search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 243343"

    • வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன்.
    • இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பொல்லாதவன். இப்படத்தில் தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா இணைந்து நடித்திருந்தனர். மேலும் டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

     

    இந்நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் தனுஷ் மற்றும் திவ்யாஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை திவ்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கியுள்ள படம் பேட்டைகாளி.
    • இப்படம் வருகிற 21-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்டைக்காளி. இவர் இதற்குமுன்பு தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

     

    பேட்டைக்காளி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

    பேட்டைக்காளி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திர அறிகும போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டைக்காளி படத்தில் பாண்டியாக கலையரசனும், செல்வசேகரனாக வேல ராமமூர்த்தியும், தேன்மொழியாக ஷீலா ராஜ்குமாரும், முத்தையாவாக கிஷோரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தொல். திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சினேகன் கலந்து கொண்டார்.
    • இவர் வெற்றிமாறனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி உறுப்பினர்கள் 60 நாள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதையடுத்து 50-வது நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


    கனிகா - சினேகன்

    நிகழ்ச்சியை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த சினேகன், "நல்ல கலைஞன் எந்த பிரிவினைகளுக்கும் அகப்படமாட்டான். அரசியலை சினிமாவாகவும் சினிமாவை அரசியலாகவும் பார்க்காத வரைக்கும் கலைஞன் கலைஞனாக இருந்தால் எந்த கலைஞனையும் பிரிவினைவாதத்திற்குள் கொண்டு போக முடியாது" என்று கூறினார்.


    சினேகன்

    மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "ஆரம்பத்திலேயே காஞ்சி பெரியவர் மற்றும் எழுத்தாளர் சோ ஆகியோர் கூறிய கருத்து தான் அவை. அந்த காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. அதன்பின் பண்பட்ட ஒரு பண்பாடு இங்கு சேர்ந்து அதற்கு பெயர் வைத்தார்கள் என்று அவர் படித்ததை அவர் கூறினார். அது அவருடைய கருத்து" என்று கூறினார். 

    • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.


    விடுதலை

    இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


    விடுதலை

    கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    விடுதலை

    இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது . இந்நிலையில், 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடுதலை' திரைப்படத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் கமல் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது என்று கூறியுள்ளார்.
    • இதற்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் "கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்" என்று பேசினார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.


    கமல்ஹாசன்

    இது தொடர்பாக கமல் கூறியதாவது, ""ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்" என்று கூறினார். இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    கஸ்தூரி

    அதில், "கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதிமனிதன் தன்னை ஒருபோதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் ஹோமோ சேபியன்ஸ் என்ற பெயரே இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது விடுதலை, வாடிவாசல் படங்களை இயக்கி வருகிறார்.
    • அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். மேலும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.

     

    சீமான் - வெற்றிமாறன்

    சீமான் - வெற்றிமாறன்

    இந்நிலையில் அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

     

    சீமானின் அறிவிப்பு
    சீமானின் அறிவிப்பு

    வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • சென்னையில் நடைபெற்ற ஒன் வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்துக் கொண்டார்.
    • இவரிடம் சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னையில் நேற்று கோவை சரளா, ராஜாத்தி பாண்டியன், சார்லஸ் வினோத் உள்ளிட்ட நடித்திருக்கும் ஒன் வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், எழில் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துக் கொண்டனர்.

     

    குஷ்பு
    குஷ்பு

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, 'வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்றார்.

     

    வெற்றிமாறன்
    வெற்றிமாறன்

    தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் குறித்தும், அதன் மீது வைகக்ப்படும் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "வரலாறு பற்றி ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்கமாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாற்றை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை" என்றார்.

