் புல்லியன் பின் டெக் நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் பணம் பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கற்பகவல்லி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் ஆனந்தன், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
அதே போல் ராமநாதபுரம் மாவட்டம், முத்துபுரம், அக்ரஹாரம் என்ற முகவரியில் செயல்பட்டு வந்த வி.கே.எல்.டயரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வாசுகிநாதன், கார்த்திக் கணேஷ், காஜா முகைதீன் ஆகிய நபர்கள் சேர்ந்து பரமக்குடி மற்றும் அந்தப்பகுதியைச் சுற்றி பொதுமக்களை சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் அதற்கான முதிர்வுத்தொகையை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக சண்முகசுந்தரம், என்பவர் புகார் செய்துள்ளார்.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளனர்.
- சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மும்பை அமலாக்கத்துறையினர் விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை, மும்பை, பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனங்களில் நடந்த சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்றத்தத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- அலைக்கழித்ததால் வழக்கு தொடர்ந்த நுகர்வோர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் குலசேக ரன்புதூர் பகுதியைச் சேர்ந்த வர் பாலமுருகன். இவர் தோவாளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார்.
இந்த நகைைய பாலமுருக னுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி தெரியவந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப பணத்துடன் சென்றார்.
அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையை திருப்பி தரமுடியும் என நிதி நிறுவனம் கூறிய தாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உதிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாலமுருக னுக்கு ரூ.1500 நஷ்ட ஈடு மற்றும் வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் வழங்க உத்தர விட்டனர்.
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- சேவை குறைபாடு எதிரொலி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளையை சேர்ந்தவர் செல்வகீதா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 64 மாதங்கள் கட்டினால் முடிவில் ரூ.94 ஆயிரம் கிடைக்கும் என்ற திட்டத்தில் சேர்ந்திருந்தார்.
அவர் தவணை தொகையை முழுவதும் செலுத்தி விட்டு முதிர்வு தொகையான ரூ.94 ஆயிரத்தை நிறுவனத்திடம் கேட்டார். உடனடியாக அந்த நிறுவனத்தினர் ரூ.94 ஆயிரத்திற்கு காசோலை வழங்கி உள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் இந்த காசோலை மூலம் அவரால் பணம் பெற முடியவில்லை.
இதனால் பாதிப்படைந்த செல்வகீதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் முறையான உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் மற்றும் முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி மற்றும் மனைபிரிவுகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கீதா ஆகியோர் கடலூர் மாநகராட்சி அலு வலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கடலூர் நகரமைப்பு அலுவலகத்தில் கட்டிட அனுமதி மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அக்கோப்புகள் அனைத்தும் கடலூர் நகர பகுதியில் இயங்கி வரும் 2 தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு அந்நிறுவனங்களால் பரிசீலனையும் செய்யப்பட்டு அங்கேயே அனுமதி அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிறுவனத்திலும் அதன் அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் அந்த நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருவதும், அங்கு 15-க்கும் மேற்பட்டோர் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருவதும், அரசு அலுவலகங்களில் நடைபெற வேண்டிய பணிகள் இந்த நிறுவனங்களில் நடை பெற்று வருவதும் கண்டறியப்பட்டது.
அங்கிருந்த கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வர வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கைப்பற்றினார்கள்.
மேலும் இந்த இரு நிறுவனங்களிலும் அரசு அலுவலர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த கமிஷன் தொகை ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது.
- ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (31-ந் தேதி) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.
அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீ லிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
- போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் - குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (32). இவர் எலையமுத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். பாலாஜி சம்பவத்தன்று வேலையை முடித்துக் கொண்டு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பின்னர் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரொக்கம் ரூ 4 லட்சத்து12 ஆயிரம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் நிகழ்வுகள் பதிவாகும் பெட்டி உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
+2
- மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.
- ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.
சென்னை:
பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.
இதையொட்டி முதல் கட்டமாக ரெயில் நிலையத்தை அளவீடு செய்து காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி சாலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே கட்டிட சிவில் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-
மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.
1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டரில் கட்டிடம் அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.
பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன காப்பகங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.
ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரெயில்வே பார்சல் பகுதி ரெயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது.
இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த பணிகள் 3 வருடத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- வடமாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி எம்.வி.எஸ். நகரில் தனியாருக்கு சொந்தமான பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின், குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தி இருப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்ட தொழிலாளர் நல துறை உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள 12 குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.பின்னர் அவர்களை திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குழந்தை தொழிலா ளர்களை பணிக்கு அமர்த்திய அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம், முறையாக கட்டப்படாததால் கட்டடத்தின் சுவர்கள் சாய்ந்து வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.