search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி கூட்டம்"

    • பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைதலைவர் லதா முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் சுதர்சன் வரவேற்றார். பண்ணைக்காடு பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. பேரூராட்சித்தலைவரின் கணவர் கூட்ட அரங்கில் தலையிடுவதும், நிர்வாக விஷயங்களில் முழுமையாக தலையிடுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே புகார் அளிக்கின்றனர். உதயகுமார் காங்கிரஸ், 11-வது வார்டு கவுன்சிலர் பேசுகையில், பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவர் கணவர் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. தலைவருக்கு நிர்வாக விஷயத்தில் எவ்வித விபரங்களும் தெரியவில்லை. கூட்ட அரங்கில் தலைவரின் கணவர் பதிலளிக்கும் நிலை உள்ளது. பேரூராட்சியில் செய்யப்படும் வளர்ச்சிப்பணிகளில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறு கின்றன.

    தற்போது தீர்மானத்தில் கூட ஒரே பணி இரு இடங்களில் வந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் 10 நிமிடமே கூட்டங்கள் நடக்கின்றன. கவுன்சிலர்களுக்கு பேசும் அதிகாரம் மறுக்கப்படுகின்றது. ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு வாய் பூட்டப்பட்டு அவர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிகாரிகளும் இதற்கு துணை புரிகின்றனர். தலைவரின் தன்னிச்சையான போக்கு அனைத்து கவுன்சிலர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் சுதந்திரமாக நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மண்டபம் பேருராட்சி கவுன்சிலர் கூட்டம் நடந்தது.
    • சேதமான சாலைகளை சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சியில் நேற்று கவுன்சிலர் கூட்டம் நடந்தது. பேருராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் நம்புராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் இளவரசி வரவேற்றார். வார்டுகளில் முறையாக குடிநீர் சப்ளை செய்தல், சாலை அமைத்தல், பட்டா மாற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் சம்பத், பூவேந்திரன், வாசிம் அக்ரம், சாதிக்பாட்சா, முகமது மீரா சாகிப் ஆகியோர் பேசினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் ராஜா தெரிவித்தார். முடிவில் கிளார்க் முனியசாமி நன்றி கூறினார்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடை

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பேரூராட்சியின் கூட்டம் தலைவர் ஆலிவர்தாஸ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் அனில்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மரியா அற்புதம், ஈஸ்வரி, கலா, அசாருதீன், நபீலா அன்சார், யூனிஷ்பாபு, டதி செல்வபாய், முருகன் பிள்ளை, ஜெசி தம்பி, முத்துலெட்சுமி, மெர்சி பாய் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூதப்பாண்டியை அடுத்துள்ள 12-வது வார்டு துவரங்காடு பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக்) மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையே சேவை தொடர்பாக பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையை பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ் வழங்கினார்.

    • கொசு மருந்து அடிக்கவேண்டும்
    • குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற்றவேண்டும். குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்தது.
    • மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் பூங்கொடி முருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் துணைத்தலைவர் முருகேசன் பேசுகையில், தமிழகத்தில் ஏழை-எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    இந்த தீர்மானத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் கோவில்பிள்ளை ஆதரவு தெரிவித்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் துணைத் தலைவர் முருகேசன் பேசுகையில், மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள் வார்டு உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும், துணை தலைவருக்கும் தெரியாமல் தீர்மானம் அனுப்பப்படுகிறது.

    இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே வரும் காலங்களில் அஜந்தா தயாரிக்கும் போது அதனை வார்டு கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


    • சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுகிறது.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற பொருள் படித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை அடுத்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

    தங்கவேல் (3-வது வார்டு):

    அவினாசி பேரூராட்சியில் புது பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலும் மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்து செங்காடு வரை சாலையோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கடைக்காரர்களிடம் ரூ.5 வாங்கிக்கொண்டு வியாபாரம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்து வருகிறது.

    இதனால் தொழில் வரி, லைசென்ஸ், ஜி.எஸ்.டி. செலுத்தி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வருபவர்கள் வியாபாரம் வெகுவாக பாதிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிக அளவில் சாலையோர கடைகள் பெருகி வருவதால் போக்குவரத்து மிகவும் பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வரி இனங்கள் செலுத்துபவர்களிடம் பாதி தொகை கொடுத்து மீதி தொகையை கட்ட சில நாட்கள் தவணை கேட்டால் அதற்கு நிர்வாகம் ஒத்துழைப்பு தராமல் முழுவதையும் கட்டினால் தான் முடியும் என்று கூறி குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஏரி தோட்டத்தில் வடிகால் அமைக்க முதல்-அமைச்சர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் வழங்கிய தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்குநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமணி (17- வது வார்டு): மார்க்கெட் பகுதிக்குள் 40 கடைகள் வெறுமனே கிடக்கிறது. சாலையோர கடைகளை அங்கு கொண்டு செல்லலாம்.

