search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரசன்"

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முத்தரசனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து உள்ளார்.

    அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியதாக புகார்
    • சக்தி சேனா அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்

    கோவை, செப்.9-

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சக்தி சேனா அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

    அவரது இந்த பேச்சு இந்து மதத்தினரை அவமதிப்பதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது.
    • வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் டில்லி பாபு, கமல் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    கங்கை ஆற்றில் குளிக்க செல்வதற்காக பாதுகாப்பு அரணாக இருப்பதற்காக சந்தன கொலுவை கொண்டு பிள்ளையாரை உருவாக்கி நான் குளித்துவிட்டு வரும் வரை யாரையும் இங்கு அனுமதிக்க கூடாது என்று பார்வதி தாயார் உத்தரவிட்டு சென்றார்.

    எம்பெருமான் சிவன் வருகை புரிந்த போது பிள்ளையார் சிவனை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை துண்டித்தார். நான் உருவாக்கிய எனது பிள்ளையை சிவன் கொன்று விட்டாரே என்று ஆக்ரோஷம் கொண்டு காளி தேவியாக உருவெடுத்து வேகமாக புறப்பட்டார் தாய் பராசக்தி. பராசக்தியின் கோபத்தை அடக்குவதற்கு உடனடியாக சிவன் ஒரு தலையை கொண்டு வாருங்கள் என்று ரிஷிகளுக்கு உத்தரவிடுகிறார். காடுகளில் தேடிச் செல்லும்போது முதலில் தென்பட்டது யானையின் தலை. அதை கொண்டு வந்து பொருத்தி விட்டனர்.

    ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. அன்று முதல் பிள்ளையார் சதுர்த்தி விழா அந்த திதியிலேயே இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்து மதத்தின் வரலாறு தெரியாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது. வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    அத்துடன் பார்வதி அம்மா கங்கையில் குளிக்க சென்றுள்ளார். அவர் ஆண்டு முழுவதும் பல மாதகாலமாக குளிக்கவில்லை என்றால் உடலில் அழுக்கு தானே வரும். அந்த அழுக்கை முழுவதும் ஒன்று திரட்டி ஒரு பொம்மை செய்தார்.

    அந்த பொம்மை விநாயகராக மாறிவிட்டது. அந்த அழுக்கை நாங்கள் ஏன் கும்பிட வேண்டும். அந்த அழுக்குக்கு நாங்கள் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கூறி இந்துக்கள் மனதை விநாயகர் பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மிகவும் கேவலமாக பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.

    தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.

    கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.
    • அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் பா.ஜனதாவின் கையில் தான் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. மத்தியில் மதவெறி, மத மோதலை உருவாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபடுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ். ஆக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கெல்லாம் மாற்றம் வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் மூலம் பா.ஜனதா ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

    இதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும். அதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை மாநில மாநாட்டில் நிறைவேற்றியுள்ளோம்.

    நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், கட்டுமான பொருட்கள், மருந்து, மாத்திரைகள் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மிகக்கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த சட்ட திருத்தத்தால் மின்கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற 30-ந் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

    பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இந்த மாற்றங்கள் படிப்படியாக தொடரும். பா.ஜனதாவை விட்டு மாநில கட்சிகள் வெளியேறுவார்கள். அதன் தொடக்கம்தான் பீகார்.

    அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் பா.ஜனதாவின் கையில் தான் உள்ளது. அ.தி.மு.க. சுயமாக செயல்படாத காரணத்தால் பா.ஜ.க. அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்திருக்கவேண்டும்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    பிரதமர் நரேந்திரமோடி தான் ஆட்சிக்கு வந்தஓராண்டிற்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினார். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்திருக்கவேண்டும். ஆனால் தற்போது வேலையில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

    ரெயில்வேதுறையில் 90ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தி 4 ஆண்டுக்கு வேலை வாய்ப்பு என்று இளைஞர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    தி.மு.க கடந்த ஓராண்டுக்கு முன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றவேண்டும் என கூறும் தமிழக பா.ஜ.கவினர் கடந்த 8 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றித்தராமல் உள்ள பிரதமர் மோடியிடம் அதனை போராடி பெற்றுக்கொடுக்க வேண்டும். இலங்கையில் விலைவாசி உயர்வுக்கு அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக்கூறி அந்த நாட்டில் மதம், இன, பாகுபாடின்றி போராட்டம் நடத்தினர்.

    இதனால் ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதுபோன்ற ஒரு போராட்டம் இந்தியாவில் நடைபெறாது என நரேந்திரமோடி நினைக்கிறார். நமது நாட்டில் மக்கள் மிகப்பொறுமையாக உள்ளனர். தாங்கி கொள்ள முடியாத விலைவாசி உயர்வு, வேலைஇல்லா திண்டாட்டத்தை சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர் என அர்த்தமில்லை.

    தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது இலங்கையை போல் இங்கும் ஒரு போராட்டம் நடக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×