என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண் பலி"
- விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:
ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.
இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, சாமுத்ரிகா, உறவினர்கள் கோவர்த்தணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவணராஜ் ஓட்டினார்.
அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
- இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பவானி:
அந்தியூர் தவிட்டுப் பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லதா மணி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று லதா மணி தனது மொபட்டில் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.
பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து லதா மணியின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ரம்யா விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார்.
- உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் ரம்யா சத்தம் போட்டார்.
கோவை,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ரம்யா (வயது 31).
சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரம்யாவின் ஆடையில் தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் ரம்யா சத்தம் போட்டார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டனர்.
பின்னர் கோவில் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரம்யா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
- இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மற்றும் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
வாலிபர் மற்றும் இளம்பெண் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
இரு உடல்களும் ரெயில் மோதி சிதறி கிடந்தது. உடல் பாகங்கள் முழுவதும் ரத்தமாக காட்சி அளித்தது.
அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த பகுதியில் இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்தார்களா? அல்லது அடித்து கொலை செய்து வீசப்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்து சென்று கொண்டிருந்த சாந்தி விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இருந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி. இவர்கள் கடந்த 21-ந் தேதி, அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . பின்னால் அமர்ந்திருந்த சாந்தி, அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்லில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இருந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.
- சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா பரிதாபமாக இறந்தார்.
கோவை:
நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருத்திகா (வயது 26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் பழகி வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர்.
அதன்படி 2 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவி என கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு வைத்து 2 பேரும் ஜாலியாக இருந்தனர்.
பின்னர் கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். லாட்ஜில் தங்கியிருந்த இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்தனர். இதனால் லாட்ஜின் பொறுப்பாளர் அறைக்கு சென்று வாடகை கேட்பதற்காக சென்றார். அப்போது அறையில் தங்கி இருந்த ஜோடி விஷத்து மயக்க நிலையில் இருந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
- திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீர்த்தனா (வயது30).
இவர் துணி துவைத்து விட்டு அதனை வீட்டின் வெளியே காய வைத்தார். அருகில் இருந்த கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
இதுபற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் கீர்த்தனா ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாம்பு ஒன்று அவரது வலது காலை கடித்து விட்டது.
- மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம், கரூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி சுரேகா (34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேகா தனது விவசாய தோட்டத்தில் எள்ளு பயிரை பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த பாம்பு ஒன்று அவரது வலது காலை கடித்து விட்டது.
இதனால் வேதனையால் துடித்த அவரை நல்லசிவம் மீட்டு கார் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சுரேகா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது 38), இவரது தங்கை தமிழ்செல்வி (36). இருவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகின்றனர். நேற்று மாலை பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே நல்லாவூரைச் சேர்ந்த குணசேகரன் (42) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் லிப்ட் கேட்டு இருவரும் மோட்டார் சைக்களில் ஏறினர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் புதுவை - திண்டிவனம் சாலையில் உள்ள புளிச்சபள்ளத்தில் உள்ள வாணிபக் கழக குடோன் அருகில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார். மேலும், தமிழ்செல்வி, குணசேகரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த குணசேகரன், தமிழ்செல்வியை சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
- பாம்பு கடித்து இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, மேட்டு தெருவில் வசித்து வருபவர் வாசுதேவன் விவசாயி ஆவார். இவரது மகள் பார்கவி (வயது23) நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை 2 மணி அளவில் பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார்.
- ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் இருந்து பயணிகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரெயிலில் பயணம் செய்தார்.
அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர்.
ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினை வை இழந்தார்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது.
இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெயில் நிலையங்களில் இதுபோன்று நடைபெறும் செல்போன் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த சோழிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி அமுதா (வயது36). கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சோழவரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா கணவர் கண்முன்பே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து கணவர் முருகன் கதறி துடித்தார். அவரும் மோட்டார் சைக்கிளோடு விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.