என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உறுதிமொழியேற்பு"
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நா ளை முன்னிட்டு தேசிய ஒரு மைப்பாடு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது நாட்டில் பெருகிவரும் சாதி, மத, மொ ழி பாகுபாடுகளை எதி ர்க்கும் வகையில் வன்மு றையில் ஈடுபடாமல் மக்களின் உணவுப்பூர்வ ஒற்றுமைக்கு பாடுபடவே ண்டி தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகி ருஷ்ணன், உதவி பொது மேலாளர்( ஐ.டி) பாலமுருகன்,
முதுநிலை மேலாளர்( மனித வளம்) சிவக்குமார் ,முதுநிலை மேலாளர்( மெக்கானிக்கல் )அசோகன், மேலாளர் (மனித வளம் )வெங்க டேசன் ஆகியோர் தலைமை யில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று எவ்வாறு மாசுபடுகிறத. அதனால் விளையும் தீமைகள் யாவை என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், புதுக்கோட்டை திலகர் திடல் ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் மல்லிகாகணேசன் தலைமை வகித்தார்.
மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தீபாவளி பலகாரம் அடங்கிய பைகளையும், மாசில்லா தீபாவளி கொண்டாட்டம் என்ற பிரசுரங்களையும் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலருமான ஏவிசிசி கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மாசில்லா தீபாவளியை மனதார கொண்டாடுவோம் என்று
பெற்றோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு குழந்தையும் ஆர்வத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை பார்வையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.
- சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- பெரியார் பிறந்த நாள் விழா
அரியலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பெரியார் பிறந்த நாள் விழா நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் போலீசாரால் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு நடந்தது
- கலெக்டர் தலைமையில் நடந்தது
கரூர்:
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நகராட்சி ஆணையர் ச தலைமையில் நடைபெற்றது.
கரூர்:
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 560க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர், தூய்மையான நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசின் ஆணைக்கிணங்க தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையர் சுப்புராம் தலைமையில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் நகராட்சி பொறியாளர் ராதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், கோவிந்தராஜ், மாசி மற்றும் ஆசிரியர்கள் நகராட்சி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்