search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி"

    • துணை ெபாதுச் செயலாளர் பதவி ராஜன்செல்லப்பாவுக்கு கிடைக்குமா? என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணைப்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு இந்த பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.

    இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    மேலும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மதுரை மாநகர மேயராகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவி இவருக்கு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • 4 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவுவின்படி இன்று தேர்தல் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியற்கு உட்படுத்த துவரிமான் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவளவு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்ல மரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது.

    கொரோனா மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகள் நுண்பார்வையாளர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் சுமதி இறந்ததால் அந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இது பொது பெண்கள் வார்டாகும். இங்கு 4 பெண்கள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் மொத்தம் 452 வாக்குகள் உள்ளன. இதில் 253பேர் பெண் வாக்காளர்கள், 199 பேர் ஆண் வாக்காளர்கள்.

    இந்த வாடுக்கான தேர்தல் செல்லம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    மதுைர மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லமரம் பஞ்சாயத்தில் காலியாக உள்ள உறுப்பினர் தேர்தல் இன்று நடந்தது. முத்துலிங்காபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. 146 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வுடன் வார்டு மக்கள் திரளா னோர் வாக்களித்தனர்.

    திருப்பங்குன்றம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட துவரிமான் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் துவரிமான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்றது.

    இங்கு உறுப்பினர் பதவிக்கு தெய்வம், பால்பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் மொத்தம் 510 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 255 பேர் பெண் வாக்காளர்கள். இதே எண்ணிக்கையில் ஆண் வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு காமிராவில் பதிவு செய்யப்பட்டது.

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவளவு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மகேஸ்வரி, சுந்தரி ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் 494. இந்த தேர்தலை முன்னிட்டு மேலவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலை கொட்டாம்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    ×