search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு விபத்து"

    • கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே சோதனைசாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு-சேலம் முக்கிய போக்குவரத்தாக காவிரி ஆற்று பாலம் உள்ளது. இதனால் இந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருந்து வாகனங்களை சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிப்பார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் தலைமை காவலர் அற்புதராஜ் (48) என்பவர் நேற்று வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை அற்புதராஜ் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அற்புதராஜ் மீது மோதியது.

    இதில் அற்புதராஜன் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த மற்ற போலீசார் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அற்புதராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மது போதையில் வந்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது.
    • விபத்தில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏ.ஜி.வெங்கடாசலம் (60). இவர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு அந்தியூரில் இருந்து கார் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 10 மணி அளவில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வந்த கார் பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்தானது. இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்தார். டிரைவர் மற்றும் உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.

    இதையடுத்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
    • பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிளம்பியது. லாரியை சுப்பிரமணி என்பவர் ஓட்டினார்.

    லாரியில் செங்கல் சூலை தொழிலாளர்கள் மணி மற்றும் ஜானகி பயணம் செய்தனர். லாரி ஆப்பக்கூடல் அடுத்த கூத்தம்பூண்டி ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கிய லாரி கட்டுப்பாட்டை இழந்து கூத்தம்பூண்டி ஏரிக்குள் கவிழ்ந்தது.

    இதில் லாரி டிரைவர் சுப்பிரமணி நீச்சல் அடித்து கொண்டு ஏரியிலிருந்து கரை ஏறினார். பின்னர் சுப்பிரமணி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கவுந்தப்பாடி மற்றும் பவானியில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் ஏரியில் சிக்கி தவித்த மணி, ஜானகியை மீட்க போராடினர். எனினும் முடியவில்லை இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பரிசல் ஓட்டிகளை உதவியுடன் மணி, ஜானகி 2 பேரையும் பத்திரமாக ஏரியில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இதனையடுத்து அங்கு தயாராக இருந்த 108 மருத்துவ உதவியாளர்கள் கோகுலப்பிரியன், தாமோதரன் ஆகியோர் மணி மற்றும் ஜானகிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் கல்லூரி மாணவர் ஜோஸ்வா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை ஜோஸ்வா ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். எதிரே மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் ஜோஸ்வாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×