    கார்த்திகேயன் (13- வது வார்டு): சங்கமம் குளம் வீதியில் சாக்கடை வசதி இல்லை. அங்கு சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுந்து வருகிறது.மேலும் அப்பகுதியில் வாழும் மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து பல கூட்டங்களில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே நான் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறியவாறு வெளிநடப்பு செய்தார்.

    • கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கூட்டத்தில் செயல் அலுவலர் , பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பழனி:

    பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜஸே்வரி சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தி சந்தை அமைப்பது, நத்தம் புறம்போக்கு நிலங்களை பேரூராட்சி மன்ற ஆட்சேபனையின்மை தீர்மானமின்றி தனிநபருக்கோ, அமைப்புகளுக்கோ வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் அலுவலர் சித்திரைக்கனி, பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் வருகை தராமல் இருந்தனர். பேரூராட்சித் தலைவர் சத்யாவதி பாஸ்கரன் உட்பட 9 கவுன்சிலர்கள் வைத்து 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் போன்ற திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • ரூ.19.60 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார், பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் முன்னிலை வகித்தார்.

    பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் கழிப்பிடங்கள் பழுது நீக்கம் பணி மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    மேலும் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கழிப்பிடங்களை ரூ.5 லட்சத்தில் பழுது பார்த்தல், கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்தில் கழிப்பிடத்தை சீரமைத்தல், வேப்பங்கால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் கழிப்பிடம் அமைத்தல், ரூ.6.60 லட்சத்தில் ஈரக்கழிவு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்
    • குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பங்கேற்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமா ள்ராஜா அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி உதவியாளர் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புதுறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது.

    மேலும் ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வருகை தந்து இருந்த அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எடுத்துரைத்து பேசினார்கள். இதில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள முடிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் தொடக்கப் பள்ளி இரு வகுப்பறை கட்டிடங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டம் நேற்று அதன் தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் விவரம் வருமாறு:-

    இந்த சாதாரண கூட்டத்தில் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதியதாக 2022-2023 ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது.மேலும் அம்மூர் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் ரூ.7.95 லட்சம் மதிப்பீட்டில் வின்ட்ரோ பிளாட்பாரம் மற்றும் மேற்கூரை அமைப்பது.

    மேலும் பேரூராட்சி பொது நிதியில் ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் வடிகால்வாய் கல்வெட்டு பணிகள் மேற்கொள்வது. அம்மூர் பேரூராட்சி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் தெருக்களுக்கு பெயர் உடன் கூடிய பலகைகள் வைப்பது, அம்மூர் பேரூராட்சியில் உள்ள ரயில்வே பாலத்தின் மூலம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் எதிர்கா லத்தின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை போக்க மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் சுடுகாடு பாதைக்கு வேலி அமைத்தல் சிறு பாலம் அமைத்தல், பைப் லைன் அமைத்து சிறு மின்விசை பம்பு அமைத்தல், சாலை அமைத்தல் சுகாதார வளாகம் சீரமைத்தல் தெருவிளக்குகள் அமைத்தல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
    • சுபாஷினி, முனுசாமி, சுஜாதா, ரகுமான்கான், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற வளாகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் வழக்கறிஞர் கே.சுகுமார், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இளநிலை உதவியாளர் யுவராஜ் 15 தீர்மானங்களை வாசித்தார். இதில், அம்ருத் 2.0 திட்டத்தில் இப்பேரூராட்சியில் ரூ.7.98 கோடியில் மத்திய, மாநில அரசு நிதி,பேரூராட்சி பங்களிப்புடன் மேற்கொள்வது என்றும் அதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோறுவது என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதில், 9 மற்றும் 11-வது தீர்மானங்களை வாசிக்கும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அந்த 2 தீர்மானங்கள் மீது 24-ம் தேதி விவாதம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இதன்பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அருணா, கௌசல்யா, பிரபாவதி, சதீஷ், சுகன்யா, சுபாஷினி, முனுசாமி, சுஜாதா, ரகுமான்கான், சந்தானலட்சுமி குணபூபதி, பொன்னரசி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வரி தண்டலர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

    ×