என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயிற்சி பட்டறை"
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
- தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நான் முதல்வன் நிரல் திருவிழா அறிமுகம் மற்றும் விளக்கப்பட்டரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நோக்கம் தொழில், கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கா லத்திற்கான திட்ட இலக்கீட்டை எளிதாக கை யாளும் வகையில் அவர்க ளுக்கான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
பொதுவாக கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டத்தின் போது அவர்க ளுக்கு ஏற்படும் இடையூறு களை கண்டறிந்து சரியான வழிகாட்டுதலை மேற் கொள்ள செய்வதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் சிறந்து விளங்கும். அதுதான் நான் முதல்வன் என்னும் திட்டத்தில் உன்னத லட்சியமாகும்.
இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதலை மேற்கொள்ள சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த அனுபவம் மிக்க மாணவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு புராஜக்ட் திட்டத்திற்கு தக்க ஆலோசனை மற்றும் வழி காட்டுதலை செய்து கொடுப்பதற்கான பணி களை தொழில் பயிற்சி நிலையம் முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல் வர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாண வர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் இறுதி யாண்டு கல்வியை முடித்து ஒவ்வொருவரின் லட்சிய மும் நிறைவேறிடும் வகை யில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் திறன் பயிற்சி குமரவேல், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரிமுத்து, ஓம் பிரகாஷ் திட்ட மேலாளர் ரூபன், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது. இதயம் நல்லெண்ணெய் குழும நிறுவனர் முத்துவின் 'பன்ச் ப்ராஜக்ட்' என்ற அமை ப்பின் மூலமாக பல்கலை க்கழகத்தின் மாணவிகளு க்காக நடத்தப்பட்டது. பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்த பல்கலை க்கழகத்தின் துணை வேந்தர் கலா, உலக மயமாக்கல் காரணமாக தனியார் நிறுவனங்கள் பெருகி வரும் தற்போதைய சூழலில் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்வது மிக அத்தியாவசியமானது.
இப்பல்கலைக்கழகத்தின் மாணவிகள் அனைத்துத் திறன்களையும் கற்பதற்கு தேவையான வாய்ப்பு களையும் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி வருகிறது. மாணவிகள் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் . பாரதியார் போன்ற பெரும் தமிழ்ப் புலவர்கள் ஆங்கிலத்திலும் இணையான புலமை பெற்றிருந்ததை சுட்டிக் காட்டி பேசினார். பதிவாளர் ஷீலா மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிளாரா தேன்மொழி ஆகியோர் தொடக்க உரை மற்றும் வாழ்த்துரை வழங்கி னர்.
முன்னதாக கொடைக்கா னல் ரோட்டரி சங்கத் தலை வர் மதன்குமார் கோவி ந்தன் வரவேற்புரை யாற்றி னார். இந்நிகழ்ச்சியை கரூர், விருதுநகர் மற்றும் கொடை க்கானல் ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் ஜெயப்பிரகாஷ், விருதுநகர் பீஹைவ் அகாடமி தலைவர் ஷ்யா ம்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். விமலா, கணிணி த்துறை இணைப்பேராசி ரியர் மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் விஜயா ஆகியோர் ஒருங்கிணை ப்பாளராக செயலாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவிகளு க்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
- திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை சுருங்கிவிட்டது.
- குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள்
திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என பல பெண்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரும்பி பார்க்கும் போதுதான், தாங்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கும், சமூகத்துக்காக பங்களிப்பதற்குமான தேவைகள் இருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்து திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் சாதனா தர்மராஜ், அவருடன் ஒரு சந்திப்பு.
நான் சிவகாசியில் வசித்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை முடிந்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஒரு கட்டத்தில். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் நமக்கான அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்துவது, பள்ளிகளில் ஊக்கமளிக்கும் பயிற்சி பட்டறைகள் நடத்துவது என குழந்தைகள் தொடர்பான பணிகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான், ஒருநாள் என் நண்பர்களுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் காப்பகத்திற்கு சென்றேன்.
அங்கு எனது கண்முன்னே ஒரு சிறுவனுக்கு வலிப்பு வந்து, என் மடியில் வந்து விழுந்தான். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் சிறப்பு குழந்தைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவர்களுக்கான சிகிச்சைகள் பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன.
இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது `சிவகாசியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை' என்றார்கள். இந்த குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்தேன்.
அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் அனைத்தையும் நேரடி மற்றும் இணைய வகுப்புகள் மூலமாக கற்றறிந்தேன். தற்போது இந்த துறையில் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.
குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில் பேசுவதில் பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும் அந்த குறையாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். இது சற்றே சவாலான காரியம் தான்.
ஆனால் பயிற்சிக்குப் பிறகு அந்த குழந்தைகளின் வளச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது அந்த சால்கள் ஒரு பொருட்டாகவே தோன்றாது. குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள் இந்த அன்புதான் என்னை தொடர்த்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது. எனது செயப்பாடுகளுக்காக புதுமைப்பெண் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்" என்றார்.
- மதுரை மன்னர் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
- விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இலிருந்து 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட் ராக்ட் கிளப், தியாகராசர் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி இன்டர் நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3000, ரோட்ராக்ட் டிஸ்ட்ரிக்ட் ஆர்கனைசேசன் சார்பில் யுவா மதுரை 4.0 ஒரு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி மன்னர் திருமலை கல்லூரி யில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழா வில் மதுரை டவுன் டவுன் பிரசிடெண்ட் ஜெயகிரன் ஜெயின் சிறப்புரையாற்றி னார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப் பையா தலைமை தாங்கி னார். கல்லூரி சுயநிதிப்பி ரிவு இயக்குனர் ச.பிரபு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலாளர் மு.விஜயராகவன் ரோட் ராக்ட் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மன்னர் கல்லூரியின் ரோட்ரா கிளப் தலைவர் சூரிய பிரகாஷ். விழா ஏற் பாட்டினை செய்திருந்தார். தியாகராசர் கல்லூரி ரோட்ராக்ட் செயலா ளர் சேஷ கோபாலன் விருந்தி–னர்களை அறிமுகம் செய் தார் மேலும். மன்னர் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.ரஞ்சித்குமார், தியாகராசர் கல்லூரி ஒருங் கிணைப்பாளர் முனைவர் சிவக்குமார் ஆகியோர் நன்றி கூறினா். விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்வேறு மாவட்டங்களி–லிருந்து 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
- விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
மதுரை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு அரசும் , ஐ.சி.டி. அகாடமியும் இணைந்து இ-சேவை பயிற்சி 11 நாட்களுக்கு நடத்தப் பட்டது. இதில் தினமும் 60 நபர்கள் வீதம் 11 நாட்களுக்கு 660 நபர்களுக்கு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்வினை கல்லூரி யின் செயலாளர் விஜயராக வன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராம சுப்பையா தலைமை தாங்கி னார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு வாழ்த்துரை வழங்க ஐ.சி.டி. அகாடமியின் அமைப்பாளர் நிரஞ்சனி ஆலோசனை வழங்கினர்.
இ-சேவை மையத்தின் விளக்க பயிற்சியை அளித்த தோடு தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த வாடிக்கையாளர்களின் தேவையை முத்ரா லோன் திட்டம் போன்றவற்றிக்கான பயிற்சியை கல்லூரியின் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி விளக்கம் அளித்தார். விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
- ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள்.
- சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருவட்டார் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கில் வைத்து ஜல் ஜீவன் மிஷன் 2023-2024-ம் ஆண்டுக்கான ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள். பயிற்சியாளர்கள் செல்வம், ராணி ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன், நீரின் முக்கியத்துவம், நீர் ஆதாரங்கள் மாசடைதல், கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமரித்தல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்கள். கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பிடி.செல்லப்பன், பால்சன், இசையாஸ், தேவதாஸ், அனுசன் அய்யப்பன், லில்லிபாய் சாந்தப்பன், விமலா சுரேஷ், கெப்சிபாய் றூஸ், ரெஜினிவிஜிலா பாய், சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- டாக்டர் ஷீயாவுல்லா இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரி வீ.சிவ இளங்கோ வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். ஷிபா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ஷீயாவுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார். முதலுதவி குறித்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் ஜிம்ரீவ்ஸ் சைலண்டு நைய், மாலை சூடும் பெருமாள், மருதையா பாண்டியன், சிவ முருகன், அசோகன், பிரியதர்ஷினி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன், ஷிபா மருத்துவமனை ஊழியர்கள் ராதாகிருஷ்ணன், அருண், சுகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின் பேரில் இளைஞர் செங்சிலுவை சங்க இயக்குனர், தேசிய மாணவர் படை அதிகாரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
- கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறை சார்பில், 'தற்போதைய சூழலில் மீன்வளர்ப்பு மற்றும் மீன் வகைப்பாட்டியல்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுகலை விலங்கியல் துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் குமார் 'புரோ பயாட்டிக்கஸ் இன் அக்குவாகல்சர்' என்ற தலைப்பிலும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கண்ணன் 'கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் தன்மை மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் பங்கேற்பாளர்களுக்கு மீன் வகைப்பாட்டியல், மீன் வகைகளை கண்டறிதல், செதில்களின் வகைப்பாடு, நண்டு வகைகளை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு துறைத்தலைவர்கள் சுந்தரவடிவேல், கதிரேசன், பாலகிருஷ்ணன், கவிதா, கோகிலா, பேராசிரியர்கள் வசுமதி, ஆரோக்கியமேரி பர்னாந்து, சிவமுருகன், அபுல்கலாம் ஆசாத், அந்தோணிமுத்து பிரபு, ஆல்வின், லிங்கதுரை, மணிகண்டராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முதுகலை விலங்கியல் துறை பேராசிரியர் லோக்கிருபாகர், கொளஞ்சிநாதன், ஆய்வக உதவியாளர் அன்புசெல்வன் மற்றும் முதுகலை விலங்கியல் துறை மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர். பேராசிரியை ரமாதேவி நன்றி கூறினார்.
