search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்கு"

    • எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.
    • காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

    நவராத்திரி காலத்தில் விடிய விடிய விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும்.

    *விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

    *தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். விளக்கிற்கு மலர் சூடுவது மிகநல்லது.

    *தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம். தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.

    *அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

    *நாயன்மார்களில் நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப் பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

    *விளக்கேற்ற எக்காலமும் உகந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் தாமரைத்தண்டுத்திரியால் விளக்கேற்ற முன்வினைப்பாவம் தீரும். எருக்கம் பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.

    *விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திரபாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகலசவு பாக்கியமும் உண்டாகும்.

    *கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும், நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.

    *கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன்தொல்லை அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது.

    *நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை ஜலதீபம் என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

    *திருவிளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப் பிரார்த்தனையானயால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.

    • வார தினங்களில் ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கு துலக்க வேண்டும்.
    • மற்ற நாட்களாகிய செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்க கூடாது.

    விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். ஆகையால் எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் தோஷங்கள் ஏற்படும்.

    எனவே திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். மேலும் நேரம் ஆக ஆக விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புது திரி ஒன்றை ஏற்றிப்பின்னர் பழைய திரியை எடுத்து விட வேண்டும். இதுவே சிறந்த முறை ஆகும்.

    தீபத்தைக் குளிரவைக்கும் முறை

    பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு! தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    மேலும் விளக்கை அணை எனக்கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக்கூடாது. பெண்களே செய்ய வேண்டும்.

    தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

    விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்

    வார தினங்களில் ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கு துலக்க வேண்டும். மற்ற நாட்களாகிய செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்க கூடாது.

    ஞாயிறு விளக்கு துலக்க கண் சம்பந்தமான நோய்கள் தீரும், திங்கள் விளக்கு துலக்க அலைபாயும் மனம் அடங்கி அமைதிபெறும், வியாழன் விளக்கு துலக்க மனக்கவலை தீரும், குரு அருள் கிட்டும். சனிக்கிழமை விளக்கு துலக்க, வாகன விபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.

    விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

    * விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.

    * விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.

    * விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.

    * விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

    * விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.

    * விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

    * விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

    * விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.

    * வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.

    திருவிளக்குப் பூஜையில் கவனிக்க வேண்டியவை

    இரு விளக்குகளை வைத்து வணங்கக் கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்குகளை வைத்துத்தான் வணங்க வேண்டும்.

    காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி தினமும் வணங்கினால் செல்வம் பெருகும்.

    காலையிலும், மாலையிலும், குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகுவதுடன், நம் பாவமும் விலகும்.

    விளக்கை கிழக்கு திசை நோக்கி வைப்பதுதான் சிறப்பு.

    எண்ணெய்யில்லாமல் தானாக விளக்கை அணையவிடக் கூடாது. பூஜை முடிந்து பத்து நிமிடம் கழித்து விளக்கைக் குளிர வைக்க வேண்டும்.

    அன்றாடம் மாலையில் ஒரு முக விளக்காகிய காமாட்சியம்மன் திருவிளக்கின் திருவடியில் தாமரை மலரை வைத்து பாராயணம் செய்வது சிறப்பு ஆகும்.

    திருவிளக்குப் பூஜையில், விளக்கிற்கு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தலை உச்சி வடுகிலும் வைத்து வர, அவர்களுடைய கணவர்கள் நலமுடன் வாழ்வார்கள்.

    திருவிளக்கு பூஜை செய்யும் குத்து விளக்கை தலை வாழை இலை மீது வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாக வையகத்தில் தழைத்தோங்கி, வாழ்வு பசுமையானதாக அமையும்.

    நாள் தோறும் திருவிளக்கு வழிபாடு செய்து வர, 108 நாட்களில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நடக்கும்.

    தினசரி வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது, திருவிளக்கு அகவல் படித்துவர நன்மை உண்டாகும்.

    திருவிளக்குப் பூஜையின் போது இடது கையால் எந்த மங்கல காரியங்களையும் செய்யக் கூடாது.

    தீபம் ஏற்றும் போது ஒரே முயற்சியில் எரிவது நல்லது.

    தீபச்சுடர் நின்று நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது, மெல்லத்தணிந்து அடங்கக் கூடாது.

    மிகச் சிறியதாக அல்லது மிகப் பெரியதாகச் சுடர் எரியாமல் திருவிளக்கின் அமைப்பிற்கும், அளவிற்கும் தகுந்தபடி எரிய வேண்டும்.

    சுடரில் புகை தோன்றினாலும், திரி கருகினாலும் அவற்றிற்குக் காரணமான திரியையோ அல்லது எண்ணெயையோ உடனே மாற்றிவிட வேண்டும்.

