search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் விற்பனை"

    • தீபாவளி பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
    • திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெள்ளி கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெ ல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். 4 மணிக்கு தொடங்கியது. வழக்கத்தைவிட இன்று அதிகளவு கூட்டம் காணப்பட்டது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் தற்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்திற்கு மேல்தான் விற்கப்படுவதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ. 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.

    இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், குளவாய், காட்டுமயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று நடந்த சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.

    கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை 500 முதல் 750 வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
    • ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபா ரிகள் அங்கு குவிந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    சின்ன சேலத்தில் வாரந்தோறும் வியாழக்கி ழமை வாரச்சந்தை நடை பெறுவது வழக்கம். இதில் காலை நேரத்தில் நடை பெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் சின்னசேலம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளான பாண்டியன் குப்பம், மூங்கில் பாடி, நயினார்பாளையம், குரால், கூகையூர், அம்மயா கரம், காள சமுத்திரம், வாசுதேவனூர் உள்ளிட்ட சேர்ந்த பொதுமக்கள் ஆடுகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி சென்றனர். புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்த மாக இருந்தது.

    இந்த நிலை யில், தற்போது புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதுடன், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை என்பதால், இன்று வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடந்தது. ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு க்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கம்போல் வார சந்தையில் ஆடுகள் ஒன்று முதல் ரூ. 1.50 லட்சம் வரை ஆடு விற்பனை ஆவது வழக்கம். இப்பொழுது தீபாவளி பண்டிகை வருவதால் இன்று ஒரே நாளில் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
    • ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். சாதாரணமாக ரூ.5000-க்கு விற்பனையாகும் ஆடுகள் இன்று ரூ.7000 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

    ஆனால் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரூ.400-க்கு விற்கப்படும் கோழி ரூ.300 மற்றும் அதற்கு கீழ் விற்பனையானது. வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு கோழிகளை விற்றுச்சென்றனர். இதேபோல் சேவல்களும் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.

    கட்டுசேவல்கள் ரூ.2000 முதல் ரூ.10000 வரை விற்கப்பட்டது. மொத்தத்தில் இன்று மட்டும் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.

    முன்னதாகவே மணப்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சந்தை நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவு வியாபாரிகள் சென்றுவிட்டனர். இதனால் ரூ.4 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு குறைவாகவே ஆடுகள் விற்பனையாகின.

    நேற்று இப்பகுதியில் பெய்த மழை காரணமாக சந்தைப்பகுதி சகதிகாடாக இருந்தது. இதனால் சாலையோரங்களிலேயே வைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக தீபாவளிக்கு முன்னதாக பண்ணை அமைத்து தொழில் செய்பவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்குவது வழக்கம். அதனை சந்தையில் வைத்து வழங்கி அவர்களுக்கு உணவும் வழங்கினர். இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கமாக ஆட்டுச்சந்தைக்கு 200 ஆடுகள் வரை கொண்டு வரப்படும். இன்று சுமார் 1000 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் கிடா எனப்படும் கருப்பு நிற ஆடு ரூ.25ஆயிரம் வரை விற்பனையானது.

    மற்ற ஆடுகள் ரூ.10ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டி ரூ.2000 முதல் விற்பனையானது. பழனி, தொப்பம்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். மார்க்கெட்டில் இன்று சுமார் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • ஆடு ஒன்று, 6,700 முதல், 7,200 ரூபாய் வரை விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் வாரச்சந்தைக்கு, ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று, 600-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், கொண்டு ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு வந்தனர்.

    ஆடுகளை வாங்க கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    ஆடு ஒன்று, 6,700 முதல், 7,200 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையொட்டி ஆடுகளை வாங்குவதற்கு உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் பலரும் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் வியாபாரிகளும் ஆடுகளை போட்டிபோட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் ஆடு குறைந்த விலையாக ரூ.6000 ரூபாயும் அதிகபட்சமாக ரூ.23,000 வரை விற்பனை ஆனது. ஆட்டுக்குட்டி ரூ. 2000 முதல் ரூ.6000 வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை யொட்டிவழக்கமாக சந்தைக்கு வரும் ஆடுகளை விட கூடுதலான ஆடுகள் சந்தைக்கு வந்தன. இதனால் சுமார் 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கூறினார்.

    • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக செஞ்சி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சியில் சந்தையில் கருவாடுஆடுகள் அதிகளவில் விற்பனையாகும். எனவே இந்த சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற பகுதியில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதையொட்டி இன்று கூடிய சந்தையில்கூடுதலாக ஆடுகள்விற்பனைக்கு வந்தது. ஆடுகளைவாங்குவத ற்காக பெங்களுர் மற்றும் சேலம், திருவ ண்ணாமலை, வேலுர், தருமபுரி,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என கருதி சுற்றுவட்டார கிராம பகுதி யில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் அதன்படி அதிக மான ஆடுகள் விற்பனைக்கு வந்த தால்தான் விலையும் சிறிதுகுறைவாகவே இருந்தது. பக்ரீத்பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 விற்கபட்டது. இந்த வார சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேப்பூர் ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • பருவமழை போதிய அளவு இல்லாததாலும் விவசாயத்தில் வருமானம் இன்றி ஆடு வளர்ப்பது அதிகப்படியான தொழிலாக செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது.

    வேப்பூரை சுற்றியுள்ள மங்களூர், பெரியநெசலூர், காட்டுமையிலூர், கழுதூர், சிறுப்பாக்கம், கொத்தனூர், தியாகதுருகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தற்பபோது பருவமழை போதிய அளவு இல்லாததாலும் விவசாயத்தில் வருமானம் இன்றி ஆடு வளர்ப்பது அதிகப்படியான தொழிலாக செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனை செய்ய வேப்பூர் வார ஆட்டு சந்தைக்கு எடுத்து வருவது வழக்கம். வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) அன்று பக்ரீத் பண்டிகையை என்பதால் இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க சென்னை, மதுரை, திருச்சி தேனி, நாகை, கோவை , விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளும், பக்ரீத் பண்டிகை நேரடியாக முஸ்லிம் சகோதரர்களும் ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்க பெருமளவில் வந்து குவிந்தனர்.

    மொத்தமாகவும், சில்லரையாகவும் ஆடுகளை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது கொடி ஆடு, கருப்பாடு, வெள்ளாடு, ஜமுனா பூரி, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளாடு, உள்ளிட்ட 10 விதமான ஆட்டு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஆட்டு சந்தையின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆட்டின் விலை சுமார் 5 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணி முதல் 7 மணி வரை 4 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    வழக்கத்தைவிட கூடு தல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆவதாக ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.வளர்ந்த கிடா ஆடுகள் அதிகப்படியான விற்பனைக்கு வந்தது. இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பன செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.
    • பக்ரீத் பண்டிகையைமுன்னிட்டு அதிகாலையிலேயே வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனையானது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந்தேதி பக்ரீத்பண்டிகை கொண்டாடப்படஉள்ள நிலையில் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் இன்று அதிகாலை 4 மணி முதலே வியாபாரிகள் வரத்தொடங்கினர்.

    திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்தனர். சந்தையில் வெள்ளாட்டுகிடாய் ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளாடுகள் ரூ.5ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டிகள் ரூ.2ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    இன்று மட்டும் சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான அளவில் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அய்யலூர் ஆட்டுச்சந்தையிலும் அதிகாலை முதல் ஆடுகள், கோழிகள் ஆகியவற்றை வாங்க பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்தனர். வழக்கமாக அய்யலூர் ஆட்டுச்சந்தை 9 மணிவரை நடக்கும். பக்ரீத் பண்டிகையைமுன்னிட்டு அதிகாலையிலேயே வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனையானது.

    திருச்சி மாவட்டம் புத்தாநத்தம், இளங்காகுறிச்சி, துவரங்குறிச்சி மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டனர். செம்மறி ஆடுகள் ரூ.16 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    வியாபாரிகளுக்கு அதிகளவில் லாபம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பக்ரீத் பண்டிகை மட்டுமின்றி ஆடிமாத பிறப்பை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் ஆடுகள் பலியிட்டு வழிபடுவது வழக்கம். அதற்காகவும் ஆடுகள் விற்பனை களைகட்டியது. நாட்டுக்கோழி ரூ.300 வரையிலும், கட்டுச்சேவல்கள் ரூ.3ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரையிலும் விற்பனையாகின.

    சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இங்கு வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தக்கூட முடியாமல் சிரமம் அடைந்தனர். இதனால் சந்தை நடந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×