search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமம்"

    • எங்கள் கிராமத்தில் வேலை இல்லாமல் அவதிப்பட்டோம்.
    • உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ஆலங்குடி அருகே பிராந்தை கிராமத்தில் தற்போது சம்பா நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை, கூலி உயர்வு போன்ற காரணமாக நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 15 தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு விவசாயிகள் இப்பகுதியில் சம்பா விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக விவசாய நடவு செலவு 30 சதவீதம் வரை குறைவதாக தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகை காரணமாக உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கும்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வடமாநில தொழிலாளர் கூறும்போது:-

    எங்கள் கிராமத்தில் வேலை இல்லாததால் அவதிப்பட்டோம்.

    அதனால் இங்கே வந்து வேலை செய்கிறோம்.

    கடந்த 15 நாட்களாக வேலை செய்கிறோம்.

    இன்னும் இங்கு ஒரு மாதம் வேலை இருக்கு. அதன் பரிறகு சொந்த ஊருக்கு கிளம்பி விடுவோம் என்றனர்.

    • வேளாண் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவிகள் மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தொடக்கவிழா நடைபெற்றது.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் பட்டப்படிப்பு இறுதிஆண்டு பயின்று வரும், மாணவ-மாணவிகள் வேளாண் தொழிலில் நேரடி அனுபவம் பெரும் பொருட்டு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி புத்தூர் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் தங்கிபயிற்சிபெறும் திட்டம் தொடக்கவிழா ஊராட்சி மன்ற தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டி.ஜெயசீலன் மற்றும் மணிவண்ணன் சிறப்புறையாற்றினர். தொடர்ந்து மாணவிகள் மரக்கன்றுகள், நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விழாவில் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், விவசாயிகள் சக்திவேல், பிரதாமசந்திரன், மகாலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    வேளாண் புல இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் 75 நாட்கள் அக்கிராமத்தில் தங்கி வேளாண் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்ள உள்ளனர்.

    • மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
    • கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், செட்டிபுலம், செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை, நெய்விளக்கு ஆகிய கிராம ங்களில் சிமெண்ட்டுடன் கலக்கும் வகையிலான பெருமணல்கள் உள்ளன.

    இவைகளையே, அப்பகுதி மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்தனர். ஒரு டிராக்டர் ரூ.1500-க்கு கிடைத்து வந்தது.

    ஆனால் தற்போது இவைகளை பயன்படுத்தக்கூடாது, எடுத்தால் வழக்கு போடப்படுகிறது என அறிவிப்பு வந்தது.

    இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.

    அவைகள் விலையும் அதிகமாகும்.எனவே, கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக இருக்கும்.

    மேலும், மணல் எடுக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயருமே தவிர வேறு எந்த பாதிப்பும் இருக்காது.

    எனவே, மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் இளம்பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார்
    • நாளை (16-ம் தேதி) அவர் பணிக்கு சேர வேண்டும். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் பிச்சவிளையை சேர்ந்தவர் சரவணன் (வயது 32).

    இவர் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது திருமணத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. நாளை (16-ம் தேதி) அவர் பணிக்கு சேர வேண்டும். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் கருங்கல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணம் ஆன ஒரே மாதத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
    • காவிரி மற்றும் கொள்ளிட கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

    இதனால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிட கரை ஓரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

    மேலும் மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இலவச அழைப்பு எண்ணான 1077, தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் 50 குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர், நஞ்சியம்பாளையம், தொப்பம்பட்டி, கெத்தல்ரேவ், நவனாரி, பெரிய குமாரபாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமங்களுக்கு சுண்ணாம்பு காடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த 50 குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மின்மோட்டார்களை சரி செய்து உடனடியாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என காவிரி கூட்டு குடிநீர் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • கடற்கரை மணலை அள்ளுவதால் ஏற்படுகின்ற கதிரியக்கப் பாதிப்புகளால் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணம்
    • வருவாய் கிராமங்களிலுள்ள 1,144 ஹெக்டேர் நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்

    கன்னியாகுமரி :

    காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக மணல் ஆலைகள், கடற்கரையிலிருந்து கனிமங்கள் அள்ளியதால் கடலோர கிராமங்கள் கடல் அரிப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 200 மீட்டர் கடற்கரை கடலுக்குள் மூழ்கி விட்டது. கடலோர மக்களின் குடியிருப்புகள் பல ஊர்களில் அழிந்துவிட்டது.

    கடற்கரை மணலை அள்ளுவதால் ஏற்படுகின்ற கதிரியக்கப் பாதிப்புகளால் கடலோர மக்கள் மட்டுமல்லாமல் கடற்கரை கிராமத்தின் அருகில் உள்ள விவசாய மக்களும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் இயற்கை அரணாக இருக்கும் மணல் குன்றுகளை அழிப்பதால் தென்னகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடல்நீர் உட்புகுந்து விவசாயமும் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணமான மணல் ஆலை மணல் அள்ள அனுமதிக்கக்கூடாது என்று குமரி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக அரசு கடலோரங்களில் மணல் அள்ள குறும்பனை முதல் நீரோடி வரையுள்ள கீழ்மிடாலம், மிடாலம், இனையம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களிலுள்ள 1,144 ஹெக்டேர் நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். மக்களைப் பிரித்தாள வேண்டும் என்ற கொள்கையுடன் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

    எனவே குமரி மாவட்ட கடற்கரையையும் விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் இந்திய மணல் ஆலைக்கு மணல் அள்ள வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    • உடன்குடி பகுதியில் பலாப்பழங்களை கிராமம் கிராமமாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
    • தற்போது ஒரு கிலோ ரூ.20-க்கு பலாப்பழம் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    உடன்குடி:

    தற்போது பல வகையான பழங்களின் விற்பனை சீசன் தொடங்கிவிட்டது. மாம்பழம், அன்னாசி பழம், தர்பூசணி, கொய்யாபழம் உட்பட பல வகையான பல்வேறு பழங்களின் சீசன் தொடங்கி வீதி வீதியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் பலாப்பழம் விற்பனையும் ஒன்றாகும். உடன்குடி பகுதியில் பலாப்பழங்களை மினி லாரி, தள்ளுவண்டி போன்ற பல்வேறு வாகனங்களில் ஏற்றி கிராமம் கிராமமாக கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கின்றனர்.

    இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். முக்கனிகளில் ஒன்றான கனி பலாப்பழம் ஆகும். தற்போது குறைந்த விலையில் அனைவரும் வாங்கும் படியாக விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

    ×