என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாக்டர்கள் சாதனை"
- பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
- கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த வடுகபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலா. இவர் வயிற்று வலி ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றர்.
டாக்டர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும்மாறு கூறினர்.
அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.
இதனிடையே அந்த பெண்ணின் ரத்தத்தின் அளவு 4 எச்.பி. புள்ளி மட்டுமே இருந்துள்ளது. சராசரியாக 10 க்குள் மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உணர்ந்த மருத்துவக்குழுவினர் இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் பேசி அந்த பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய தொடர் சிகிச்சை முறைகளை தொடர்ந்தனர்.
மேலும் ரத்ததின் அளவை அதிகரிக்க 4 யூனிட் ரத்தமும் அந்த பெண்ணிற்கு செலுத்தப்பட்டு உடல் நிலையை மேம்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மீண்டும் ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்ட போது 11 புள்ளிகளை கடந்ததுடன் உடலும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தேறி வந்ததை அறிந்து நேற்று அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிட மருத்துவக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மஜிதா, விஜயா மயக்கவியல் மருத்துவ நிபுணர் மலைதுரை, அறுவை சிகிச்சை அரங்க செவிலியர்கள் அம்சவள்ளி, ராஜலெட்சுமி, ஜோன் ஆப்ஆர்க் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை தொடங்கினர்.
சில மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றில் இருந்த பிரமாண்ட அளவிலான 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்குப்பின் உள்ள மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
குறைந்த அளவு உடலில் ரத்தம் இருந்ததோடு 5 கிலோ எடையுள்ள கட்டி வயிற்றில் இருந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி வந்த வந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவில் எந்தவித செலவுமின்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அசத்தி உள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.
ஏற்கனவே இதுபோன்ற அறுவை சிகிச்சை மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனித்துவம் பெற்று வருகின்றது.
அரசு மருத்துவமனை என்றால் அலட்சியம் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் பெண்ணுக்கு 5 கிலோ கட்டி கடும் சவாலான நிலையில் அகற்றி இருப்பது தான் சிறந்து வாய்ந்ததாக அமைந்துள்ளது.
- அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
- 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.
விழுப்புரம்:
வேலூர் மாவட்டம் வாழப்–பந்–தல் கிரா–மத்தை சேர்ந்–த–வர் மொழிச்–செல்–வம் மனைவி பரி–மளா(வயது 33). இவ–ருக்கு கடந்த ஜூலை மாதம் கடு–மை–யான வயிற்று வலி ஏற்–பட்டது. இதை–ய–டுத்து அவர் சிகிச்–சைக்–காக முண்–டி–யம்–பாக்–கத்–தில் உள்ள விழுப்–பு–ரம் அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–ம–னையில் அனு–ம–திக்–கப்–பட்டார். அவ–ருக்கு கர்ப்–பப்–பை–யில் 5 கிலோ எடை–யி–லான கட்டி இருப்–பது கண்–டறி–யப்–பட்டது.
அதைத் தொடர்ந்து கல்–லூரி முதல்–வர் கீதாஞ்–சலி தலை–மையில் மக–ளிர் மற்–றும் மகப்–பேறு துறை தலை–வர் ராஜேஸ்–வரி தலை–மை–யில் டாக்–டர்–கள் சங்–கீதா, இளை–ய–ராஜா, நித்–திய பிரி–ய–தர்–ஷினி, சிறு–நீ–ர–கத்–துறை நிபு–ணர்–கள் அரு–ண–கிரி, பாஸ்–கர், மயக்–க–வி–யல் நிபு–ணர் டாக்–டர்–கள் செந்–தில்–கு–மார், மகேந்–தி–ரன், திருச்–செல்–வம் உள்–ளிட்டோர் கொண்ட மருத்–துவ குழு–வி–னர் அறுவை சிகிச்சை செய்து, கட்–டியை அகற்றி சாதனை படைத்–த–னர்.
