search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதோஷ வழிபாடு"

    • கோவிலில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • ஒன்பது வகையான ஆராதனை நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புகழ் வாய்ந்த சோழகாலத்து சுயம்புலிங்க சிவன் கோ வில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சுயம்புலிங்க சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபா டு நடைபெற்றது, இதே போல் திருவுடையார்பட்டி திரு மூல நாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்ட ளை சோமசுந்தரேஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், பாளையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோ வில், திருமலைராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதி ர்காமேஸ்வரி அம்பாள் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 16வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரம் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் , நந்தி, ஸ்ரீ உலகேஸ்வரருக்கு 16வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் , கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்கோவில் , மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
    • ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000ஆண்டுகள்பழமைவாய்ந்தகோவில்ஆகும்.

    இந்த கோவிலில்பு ரட்டாசிமாதபிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

    இதையொட்டிமாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர். இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வ நாதர் கோவில், பஞ்சலிங்க புரம்பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்ற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12சிவாலயங்களிலும் பிரதோசத்தையொட்டிசிறப்புஅபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபெருமானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    பின்னர் நந்திபெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்  நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தானம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .

    பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் ,அங்காள பரமேஸ்வரி அம்மன் ,மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,450 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில்,

    பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    • ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கும் நந்தியம் பகவானுக்கும் அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது.
    • ரத்தின லிங்கேஸ்வரர், ரத்னாம்பிகை சமேதரராக கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தனர்

    உடுமலை :

    உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கும் நந்தியம் பகவானுக்கும் அலங்கார அபிஷேகம் நடைபெற்றது.ஆவணிமாத பிரதோஷத்தை முன்னிட்டு ரத்தின லிங்கேஸ்வரர் ,ரத்னாம்பிகை சமேதரராக கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரத்தின லிங்கேஸ்வரர் மற்றும் நந்தியம் பகவானையும் வழிபட்டனர்.

    • பரமத்திவேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆவணி மாத பிரதோ ஷத்தினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதருக்கு ஆவணி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் உள்ள பானலிங்க விஸ்வேஷ்வரருக்கு ஆவணி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு நந்தியம்பெ ருமான், பானலிங்க விஸ்வேஷ்வரர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு பல வகை வாசனை திரவி

    யங்களால் சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் அருட்பிர சாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மூலவர்களுக்கு மகா தீபாராதணை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    செங்கம்:

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஷ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    ரிஷபேஷ்வரர், முருகன் வள்ளி, தெய்வானை சன்னதிகளில் உள்ள மூலவர்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதணை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சிவாலயத்தில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.
    • தா.பேட்டை காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர ஸ்தலமானகைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கை பாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடை பெற்றது.

    திருச்சி :

    தா.பேட்டையில் காசி விசாலாட்சிசமேத காசிவிஸ்வநாதர் சிவாலயத்தில் நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.

    தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இதே போன்று தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர ஸ்தலமானகைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கை பாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடை பெற்றது.

    • பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    • குகநாதீஸ்வரர் கோவிலில் மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்துள்ளது
    • 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்துள்ளது

    இந்த சிவனுக்கு ஆனி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.இதை யொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர். இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழரத வீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசா லாட்சி சமேத காசிவிஸ்வ நாதர்கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்ற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குமாரபாளையம் கலைமகள் வீதி கற்பக விநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்ம லிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×