என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உறுப்பினர்"
- சாயல்குடி அருகே நரிப்பையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே நரிப் பையூர் கிராமத்தில் முதுகு ளத்தூர் சட்டமன்றத்தொ குதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற் றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கி ணைப்பாளர் பசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தொகுதி செய லாளர் வெங்கடேஷ், ஒன் றியச் செயலாளர் பழனி முருகன், பென்னகரம் ராஜ பாண்டி, ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு கட்சியில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் ராஜ பாண்டியன், ஒன்றிய தலை வர் விமல்ராஜ், தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருள் ராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் சக்திவேல், நரிப்பையூர் சிவா, கிளைச் செயலாளர் அந்தோணி ஜேசுபாலன், கிளைத்தலை வர் சேசு ரமேஷ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கள் பங்கேற்றனர்.
- சோழவந்தான் பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
- ஆர்.பி. உதயகுமார் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.
சோழவந்தான்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் கிழக்கு, மேற்கு, கச்சிராயிருப்பு, தென்கரை பகுதிகளில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
முகாமிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் மேலக்கால் கிழக்கு கிளை கழகத்திற்கு ராஜ பாண்டி, மேற்கு பகுதிக்கு காசிலிங்கம், கச்சிராயி ருப்புபகுதியில் அவைத் தலைவர் முனியாண்டி, தென்கரையில் ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டில் உறுப்பினர்கள் முகாமில் சேர்ந்தனர்.
இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.
முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், தமிழரசன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப் பட்டி வடக்கு காளிதாஸ், செல்லம்பட்டி எம்.வி.பி. ராஜா, மதுரை மேற்கு-தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், அம்மா பேரவை வெற்றிவேல், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி கேபிள் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்க ளும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதியானவர்கள். இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
வேட்புமனுக்களை நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் செல்வக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரகப் பகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி திட்ட அலுவலர் செல்வி நிய மிக்கப்பட்டுள்ளார். நகர்ப்பு றத்தில் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்கு நர்(தணிக்கை) உமா மற்றும் பேரூராட்சி மாவட்ட ஊராட்சி செயலர் ரவிச்சந்தி ரன் ஆகியோர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்க ளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் தங்களின் வேட்புமனுவினை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 12-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு பரிசீ லிக்கப்படும். வேட்புமனு வினை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்புவர்கள், அதற்கான அறிவிப்பை 14-ந்தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவல ரிடம் வழங்கலாம்.
தேர்தல் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
- சோழவந்தானில் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி-உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தில் டான்பெட்டின் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம், உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. துணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், வாடிப்பட்டி கள அலுவலர் தங்க நாககுரு மற்றும் ராமலிங்கம் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டர்.
வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள சோழவந்தான் 1, 2 திருவேடகம், தென்கரை , இரும்பாடி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி, மன்னாடிமங்கலம், சித்தாலங்குடி , கச்சைகட்டி , ராமையன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, நீரேத்தான் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார்.
- காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது .
திருப்பூர் :
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் கடிதத்தின்படி,மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான சாதாரணத் தேர்தல்களைநடத்திடுவதற்கு அறிவுரைகள் வரப்பெற்றுள்ளது. இதில் முதல் கட்ட பணியாக மேற்படித்தேர்தலுக்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிக்கான வாக்காளர் பட்டியலை 1999ம்ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்டத் திட்டமிடும் குழு உறுப்பினர்கள்தேர்தல்) விதி 10ல் குறிப்பிட்டுள்ளவாறு தயாரித்து வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழுஉறுப்பினர்கள் தேர்தல்) விதிகள் 1999-ன் விதி 6ன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார். மேற்படிதேர்தலுக்கான வாக்காளர் பட்டியலினை இணைப்பு -அ-வில் உள்ளவாறு படிவம் -1தயாரித்து, இணைப்பு-ஆ-வில் உள்ள அறிவிப்பில் (படிவம்-2) வெளியிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை 2.5.2023 அன்று காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அறை எண்: 238 –ல் மாவட்ட பதிவு அலுவலர் மற்றும்மாவட்ட கலெக்டரால் வீனித்தால் வெளியிடப்பட உள்ளது .
- தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு, வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன், மற்றும் கிளைச் செயலாளர்கள், அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முத்து, துணைச் செயலாளர் தங்கலட்சுமி, பாரதிதாசன், காசிலிங்கம், தொ.மு.ச. அவைத் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அபிராமத்தில் நடந்த தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு நகரச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தொகுதி பொறுப்பாளர் எரிக்ஜூடு முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட முஷ்டகுறிச்சியில் ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமையிலும், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருநாழியில் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
சோழவந்தான்
வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா,பொதுக்குழு நாகராஜ், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, இணை செயலாளர் வனிதா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், கணேசன், சோழவந்தான் நகர இளைஞரணி மணி, எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
- இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
மயிலம் அருகே தீவனூர் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சேதுநாதன், மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில். தலைமை கழக தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர் சேர்க்கைகான படிவத்தை புதிய உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதில் 17 ஊராட்சிகளில் இருந்து தி.மு.க.-வில் சேர்வதற்க்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட. ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ் வலியுறுத்தல்
- செயல்படாத நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சார்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டார். மாவட்ட அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், நாகர்கோவில் மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு பூத் கமிட்டி இறுதி செய்யப்படுகிறது. பூத் கமிட்டி அமைத்துள்ள பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க.வினர் மேலும் தீவிரபடுத்த வேண்டும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தலா 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது நமது இலக்காகும். அந்த இலக்கை அடைய நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
செயல்படாத நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே ஒரு சில நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.
- தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட, தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று திருநகரில் நடை பெற்றது. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
புதிய உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். கட்சி கொள்கைகளை கூறி அதிக இளைஞர்களை உறுப்பி னர்களாக்க வேண்டும். தி.மு.க.வின் திட்டங்களை பொது மக்களிடம் தெரி வித்து வீடுகள் தோறும் பாரா ளுமன்ற தேர்த லுக்கான பிரசாரத்தை தொடங்குங்கள்.
விரைவில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மகளிர்கள் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்களாக சேர்வதற்கு முன் வரு வார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் மாநிலம் முழுவதும் 1 கோடி புதிய உறுப்பி னர்களை சேர்க்க கட்சியின் தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாம் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, வட்டச் செயலாளர் சாமி வேல், மாநில நிர்வாகி கொடி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார்
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க.வில் புதிய உறுப்பி னர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் கோனை ஊராட்சி அப்பம்பட்டில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க. வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் செஞ்சி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அஞ்சாஞ்சேரி சரவணன் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வில் இணைந்த சரவணனுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழு மலை விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, துணை செயலாளர்கள் மதியழகன், அனுசுயா மணிபாலன், பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதி நிதிகள் குணசேகரன், கோடீஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் ஜம்போதி பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டி ருந்த நீர்மோர் பந்தலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, ரொட்டி, நீர்மோர் ஆகிவற்றை வழங்கினார்.
- தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளர்களா மணிமாறன் கலந்து கொண்டார்.
திருமங்கலம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது தொடர்பான கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்குமாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறன், வர்த்தகர் அணி செயலாளர் ராமர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பேசுகையில், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியம் மற்றும் ஒன்றிய செயலாளருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசளிக்கப்படும்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கடந்த விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தான் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுதந்தோம். வருகிற எம்.பி. தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு திருமங்கலம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுதரவேண்டும் என்றார்.
தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர்கள் அழகா்சாமி, பால்பாண்டி, ராஜசுலோசனா, பொருளாளர் தேசிங்குராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன் ஹரிகரன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்