என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் நரேந்திர மோடி"
- மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுடெல்லி:
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது பட்ஜெட் தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 21-ம் நூற்றாண்டில் நீர் வளங்களை நன்றாக நிர்வகிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.
- இரு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கென்-பெட்வா ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:-
* 21-ம் நூற்றாண்டில் நீர் வளங்களை நன்றாக நிர்வகிக்கும் நாடுகள் மட்டுமே முன்னேற்றம் காண முடியும்.
* இரு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.
* கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டம் பண்டல்கண்ட் பகுதியில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும்.
* நாட்டில் நீர்வள மேம்பாட்டிற்கான பெருமை பி.ஆர். அம்பேத்கரையே சாரும். காங்கிரஸ் இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைத்தது.
* ஆட்சியும், காங்கிரசும் ஒன்றாக இணைந்து செல்லவில்லை.
* அடிக்கல் நாட்டிய பிறகு கூடு, காங்கிரஸ் அரசு 35 முதல் 40 ஆண்டுகள் வரை திட்டத்தை தாமதப்படுத்தியது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அத்துடன் கஜுராஹோவில் இருந்து கந்த்வாரா மாவட்டத்தில் ஓம்கரேஷ்வர் பிளோட்டிங் சோலார் திட்டத்தை திறந்து வைத்தார். மறைந்த பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் சந்தித்து பேசினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதைதொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
அப்போது, ஆந்திராவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
- கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்ததாக மேரி மில்பென் கூறியுள்ளார்.
- கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன என்றார்.
வாஷிங்டன்:
உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்திய கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்நிலையில், ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாடகி மேரி மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் மிகப்பெரிய பரிசாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எனது ரட்சகராகிய கிறிஸ்துவை கவுரவம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்தன. இந்தியாவில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாடகி மேரி மில்பென்னுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கையில், கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம் என பதிவிட்டார்.
- மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார் என்றார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இரவு காலமானார்.
மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது.
அவர் எளிமையான இடத்தில் இருந்து மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதி மந்திரி உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றிய அவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார்.
பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.
மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத்தின் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும் அடிக்கடி உரையாடினோம். ஆளுகை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் தெரியும்.
துக்கமான இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
- டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடியது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.
- குகேஷை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக சாம்பியனிடம் கையெழுத்திட்ட செஸ் போர்டை பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இவருக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குகேஷூக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.
அப்போது குகேஷ், பிரதமர் மோடிக்கு தான் மற்றும் டிங் லிரேன் கையெழுத்திட்ட இறுதிப்போட்டியில் விளையாடிய செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
செஸ் சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான குகேஷ் உடன் எனக்கு சிறந்த தொடர்பு இருக்கிறது. நான் சில வருடங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறேன், அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும்தான்.
அவரது தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய உலக செஸ் சாம்பியனாக வருவேன் என்று அவர் கூறிய ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சொந்த முயற்சிகளால் இப்போது அந்த கணிப்பு நிறைவேறியுள்ளது.
குகேஷிடமிருந்து அவர் வென்ற போட்டியின் அசல் செஸ் போர்டை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மற்றும் டிங் லிரன் இருவரும் கையெழுத்திட்ட செஸ் போர்ட், ஒரு நேசத்துக்குரிய நினைவுப் பரிசு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்!
- இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் 2025-ம் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கடற்கரைகள், நட்சத்திர விடுதிகளில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர். மேலும் கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவில்,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவில்,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். புத்தாண்டு அனைவருக்கும் அற்புதமான, ஆரோக்கியமான, செழிப்பான ஆண்டாக அமையட்டும் என கூறியுள்ளார்.
- பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் கடந்த மாதம் சண்டிகரில் கன்சர்ட் ஒன்று நடத்தினார்.
- அந்த கன்சர்ட்டை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு அர்ப்பணித்திருந்தார்.
