search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பயிற்சி வகுப்பு"

    • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
    • மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் நாளை (30-ந் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும். இப்பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டித் தேர்வர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். இது தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை தொழில்சார் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் கலைச் செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.

    கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 28-ந்தேதி முதல் நேரடி வகுப்புகளாக தொடங்கப் பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடை பெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிழ்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (0452 -2564343) என்ற எண்ணிலோ அல்லது (peeomadurai27@gmail.com) மெயில் ஐ.டி.யில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து தேர்வுகளுக்கும் தயாராக ஏதுவாக புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெட் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 6,553 இடைநிலை ஆசிரியர் பணிக்கும், 3,587 பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் நடப்பு ஆண்டில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இரு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தேர்விற்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும். மையங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங் களில் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது.

    'டெட்' பேப்பர் -1 மற்றும் 2 ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை (திங்கட்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல் அறிய வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் உதவியாளரை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்ப யிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது:-காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    மாதிரித் தேர்வு கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

    • பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • இத்தேர்வுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும்.

     திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் 2-ம் நிலை காவலர்கள் பணிக்கு 2,600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இந்த தேர்வுக்கு www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 4-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, 0421 2999152 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • இந்த பயிற்சி வகுப்பை விருதுநகர் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2-வில் சிறப்பாக படித்த 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    இதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    பின்னர் அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    பயிற்சி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரில் பயின்று வரும் 4 மாணவர்கள், தாங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற விதம், அதற்காக தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டனர்?, படிப்பதற்கான வழிமுறைகள், தேர்வை கையாண்ட முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பயிற்சி மைய ஒருங்கி ணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் நான்தோறும் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும்
    • மாணவர்கள் படிக்கும் போது, அனைத்து பாடக்குறிப்புகளுக்கும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலலவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.சி (எம்.டி.எஸ்) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை நேற்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாட குறிப்புகள் அடங்கிய இலவச கையேட்டினை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயில்பவர்களுக்கு ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஒரு தேர்வுக்கு மட்டும் படிக்காமல், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுதினால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மேலும், மாணவர்கள் நான்தோறும் செய்தித்தாள்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும். செய்தித்தாள்களில் தற்கால நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு தொடர்பான செய்திகளை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது, அனைத்து பாடக்குறிப்புகளுக்கும் தனித்தனியாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு படிக்க வேண்டும். மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து போட்டித் தேர்வுக்கான வினாக்களை விவாதம் செய்ய வேண்டும். அவ்வாறு விவாதம் செய்யும் போது கற்றலில் சோர்வடையாமலும், கற்றது மறக்காமலும் இருக்கும். தேர்வு மையங்களில் சொல்லித்தரும் பாடங்களைத் தவிர நாம் தனியாக அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும்.

    இங்கு அனனத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அதிகளவில் கல்நதுகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வலுவலகத்தின் வாயிலாக இதுவரை 100க்கும் அதிகமானோர் போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள், மாத இதழ்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்கான குறிப்பேடுகள் உள்ளதால், மாணவ, மாணவிகள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் அரசு தேர்வுக்கு படித்தாலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டே அரசு தேர்வுக்கு படிக்கலாம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம், மோனிஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்படுகிறது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி பாரதிபுரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

    சங்கத்தின் தலைவர் அங்குராஜ் தொடங்கி வைத்து பேசினார். அகடாமி நிறுவனர் முருகதாசன் வரவேற்றார். டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் பெற்றுள்ள விரிவுரையாளர்களான முகில், வீரையா, செல்வி ஆகியோர் பயிற்சி வகுப்பினை நடத்தினர்.

    சுமார் 45 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சமுத்திரவேல், ரோட்டரி நிர்வாகிகள் முருகானந்தம், வினோத்குமார், ஸ்டார் ஹெல்த் வெங்கடேஷ், பத்திர எழுத்தர் ராஜாமணி, விக்ரம் முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் கந்தசாமி, அமுதா ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டித்தேர்வுகள் எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்குகிறது
    • வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு ஆகியவற்றில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்க உள்ளது.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை இன்று மாலைக்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் போட்டித்தேர்வு விண்ணப்பித்தற்கான நகல், ஆதார் கார்டு, புகைப்படங்கள் ஆகியவற்றை பயிற்சி வகுப்புக்கு வரும் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

    • குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
    • வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 2 ஆம் நிலைக் காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 2 ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடத்துக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

    ஆக. 3 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது விவரங்களை வரும் 2-ந் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்.

    இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நகல், ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்.

    • மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இணையவழியில் (https://www.tnusrb.tn.gov.in/) வருகிற 15.8.2022 வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (29-ந்தேதி) தொடங்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்களுக்காகவே 20.3.2022 அன்று தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், அதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாகும்.

    தொலை தூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனை பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×