search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கும் கவர்கள்"

    • மக்கும் குப்பையான மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், கரும்புச்சக்கைகளால் தயாரிக்கப்பட்ட பைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • வியாபாரிகள் மக்குகின்ற குப்பைகளை பயன்படுத்தினால் மட்டும்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள கோட்ட உதவி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், திருவெறும்பூர் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த உதவி ஆணையர்கள் தலைமையில் காலை நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட், சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

    மேலும் மக்காத குப்பையான பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு வழங்காதீர்கள் என்று அறிவுரை வழங்கியதோடு, மக்கும் குப்பையான மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், கரும்புச்சக்கைகளால் தயாரிக்கப்பட்ட பைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து இதுபோல விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம். வியாபாரிகள் மக்குகின்ற குப்பைகளை பயன்படுத்தினால் மட்டும்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். அதனால்தான் இத்தகைய பைகளை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறோம்.

    மக்காச்சோளம் மற்றும் கரும்பு சக்கைகளால் தயாரிக்கப்படும் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினால் அது மக்கும் குப்பைகளாக மாறிவிடும் இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. மேலும் சுகாதாரமான வாழ்க்கையை நாம் வாழலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×