search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறை அலுவலர்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • கன்னியாகுமரி மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந் தாய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பொது சுகாதாரத்துறை யின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் முககவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பினை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்த காலத் திற்குள் முடிக்க சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டு மான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்தத்தாரர்களை இனம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி சார்பாக செயல்படுத்தி வரும், கூட்டு குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தி னரால் குழாய்கள் அமைக்க தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்றவாறு சீர்படுத்தி, சாலை விபத்தினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

    குழாய் அமைக்கும்போது தோண்டப்படும் குழிகளால் ஆபத்து ஏற்படாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். தங்கள் பணிகளில் மெத்தன போக் காக இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத் தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    பேரூராட்சிகளில் நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு தங்கும் இடங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செயல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படுவ தோடு, ஒரு மாத காலம் கடைகளை சீல் வைக்க வேண்டும்.

    அனைத்து துறை அலுவலர்களும் நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முழு முயற்சியோடு பாடுபட வேண்டும். பணிகளில் எவ்வித சுணக்கமும், தொய்வுமின்றி செயல்பட வேண்டும். தவறும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×