search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"

    • மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.
    • சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சி.டி.சி., டிப்போ -2ல் சென்று வர காங்கயம் ரோட்டில் இருந்து கோவில் வீதி வழியாக வழி உள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.இதனால் பஸ் நிலையம் மற்றும் பிற பகுதியில் இருந்து இரவு நேர நிறுத்தி வைப்புக்கு வரும் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.பஸ்கள் வளம்பாலம் சாலை வழியாக சென்று விநாயகர் கோவில் வீதி வழியாக பணிமனை வந்தடைகிறது.காலையில் பஸ் டிரிப் துவங்கும் போது மேற்கண்ட வழியில் ஒரே நேரத்தில் பணிமனையில் நிற்கும் அனைத்து பஸ்கள் வெளியே வர முயல்வதால் நெரிசல் அதிகமாகிறது.

    எனவே பணிமனை செல்லும் வழித்தடத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • முகாமில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்,

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணிபாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 225 நபர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மீனாட்சி மருத்து வமனை மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

    மேல்சிகிச்சை தேவைபடு பவர்களை கண்டறிந்து பரிந்துரை செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இம்முகாமில் பொது மேலாளர்கள் இளங்கோவன், முகமதுநாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்த ராஜன், துணை மேலாளர்கள் சிங்காரவேலு, ராஜேஷ், பணி மேலாளர் ஸ்ரீதர், உதவி மேலாளர் ராஜசேகர், மருத்துவர்கள் குருநாதன், சினேகா, செல்வராஜ் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ‘பிஎஸ்-4’ ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன.
    • சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பஸ்களும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பஸ்களும் வழங்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்திற்கு புதிய பஸ்களை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பஸ்களும் அடங்கும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 'பிஎஸ்-4' ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ரகத்தில் 1,771 பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பஸ்களும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பஸ்களும் வழங்கப்பட உள்ளன.

    சேலம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், கோவை மண்டலத்திற்கு 115 பஸ்களும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், மதுரை மண்டலத்திற்கு 251 பஸ்களும், நெல்லை மண்டலத்திற்கு 50 பஸ்களும் வழங்கப்படும். இந்த பஸ்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    • 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.
    • மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    பல்லடம் :

    அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது:- அரசு போக்குவரத்து கழகத்தில்,கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.

    சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் புதிதாக ஆண்டு தோறும் பஸ்கள் வாங்கப்படுகின்றன.ஆனால் அதற்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் எங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது 58ஆக இருந்த ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மீண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவும் புதிதாக பணியாளர்களை நியமிப்பது தாமதமாகி வருகிறது. பணியாளர்கள் அதிகரிக்கப்படாததால், தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது.

    மேலும் புதிதாக வேலைக்கு சேர காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×