- மதுரையில் சித்த மருத்துவமனைகள் சார்பில் பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது.
- வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
மதுரை
மதுரையில் மடீட் ஷியா மற்றும் சித்த மருத்துவமனைகள், கிளீனிக் சங்கம் இணைந்து பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவமனை மற்றும் கிளீனிக் சங்கத்தலைவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். மடீட்சியா தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், சித்த மருந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கிளஸ்டர் என்ற அமைப்பை ஏற்படுத்த மடீட்சியா முயற்சி செய்து வருகிறது. ஆயுஷ் தொழில்துறை வளர்ச்சிக்கு மடீட்சியா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார்.
திரவியம் ஏற்றுமதி நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி பாஸ்டின் மதிப்புக்கூட்டிய மூலிகை உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் விதம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஷியாம் நாராயணன், வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
ஆதித்யா தொழிற் பயிற்சி தலைவர் செல்வ சுந்தர்ராஜன் நாட்டு மருந்துகளை பதிவு செய்தல், விற்பனை செய்தல் குறித்தும், மானியம், வங்கி கடன் குறித்தும் பேசினார்.
சித்த மருத்துவமனைகள் சங்க பொருளாளர் மணிகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சுவடியில் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.
- தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையில் தொல் ஆவணங்கள் பட்டய வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு "சுவடியியல்" பயிற்சிப்பட்டறை நடந்தது. முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் பொன்னி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். மதுரை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் மருதுபாண்டியன் "சுவடி - ஓர் அறிமுகம், சுவடிப்பதிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர். உதயகுமார் "சுவடி அழிவிற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பூங்கோதை, நன்றி கூறினார். இதில் தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.
- மூன்று நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடக்கிறது.
- 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று பயன் பெற்று வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய புவி அமைப்பியல் துறையின் சார்பாக மூன்று நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடக்கிறது.
விழாவில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பாலகுருநாதன் கலந்துகொண்டு விழா துவக்க உரையாற்றினார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) கார்த்திகேயன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து இந்திய அரசின் அணு கனிம பிரிவுகள் ஆராய்ச்சி துறையில் பெங்களூரு மண்டல இயக்குனர் ஸ்ரீ மயங்க் அகர்வால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சஞ்சய் காந்தி புவிய அமைப்பியல் துறையில் உதவி பேராசிரியர் இச்சங்கம் தோற்று விக்கப்பட்டதற்கான காரணத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து சங்கத்தின் மாணவர் பிரிவு தலைவி நிவேதிதா இவ்வமைப்பின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். முன்னதாக விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் புவி அமைப்பியல் துறையில் தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.
முடிவில் இச்சங்க மாணவப் பிரிவு துணைத் தலைவி செல்வி பூவிழி நன்றி உரை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று பயன் பெற்று வருகின்றனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இத்துறையின் உதவி பேராசிரியர்களான வித்யாசாகர், அருண் பாரதி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் செய்திருந்தனர்.
- ஆதித்தனார் கல்லூரியில்மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் சார்பாக மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை கடந்த 7-ந் தேதி முதல் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் கவுன்சில் அமைப்பாளர் நித்யானந்த ஜோதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வரும், கவுன்சில் தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கவுன்சில் செயல்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமையில், அந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பொறியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ெமாபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் அதன் இயக்கங்களை தெளிவாக மாணவர்களுக்கு விளக்கி கூறினர். இதில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின் பேரில் பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் வாசுகி மற்றும் பேராசிரியைகள் முருகேஸ்வரி, ஸ்ரீதேவி, தீபாராணி, பேராசிரியர்கள் தர்மபெருமாள், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்