search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிப்பெற்ற"

    • வெற்றிப்பெற்ற கர்ணப் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 5 புறாக்கள் இறுதி நாள் போட்டிக்கு தகுதி பெற்றன.

    கரூர்:

    கரூர் நகர நண்பர்கள் நடத்தும் 2-ம் ஆண்டு புறாப்போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மொத்தம் 14 புறாக்கள் பறக்க விடப்பட்டன. குறைந்தப்பட்சம் தொடர்ந்து 4 மணி நேரம் பறக்கவேண்டும். ஒரு முறையேனும் கர்ணம் (டைவ்) அடிக்கவேண்டும். வளர்ப்பாளர் கூறும் குறிப்பிட்ட இடத்தில் அமரவேண்டும் என்ற விதிகள் கடைபிடிக்கப்பட்டன. முதல் நாள் போட்டியில் பங்கேற்ற 14 புறாக்களில் 2ம் நாள் போட்டிக்கு 7 புறாக்கள் தேர்வாகின. 2ம் நாள் போட்டியில் 7 கர்ணப் புறாக்கள் பறக்கவிடப்பட்டதில் 5 புறாக்கள் இறுதி நாள் போட்டிக்கு தகுதி பெற்றன. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 3ம் நாளான நேற்று புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இதில் அதிக நேரம் பறந்து முதலிடம் பெற்ற கர்ணப் புறாவின் உரிமையாளர் சின்னசங்கர், 2ம் இடம் பெற்ற உரிமையாளர் ஜெய்நரேந்திரன், 3ம் இடம் பெற்ற கர்ணப் புறாவின் உரிமையாளர் தருண் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ×