search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • நலிவுற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் காட்பாடி வஞ்சூர் ஊராட்சியில் நலிவுற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வாரந்தோறும் விலையில்லா ரொட்டி, பால், முட்டை மற்றும் சிறுதானியம் வழங்கும் திட்டம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில்இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வஞ்சூர் கிளை மன்ற நிர்வாகிகள் வினோத், குமார், பூபாலன்,

    சுரேஷ், சஞ்சய், முனிசாமி, வெங்கட், சிலம்பரசன், கோகுல், காட்பாடி ஒன்றிய துணை தலைவர் கோவிந்தன், காட்பாடி ஒன்றிய துணை அமைப்பாளர் ரமேஷ், சேனூர் நிர்வாகிகள் நவீன் குமார், பிரசாந்த், தினகரன், முகேஷ், டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.
    • குளிர்காலம் தொடங்கியதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி செய்திட நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் : 

    குளிர்காலம் தொடங்கியதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி செய்திட வேண்டுமென நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர்வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை மாவட்டத் தலைவர் எஸ். குத்புதின் தலைமையில் திருப்பூர் பகுதிகளில் ஆதரவின்றி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணைத்தலைவர்கள் அலாவுதீன், ஜெயபிரகாஷ் ,மாவட்ட செயற்குழு கனகராஜ், சித்திக்,மாஸ்டர் பாய், நாகராஜ் மற்றும் காங்கேயம் நகர தொண்டரணி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் அங்கு ராஜ், மாரிமுத்து, மணிகண்டன் ,விவேக் ,வெங்கடேஷ் ,கார்த்திகேயன், மாயவன் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • விஜய் நேற்று ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார்.
    • அந்த நிகழ்வில் என் ‘கட்-அவுட்’க்கு பாலாபிஷேகம் செய்வதற்கு பதில் ஏழைகளுக்கு பால், முட்டை வாங்கி கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களை நேற்று சந்தித்து பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்புக்கு நேரம் கேட்டு பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்திருப்பது ரசிகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    காலை முதலே விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன்பாக ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். மதியம் 2 மணிக்கு ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். பனையூர் அலுவலகத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வரத்தொடங்கியிருந்தது. குறிப்பாக சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை மட்டுமே சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செய்தி பரவி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் கூட்டம் கட்டு கடங்காமல் போனது.

     

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    மக்கள் இயக்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிரியாணியின் சுவை பற்றி ஒரு ரசிகர் இணையத்தில் பதிவிட்டு பாராட்டு தெரிவிக்க, அதைத் தொடர்ந்து இணையத்தில் பனையூர் பிரியாணி என்ற ஹேஷ்டேக்குகள் பரவ ஆரம்பித்தது.

    முதலில் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசிய விஜய் அவர்களிடம் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். எதிர்வரும் நாட்களிலும், வாரிசு திரைப்படம் வெளியாகும்போது என்னமாதிரியான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். ரசிகர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு பங்கை மட்டுமே செலவிடுங்கள், தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம், நற்பணிகளை மேற்கொள்ளும் போது ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

     

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    இதன் பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் 15 மற்றும் 16 இடங்களில் தான் விஜய் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொடை கொடுக்கக் கூடிய இயக்கம் மக்கள் இயக்கம் தான் என்று அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

    பிற்பகலில் ரசிகர்களை சந்தித்த விஜய் அவர்களிடம், முதலில் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். அதன் பிறகு இயக்க பணிகளில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக என்னுடைய கட்அவுட்களுக்கு பாலா பிஷேகம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஏழைகளுக்கு பால், முட்டை சத்தான உணவு கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள். மக்கள் நலப்பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார் விஜய்.

     

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அடுத்த நாட்களில் பிற மாவட்ட ரசிகர்களையும் சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதனால் வரும் நாட்களில் விஜய் ரசிகர்களின் பயணம் சென்னையை நோக்கியே அமைந்திருக்கும் என்கிறார்கள்.

    இந்த விழாவின் முடிவில் பொதுசெயலாலர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, மக்கள் நலப்பணிகளில் ஈடுபடாமல் வெறுமனே விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களுக்கு மக்கள் இயக்கத்தில் இடமில்லை. மக்கள் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி நடவடிக்கை விஜய் மக்கள் இயக்கத்தை திரையுலகிலிருந்து அடுத்த கட்டமாக அரசியலை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.

    • தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களை இன்று சந்திக்கிறார்.
    • பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்தார்.

    நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தை வம்சி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப்படம் ஆந்திராவிலும் வெளியாக இருக்கிறது. இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டு, வியாபாரம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

     

    ரசிகர்களுடன் விஜய்
    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த 5 ஆண்டுகளாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா பரவலால் தள்ளிப்போய் கொண்டிருந்தது. வாரிசு படத்துக்காக தொடர்ந்து படப்பிடிப்பு இருந்த நிலையில் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சந்திப்பு கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் சந்திக்கலாம் என்று விஜய் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது.

     

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

    இந்த நிலையில்தான் ரசிகர்களை இன்று சந்திப்பதாக விஜய் தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை முதலே விஜய்க்கு சொந்தமான பனையூர் அலுவலக வளாகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் குவியத்தொடங்கினர். அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

     

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் ரசிகர்களை சந்திக்க விஜய் பனையூர் அலுவலகம் வந்தார். அவரை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், மன்ற நிர்வாகிகள் சிலரோடு முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட இருப்பதாகவும் தெரிகிறது. இது வாரிசு பட வெளியீட்டின் போது ரசிகர்கள் எப்படி யெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களாகவும் இருக்கும் என்கிறார்கள்.

    தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைபடி நேரடி தெலுங்கு படங்களுக்குத் தான் விழா நாட்களில் அதிக முன்னுரிமை தர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதால் படத்தை வெளியிடுவதில் வாரிசுக்கு சிக்கல் எழுதிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் இந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    • விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிவ ஷர்மிளா அறக்கட்டளை ஒருங்கிணைந்த வளாகத்தில் முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர். சுகுமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், சதீஸ், லோகு, சிவா, அஸ்வின், மணி, பசபுகழ் மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் காளிமுத்து, போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் நடிகர் விஜய் ஒப்புதலுடன் நியமனம் செய்து வருகின்றனர்.
    • என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பூர் :

    தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் அணி வாரியாக தலைவர்கள், நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

    அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் பரிந்துரையின் பேரில் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளைஞர் அணி செயலாளராக கோல்டு பாண்டி, துணைத்தலைவராக தினேஷ், துணைச் செயலாளராக அப்பாஸ், பொருளாளராக சண்முகம், இணைச் செயலாளர்களாக வசந்த், எம்.எஸ்.கே., மாவட்ட நிர்வாகி மகேந்திரன், கவுரவ ஆலோசகர் லோகு, மாவட்ட பிரதிநிதி சிவா, ஆலோசகர்கள் மோகன், தீபக், ஹரி, அஸ்வின் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.சுகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது 23 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கும் பரிந்துரை செய்த தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே. சங்கர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பதவி வழங்கிய தலைமைக்கு என்றென்றும் கட்டுப்பட்டு இயக்கத்தை வலுப்படுத்த உண்மையாக உழைப்பேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

    அதன்படி திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர். தெற்கு மாவட்ட தலைவராக ஜி.கே சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட செயலாளராக ராம்குமார், துணைத்தலைவராக மகாதேவன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச்செயலாளராக கார்த்திக், தெற்கு மாவட்ட அமைப்பாளராக கவுதம், துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது 27 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
    • விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின்படி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து வழிகாட்டுதலின்படி ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் திருப்பூர் மாநகர தலைமை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் வினீத், மருத்துவக் கல்லூரி மற்றும்பொதுமக்கள்,பள்ளி, கல்லூரிகளில் பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

    இதில் மாநகர தலைவர் குத்புதீன், மாநகரச் செயலாளர் சின்னதுரை ,மாநகர துணைத்தலைவர் அலாவுதீன் ,மாநகர ஆலோசகர் பஷீர், மாநகர துணைச்செயலாளர் ரவி ,மாநகர பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் மாநகர நிர்வாகிகள் கனகராஜ் ,தனபால், அக்பர் மற்றும் பல்லடம் நகர செயலாளர் சதீஷ் கலந்து கொண்டனர் .

    • சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டது.

    சென்னையை அடுத்துள்ள பனையூரில் சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டது. ரசிகர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் செங்கல்பட்டு [மேற்கு] மாவட்ட செம்பாக்கம் நகர மக்கள் இயக்கம் சார்பில் 25-வது வாரமாக ஏழை எளிய குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பால், முட்டை, வாழைப்பழம், பிஸ்கட் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கி வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயலால் அனைவரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

    • சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்தாகவும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து 6 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டது.

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் செயலியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த புதிய முயற்சி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    ×