     

    குஷ்பு
    குஷ்பு

    நீங்கள் ஏன் காவி உடை அணிந்திருக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குஷ்பு, "இதை பார்த்தால் உங்களுக்கு காவி மாதிரி தெரிகிறதா. உங்கள் அருகில் இருப்பவரும்தான் காவி உடை போட்டிருக்கிறார். அவரிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை. பச்சை நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ உடை அணிந்து வந்தால் ஏன் அப்போது இப்படி கேட்கவில்லை. காவி என்பது நிறம் அவ்வளவுதான்" என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கு நடிகை குஷ்பு காவி உடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறனின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்ப்பியுள்ளது.
    • தற்போது இவரின் கருத்துக்கு நடிகர் கருணாஸ் அதரவு தெரிவித்துள்ளார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்" என்று பேசினார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

    வெற்றிமாறன் - கருணாஸ்

    வெற்றிமாறன் - கருணாஸ்

     

    இந்நிலையில் வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.

    கருணாஸ்

    கருணாஸ்

     

    அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள்.. இராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு! ஆனால் இராசராசசோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது. காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில்.. "நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்" அந்தப் "பிழைத்துக் கொண்டோம்" என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.

    கருணாஸ்

    கருணாஸ்

     

    ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இராசராச சோழனை இந்து என்று மாற்றநினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளிநாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். முப்பால் யாத்த வள்ளுவப் பெருந்தகைக்கு காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்றமுற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்; வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும்.

    கருணாஸ் - வெற்றிமாறன்

    கருணாஸ் - வெற்றிமாறன்

     

    தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை, இப்படி பல்வேறு தளங்களில் இந்தி – சமற்கிருத – காவி அடையாங்களாக மற்றுவதற்கான ஆரிய நுண்ணரசியல் பலகாலம் தொட்டு நடந்தேறுகிறது. அது அண்மைக்காலமாக வேகமெடுத்துள்ளது. அதை நாம் முறியடிக்கவேண்டும். அதன் ஒரு கூறுகத்தான்.. ஆர்.எஸ்.எஸ். பேரணி.. இதற்குமுன் வேல்யாத்திரை, இராமராஜ்ய ரதயாத்திரை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்தது.

     

    வெற்றிமாறன் - கருணாஸ்

    வெற்றிமாறன் - கருணாஸ்

    இந்தியாவை 'பாரத்', 'பாரத் வர்ஷா" என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பா.ஜ.க.முன்னெடுக்கிறது.. மிகவிரைவில் இந்தியா பாரத் ஆக மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பதும் அவர்கள் மனுதர்மபடிதான் நடக்கும்! ஆகவே நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது! கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்! என்றார்.

    • சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
    • இந்த விழாவில் வெற்றிமாறனின் பேசியதை இயக்குனர் பேரரசு விமர்சனம் செய்துள்ளார்.

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள்.

    வெற்றிமாறன்

    அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே நாங்கள் மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள்.

    பேரரசு

    ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.

    உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்,நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
    • இவ்விழாவில் வெற்றிமாறன், நம் அடையாளங்களைப் பறிக்கும் செயல் தொடர்ந்து நடக்கிறது என்று பேசினார்.

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, ''அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

     

    அதற்கு அவர், "தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்" என்றார். மேலும், "கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்" என திருமாவளவன் சொல்லியிருந்தார். இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன். சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்.

     

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.

     

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்'' என்றார்.

    • இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை

    கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    விடுதலை

    விடுதலை

    இந்நிலையில் இப்படத்தின் ஆக்‌ஷன் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதில், ஒரு தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒருகட்ட படப்படிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களையும் படக்குழு இணைத்துள்ளது.

    • வெற்றிமாறன் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', 'கொடி' உள்ளிட்ட படங்களில் வெளியாகி உள்ளது.
    • தற்போது இவர் தயாரிப்பில் அனல் மேலே பனித்துளி படம் உருவாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தையும் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', தனுஷின் 'கொடி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன.

     

    தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அனல் மேலே பனித்துளி'. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

     

    இந்நிலையில் 'அனல் மேலே பனித்துளி' படத்தின் இடம்பெற்றுள்ள 'கீச்சே கீச்சே' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை ஆர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×