search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் விற்பனை"

    • திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
    • ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரசந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பானை, கரும்பு, வாழை மரம், மாடுகளுக்கான கயிறுகள், மஞ்சள் குழை, வாழைபழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், மாடுகள் மீது பூச கூடிய வண்ண பொடிகள், கோலப்பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், காய்கறிகளும் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    வாரசந்தையில் பொங்கல் விற்பனைக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான வியாபாரிகள் பொருட்களுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதனை வாங்க ஊத்தங்கரை, மத்தூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி மாவட்டத்தில் இருந்து இருமத்தூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரசந்தையில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோன்று ஆடுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.

    இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

    • ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும்.
    • வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும்.

    நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. 16-ம் தேதி இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதியம் முதல் ஆட்டுச்சந்தை களை கட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மேலும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிலர் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களில் விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    தொடர் மழையினால் கடந்த 2 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

    கறிக்காக வாங்கும் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ரூ. 7 கோடி வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடை வளர்ப்பவர்கள் கூறும்போது, எட்டயபுரம் சந்தையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இன்று முதன்முறையாக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு கூட்டமும் அதிகமாக உள்ளது. விற்பனையும் நன்றாக உள்ளது என்றனர்.

    • வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
    • ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஆட்டு சந்தைக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. வருகிற 17-ந்தேதி கரிநாள் பண்டிகை என்பதால் அதிகளவு ஆடுகள் விற்பனையானது.

    இதில் ஒரு ஜோடி ஆடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆட்டுக்குட்டியானது 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை போனது. இன்று ஆட்டு சந்தையில் 1½ கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது.
    • சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்வதால், இவைகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது. அதிகாலை 3 மணி முதலே செஞ்சி விவசாயிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்தனர்.

    ஆட்டுச்சந்தையில் வெள்ளாடு ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. இதனை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
    • கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

    குண்டடம்:

    தமிழகத்தில் நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி சந்தையும் ஒன்றாகும். கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதே நேரம் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

    இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

    இந்த வார சந்தைக்கு மூலனூர், அரவக்குறிச்சி, தாராபுரம், பகவான் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆந்திரா, சென்னை, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

    ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயிரத்து 500க்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.

    • வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    • அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுசந்தை தென் மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய ஆட்டுசந்தையாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆடுகள் வரை விற்பனையாவது வழக்கம்.

    இந்தநிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சந்தை நண்பகல் 11 மணி வரை நடைபெற்றது. இதில் உள்ளூர் ஆடுகளை தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலில் இருந்தும் லாரிகளில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர்.

    ஆடுகளை வாங்க மதுரை, விருதுநகர், சிவகாசி, கம்பம், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாாிகள் வந்திருந்தனர். இதனால் சந்தை நடைபெற்ற ஆட்டுச்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆடு விற்பனையாளர்கள் கூறுகையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இதில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதே போல் ஆடுகளின் விலையும் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளி சிறப்பு ஆட்டுச்சந்தையான இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    எனவே நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தீபாவளியையொட்டி கடந்த சில வாரங்களாக ஆடுகளின் விலை அதிகரித்து வந்ததாகவும் தீபாவளி முடிந்த பிறகு ஆடுகளின் விலையும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கோழி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். ஆட்டுச்சந்தையின் வாசல் பகுதியில் ஏராளமான கோழி வியாபாரிகள் நாட்டு கோழிகள், சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனையும் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

    • ராமநாதபுரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    • தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் ஆட்டு வியாபாரிகள், கசாப்பு கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் அதிகமாக கூடினர். இதே போல் வீடுகளில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழி விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. இதனால் சந்தை களை கட்டியது.

    வழக்கத்தை விட ஆடுகளின் விலை அதிக மாக உள்ளதாக கசாப்பு கடை வியாபாரிகள் தெரி வித்தனர். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டது. இன்று மட்டும் ஆடுகள், நாட்டுக் கோழிகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளியொட்டி களைகட்டியது
    • பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை படுஜோர்

    அணைக்கட்டு:

    வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல்படும் வாரச்சந்தை யில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபா ரிகளும் வருகின்றனர்.

    இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி, புறா, சேவல் விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொய்கை மாட்டு சந்தையில், மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் சந்தை வளாகம் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    காலை முதலே வியாபாரம் களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மாடுகள் விலை மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடேரி பசுக்கள் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், சினை பசுக்கள் ரூ.1 லட்சத்திற்கும், உழவு மாடுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்திற்கும், காளை கன்றுகள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கோழிகள் மற்றும் புறாக்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

    கே.வி. குப்பம் சந்தையில் இன்று காலை ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.தீபாவளி பண்டிகையை யொட்டி வெள்ளாடுகள் அதிக அளவில் கொண்டு வரப்ப ட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.இன்று ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

    • நேற்று நடந்த சந்தையில் 270-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
    • ஒரு ஆடு விலை ரூ.5,300 முதல் ரூ.10,700 வரை விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 70-க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.

    இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 270-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

    ஒரு ஆடு விலை ரூ.5,300 முதல் ரூ.10,700 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தம் ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என வியா–பாரிகள் தெரிவித்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.

    இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 310-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.10,200 வரையும் விற்பனையானது, மொத்தம் ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

    கொளத்தூர்:

    பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (29-ந்தேதி) கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    சென்னையில் புளியந்தோப்பு, ஆடு தொட்டி, ரெட்டேரி சந்தை, தாம்பரம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத்தையொட்டி ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதியில் இருந்தே ஆடுகள் விற்பனை இந்த சந்தைகளில் சூடு பிடித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்காக வந்துள்ளன.

    இநத ஆடுகள் விற்பனை நாளை வரை நடைபெறுகிறது. இதுவரை ரூ.14 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாக ஆடு வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

    வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகளை கொண்டு வரும் போது இது போன்ற பண்டிகை நாட்களில் போலீசார் பண வசூலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து மாதவரம் பகுதிக்கு வருவதற்குள் போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ×