search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு கூட்டம்"

    • 2022-23ம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதல மைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
    • முன்னேற்பாடுகள் குறித்து சமந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2022-23ம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதல மைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சமந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் சாந்தி, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தருமபுரி மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தலைவர் பாஸ்கர், கால்பந்து விளையாட்டு சங்கத்தலைவர் ஆனந்தன், இறகுபந்து விளையாட்டு சங்கத்தலைவர் கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார். சேலம் மண்டல பாது காவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜாங்கம் (நாமக்கல்), கஷ்யப் ஷஷாங் ரவி (சேலம்), சுதாகர்(ஆத்தூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் வனப்பகு–திகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு, மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி வனப்பரப்பை உயர்த்து–வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில், தமிழக வனப்பகுதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தின் மொத்த புவி பரப்பில் 15 சதவீதம் வனப்பரப்பு பகுதியாகும்.

    இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முதல் அமைச்சரின் எண்ணத்தை நிறைவேற்றிட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி ஆகியோர் மரக்கன்று களை நட்டனர்.

    பின்னர் கருத்தியல் விளக்க மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரம் நடும் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய தி.மு.க செயலாளருமான ஆர்.எம்.துரைசாமி மற்றும் வன சரகர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர்.

    சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவு நீர் வாறுகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்-குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த குறைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து சரி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முறையிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில், மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    இதில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழை நீரை சேகரிக்க நடைபெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, அலுவலர்களுடன் இணைந்து, அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு பணிகளான தடுப்பணை கட்டும் பணிகள், குடிமராமத்து செய்யப்பட்ட ஊரணிகள், மழை நீரை உறிஞ்சும் அகழிகள், நீரினை மறுசுழற்சி செய்யும் வடிவமைப்புகள் ஆகியவற்றை மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஜமீர் பகவான், செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நிலுவையில் உள்ள அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • உதவிக் குழுக்கான கடனுதவிக்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி , நாகைமாலி ,பாலாஜி , ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றுது. இக்கூட்டத்தில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் 2014-2015 முதல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான (பொதுத்துறை நிறுவனங்கள்) உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் , தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் , தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள பத்தி அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் இவ்ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு

    ரூ.8,93,565 லட்சம் தாட்கோ மானிய கடனுதவியுடன், ரூ. 32,44,258 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ. 2.50 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்கான கடனுதவிக்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு சிறப்பு பணி அலுவலர் ராஜா, கூடுதல் கலெக்டர் (வருவாய்)சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
    • கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வரத்தால் கூழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நள்ளிரவில் கலெக்டர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று பார்வையிட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.வி.பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வரத்தால் கூழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நள்ளிரவில் கலெக்டர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பபட்டனர். அவர்களிடம் பேசிய கலெக்டர், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களுக்கு உணவு வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    • மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்தும், திட்ட பயனாளிகளின் வீடுகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாதிரி கிராமமான சிறுகரம்பலூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் குறித்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கோரிக்கை களை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.

    • சங்கராபுரத்தில் மேற்கு ஒன்றிய பா.ஜனதா பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் கொசப்பாடி, எஸ்.வி.பாளையம் மற்றும் பல கிராமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். இதில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பாஸ்கரன், கோவிந்தன், கொசப்பாடி கிளை தலைவர் மதி மற்றும் எஸ்.வி.பாளையம் கிளை தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மயிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில்ஒன்றிய குழுபெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புனிதா ராமஜெயம் முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டபணிகள், பொது நிதி, 15-வது மானிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×