search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240415"

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா வைத்து கேசரி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    தண்ணீர் - 400 மி.லி.

    நெய் - தேவையான அளவு

    முந்திரி பருப்பு - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    கேசரி பவுடர் - சிறிதளவு

    செய்முறை :

    சேமியா, முந்திரிப் பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து வைக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி சேமியாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேக விடவும்.

    கட்டி விழாமல் இருக்க கை விடாமல் கிளற வேண்டும்.

    சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரி பருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

    சுவையான சேமியா கேசரி தயார்.

    இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

    • இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • இந்த ரெசிபியில் விரும்பிய காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    கேரட் - 1

    பீன்ஸ் - 4

    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    பட்டை - 1 கிராம்பு - 5

    பிரியாணி இலை - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். (முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.)

    பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும். பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.

    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.

    மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் வேக வைத்த சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டால் வாணலியை மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

    இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, தயிருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    • உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு.
    • உப்புமாவில் பல வகைகள் உண்டு.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 1

    நெய் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3-4 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    வரமிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, வேக வைக்க வேண்டும்.

    தண்ணீரானது வற்றி, சேமியா மென்மையாக வெந்த பின், அதனை இறக்கி பரிமாறினால், சேமியா உப்புமா ரெடி!!!

    ×