புதுடெல்லி:
பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் கடந்த மாதம் சண்டிகரில் கன்சர்ட் ஒன்று நடத்தினார். சண்டிகரில் நடந்த தில்ஜித் இசைக் கச்சேரி அவரது தில்-லுமினாட்டி இந்தியா டூர் 2024-ன் ஒரு பகுதியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு அவர் கடந்த மாதம் நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்
அப்போது அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடினார். இதையடுத்து, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாத வரை இந்தியாவில் இனி நேரலை இசைக்கச்சேரிகளை நடத்தமாட்டேன் என அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் நேற்று சந்தித்தார். அப்போது இருவரும் இசை, கலாசாரம், யோகா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் தங்களது எக்ஸ் வலைதளத்தில் சந்திப்பு தொடர்பான படங்களை பதிவிட்டிருந்தனர்.
தில்ஜித் தோசன்ஜ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என பஜ்ரங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- டெல்லிக்காக மத்திய அரசு செய்தது என்ன? என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.
- தொழில் அதிபர்கள் மிரட்டப்பட்டனர். மக்கள் பட்டப்பகலில் கொல்லப்பட்டனர். இதற்கு பாஜக அரசுதான் பொறுப்பு.
டெல்லி மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியை பிரதமர் மோடி டெல்லிக்கான பேரழிவு (AApada) என விமர்சித்தார். மேலும், "நாம் பேரழிவை பொறுத்துக் கொள்ள முடியாது. நாம் அதை நீக்கும்வோம்" என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஆம் ஆத்மியை விமர்சிப்பதை சிரிப்பது போல் உணர்கிறேன் என டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:-
இதுபோன்ற அறிக்கைகள் (கருத்துகள், விமர்சனங்கள்) பிரதமருக்கு பொருந்தாது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டெல்லியை பாதியளவு கொண்டுள்ளது. நாங்கள் பாதியளவு கொண்டுள்ளோம். நாங்கள் கழிவுநீர் சிஸ்டம், தண்ணீர் விநியோகம், மின்சாரம் ஆகிய துறைகளை முன்னேற்ற பணிகள் செய்துள்ளோம்.
டெல்லிக்காக மத்திய அரசு செய்தது என்ன? என்பதை நான் கேட்க விரும்புகிறேன். தொழில் அதிபர்கள் மிரட்டப்பட்டனர். மக்கள் பட்டப்பகலில் கொல்லப்பட்டனர். டெல்லியில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இதற்கெல்லாம் பாஜக-வின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
டெல்லியில் உள்ள கல்வி முறை பற்றி பிரதமர் மோடி பேசியதை நான் சிரிப்பது போல் உணர்கிறேன். இன்று உலகின் மிகப்பெரிய நபர்கள் எல்லாம் டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்க்க வருகின்றன. நானும் பிரதமர் மோடியை அழைக்கிறேன். முதலில் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை பாருங்கள். அதற்குப் பிறகு வேலை நடந்துள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்யுங்கள். மிகப்பெரிய மேடையில் இருந்து இதுபோன்று பேசுவது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு சவுரப் பரத்வாஜ் பதில் அளித்துள்ளார்.
- உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதையடுத்து, கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி:
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப்போட்டியில் கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி 2-வது இடத்தில் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இன்று சந்தித்தார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோனேரு ஹம்பியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு விளையாட்டு சின்னம் மற்றும் ஆர்வமுள்ள வீரர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார். அவருடைய கூர்மையான அறிவும், அசைக்க முடியாத உறுதியும் தெரியும். அவர் இந்தியாவிற்கு மகத்தான பெருமையைக் கொண்டு வந்தது மட்டுமின்றி, சிறப்பானது என்ன என்பதை மறு வரையறை செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
- ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
- ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை விசாகப்பட்டினம் வந்தார். விமானம் மூலம் வந்த அவரை ஆளுநர் அப்துல் நசீர், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மூவரும் வாகனத்தில் ஏறி விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அப்போது இருபுறமும் மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மூவரும் மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றனர். இந்த ரோடு ஷோ சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் வரை நடைபெற இருக்கிறது.
பிரதமர் மோடி அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 6 சாலைகள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.