    பொதுவாக காமாட்சியம்மன் விளக்கின் திருச்சுடரைக் கொண்டு மற்றொரு விளக்கின் சுடரை ஏற்றமாட்டார்கள்.

    பல அகல் விளக்குகளை அல்லது திருவிளக்குகளை ஏற்ற வேண்டியிருந்தால் முதலில் ஒரு விளக்கின் சுடரை ஏற்றி, அதன் மூலம் அனைத்து விளக்கின் சுடர்களையும் ஏற்றலாம்.

    திருவிளக்கு தொடர்ந்து எரிய வேண்டிய சூழ்நிலையில், விளக்கின் குழியில் எண்ணெயைத் தொடர்ந்து வார்த்துக் கொண்டிருப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

    விளக்கில் குளம் போல் எண்ணெயை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.

    திருவிளக்கு பூஜையில் குத்து விளக்கிற்கு சிகப்பு வண்ண மலர்களைச் சாற்றலாம், லட்சுமி பூஜைக்கு செவ்வந்தி மலர் சாற்றலாம்.

    விளக்கு பூஜையில் விளக்கு ஏற்றியவுடனே சந்தனம், குங்குமம் வைத்து விட வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு மெதுவாக மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு பொட்டு வைக்கக் கூடாது.

    திருச்சுடர் எதிர்பாராத காரணத்தால் தானே அணைவதும், எண்ணெய் இல்லாமல் அணைவதும் குற்றம் ஏற்படுத்தும்,

    பூஜை நடைபெறும் போதும், மங்கலக் காரியங்கள் நடக்கின்ற போதும் லட்சுமிகரமாக எரிகின்ற திரிச்சுடரானது சட்டென்று அணைவது அமங்கலம் ஆகும்.

    திருச்சுடரில் மகாலட்சுமி நிறைந்து, நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது பெரிய குற்றமாகும்.

    அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை தீபத்தட்டில் வைத்து, எப்பொழுதும் எம் உள்ளளி பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து திரியை மெதுவாக உள்ளே இழுத்து ஒளியை நெய்யில் மறையச் செய்ய வேண்டும், அல்லது பூக்களால் அணைக்கலாம். அல்லது பால் துளிகளைக் தெளித்தும் திருச்சுடரைக் குளிர வைப்பது (அணைப்பது) மிகவும் பொருத்தமானது ஆகும்.

    அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.

    விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும்.

    தீபம் லட்சுமி வாசம் செய்யும் இடம். மங்கலச் சின்னம். இல்லறம் பிரகாசமாக இருக்க, எப்போதும் தீபமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

    தீபம் வைத்த உடன் முகம் கழுவுதல், தயிர் கடைதல், காய்கறி நறுக்குதல், அரிசி களைதல் போன்றவைகளை செய்யக்கூடாது.

    • ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன.
    • பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு பகுதி பல்லடம் நகரத்தின் முக்கிய கடைவீதி ஆகும். இங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த ரோட்டில் பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அது கடந்த பல நாட்களாக எரியாததால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொன்காளியம்மன் கோவிலுக்கு முன்பு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல நாட்களாக அவைகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் இரவு நேரத்தில் பெண்கள், சிறுவர்கள் அந்த ரோட்டில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாலை விரிவாக்க பணி முடிந்தும் அந்த இடத்தில் விளக்கு பொருத்தப்படாமல் இருக்கிறது.
    • சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 11 வது வார்டு கவுன்சிலர், மகாலட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி மெயின்ரோடு, ஆவணம் ரோடு இணைப்பில் தந்தை பெரியார் சிலை எதிரே ஆவணம் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக எரிந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி காரணமாக உயர் மின் கோபுர விளக்கு அகற்றப்பட்டது.

    சாலை விரிவாக்க பணி முடிந்து 8 மாத காலங்கள் ஆகியும் அந்த விளக்கு அவ்விடத்தில் பொருத்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ - மாணவியர்கள், பெண்கள் என அனைவரும் அந்த இடத்தை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த உயர் மின் கோபுர விளக்கை அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும், சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.

    • 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாகூர் தர்காவின் மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் நாகூரே விழா கோலம் பூண்டுள்ளது.

    தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கழுகு பார்வை காட்சிகள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 02 ஆம் தேதி நாகையிலிருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது.
    • ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன

    விளக்கு  தத்துவம்

    அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும்.

    இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம்.

    உடலும் தீபமும்:

    விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி! கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம்.

    தொடர்பு ஏற்படுத்தும் தீபம்;

    ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மா வாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன! விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் இறையருள் ஒளியாக உள்ளது.

    எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவை. அதைப் போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது. இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

    குத்துவிளக்கில் பெண்மை:

    குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன. அவை, அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியவனாகும்.

    விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்:

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தை செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்:

    பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது. அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம். மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன. மாக்கல் விளக்கை தெய்வ மாடத்தில் ஏற்றலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடு களில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக் கூடாது.

    • விளக்கு ஏற்ற சில விதிமுறைகள் உள்ளன.
    • ஒவ்வொரு எண்ணெய்க்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

    தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

    நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

    நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதி கரிக்கும்

    தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்

    இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி

    விளக்கெண்ணெய் - புகழ் தரும்

    ஐந்து கூட்டு எண்ணெய் - அம்மன் அருள்

    விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.

    ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்

    இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்

    மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்

    நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்

    ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண் டாகும்.

    கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

    மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

    வடக்கு - திருமணத்தடை அகலும்

    தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

    • தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும்.
    • திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதம் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

    மாலையில் தீபம் ஏற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மாலையில் வீடு முழுக்க விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகளுக்கு குறையாமல் ஏற்றுவதால் நிறைவான பலன்களைப் பெறலாம்.

    • வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.
    • திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    ஐந்து முகக் குத்து விளக்கைப் பளிச்சென்று துலக்கி ஈரம் போகத் துடைத்து, ஐந்து முகங்களிலும் குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும். பிறகு பீடத்திற்கும் குங்குமம், மஞ்சள், சந்தனப் பொட்டு வைக்க வேண்டும். பிறகு நல்ல வாசனையுள்ள மலர்களால் குத்துவிளக்கை அலங்கரிக்க வேண்டும்.

    குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் பூச்சூட்டும் போது ஈன்ற தாயை, பிறந்த வீட்டை, அவர்கள் நலனை வேண்டி பூச்சூட வேண்டும்.

    நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது, கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டை நினைத்து, இல்லறம் நல்லறமாய் இருக்க பிரார்த்தனை செய்து பூச்சூட வேண்டும்.

    உச்சிப் பகுதியில் பூச்சூட்டும் போது, "தீப லட்சுமியே! உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும்" என்று மனமுருக வேண்டி பூச்சூட வேண்டும்.

    இவ்வாறு திரு விளக்கை அலங்கரித்து பூஜை செய்ய மங்கலம் பொங்கும்.

    விளக்கிற்கு ஏற்ற ஆசனம்

    விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

    விளக்கிற்கு பொட்டு இடுதல்!

    விளக்கிற்கு விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் கீழ் இரண்டும், அதற்கு அடியில் இரண்டுமாக, ஆக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.

    உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும் அடுத்த மூன்று பொட்டும் முக்கண் முத்தீ என்கிற சூரியன், சந்திரன், அக்கினி என்று கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுகள் கைகள் எனவும், கீழே இடும் பொட்டு இரு திருவடிகளாகவும் கருதி, இந்த எட்டு இடங்களிலும் பெட்டிட்டு வழிபட வேண்டும்.

    • விளக்கு ஏற்ற சில விதிமுறைகள் உள்ளன.
    • அதிகாலை 4.30- 6மணிக்குள் விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.

    விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.

    ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.

    சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

    எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்

    தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

    திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.

    மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.

    விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

    வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

    எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவ ரீதியாகவும் ஒரு காரணம் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

    வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

    செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன.

    என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சர விளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    • அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.
    • எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் நல்லது என்று அறிந்து கொள்ளலாம்.

    பூஜை செய்யும் விளக்குகளில் வெள்ளி விளக்கு மிகச் சிறப்புடையது.

    ஐம்பொன் விளக்கு அடுத்துச் சிறப்புடையது.

    வெண்கல விளக்கு அடுத்துச் சிறப்புடையது.

    பித்தளை விளக்கு அதற்கு அடுத்துச் சிறப்புடையது.

    அவரவர் விருப்பப்படியும், வசதிப்படியும் தீபங்களை அமைத்துக் கொள்ளலாம்.

    மண் அகல் விளக்குகளை மாடத்தில் வைக்கவும். இவை அலங்கார பூஜைக்கும், கார்த்திகை தீபத்திற்கும் மற்றவற்றிற்கும் சிறப்புடையன.

    மாக்கல் விளக்கை தெய்வ மாடத்தில் ஏற்றலாம்.

    ஆனால் எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது.

    • மங்கலப் பொருட்களில் காமாட்சி விளக்கும் ஒன்று.
    • குத்து விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    விளக்குகளில் இது புனிதமானது. எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.

    பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.

    புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப் பந்தலை வலம் வரும் போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனை வருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப் படும் விளக்கும் காமாட்சியம்மன் திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, 'நிறைநாழி' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.

    பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

    குத்து விளக்கு

    குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

    ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்க ளுடன் கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

    ×