இது–கு–றித்து முதல்–வர் கீதாஞ்–சலி கூறு–கை–யில், இது போன்ற அறுவை சிகிச்–சையைதனி–யார் மருத்–து–வ–ம–னை–யில் செய்–தால் ரூ.2 லட்சம் வரை செல–வா–கும். ஆகவே ஏழை, எளிய மக்–கள் இது போன்ற அறுவை சிகிச்–சை–க–ளுக்கு அரசு மருத்–து–வ–மனையை பயன்–ப–டுத்–திக் கொள்ள வேண்–டும் என்–றார். அப்–போது மருத்–துவ துணை கண்–கா–ணிப்–பா–ளர் புக–ழேந்தி, நிலைய மருத்–துவ அலு–வ–லர் ரவிக்–கு–மார், உதவி நிலை மருத்–துவ அலு–வ–லர் நிஷாந்த், நிர்–வாக அலு–வ–லர் சக்–தி–வேல் மற்–றும் அறுவை சிகிச்சை செய்த டாக்–டர்–கள் குழு–வி–னர் உடன் இருந்தனர்.
- ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டம் நல்லூர் பரமாணிக்க விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.
இவரது மனைவி ஜெயா (45), இவர் கடை நடத்தி வருகிறார், மேலும் இளநீர் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த 22-ந்தேதி வாடிக்கையாளர் ஒருவ ருக்கு அரிவாளால் இளநீர் வெட்டும் போது இடது கை கட்டை விரல் துண்டாகி கீழே விழுந்தது. இதனால் ஜெயா துடிதுடித்து போனார். உடனடியாக உறவினர்கள் ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
துண்டான கைவிரலையும் தனியாக கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஐசக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐசக் சுந்தர் சென் தலைமை யிலான டாக்டர் அகமது ரபிக் மீரான் மற்றும் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அடங் கிய மருத்துவ குழுவினர் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மேற் கொண்டனர்.
அப்போது அவருக்கு துண்டான கை விரலை மீண்டும் சேர்த்து பொருத்தி வைத்து சிகிச்சை அளித்த னர். 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் ஜெயாவின் குடும்பத்தார் டாக்டர் ஐசக் சுந்தர் சென்னு க்கு நன்றி தெரி வித்தனர்.
இது குறித்து டாக்டர் ஐசக் சுந்தர் சென் கூறியதா வது:-
பொதுவாக கை மணிக் கட்டு பகுதிகள் துண்டாகி பொருத்தும்போது ரத்த நரம்புகள் பெரிதாக உள்ளதால் இதைவிட எளிதாக இருக்கும் ஆனால் இது கட்டை விரல் என்ப தால் மிகச் சிறிய ரத்த குழாய் களை பொருத்துவது சவா லாக இருந்தது. எனினும் மிகத் துல்லியமாக சிகிச்சை அளித்து கைவிரல் சரி செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
- ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
- மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.
கடலூர்:
திட்டக்குடி அரசு தலைமை மருத்துவஅலுவலர் டாக்டர் சேபானந்தம் மேற்பார்வையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, திட்டக்குடி அடுத்த கிழச்செருவாய்ள கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்(வயது58), இவர் பைக்கிலிருந்து தானகவே தவறி விழுந்து வலது தோள்பட்டை எலும்பு 5 பாகமாக உடைந்ததை கணினி உதவியுடன் இயங்கும் ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
திட்டக்குடி அரசு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த், தினேஷ், கார்த்திக், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் கிருத்திகா, அறுவை அரங்கு செவிலியர்கள் மகேஸ்வரி, மாலா, லட்சுமி, மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
- விளையாட்டு பொருட்களில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.
- குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சங்கர். இவர் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபீதாபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
2-வது மகன் தமிழ்முகிலன். பிறந்து 10 மாதம் ஆகிறது.
இந்த நிலையில் வீட்டில் தமிழ்முகிலனுடன் அவனது சகோதரன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது விளையாட்டு பொருட்களின் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.
இதனை பார்த்த சிறுவன் தனது தந்தையிடம் கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர் குழந்தையை அரியலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று காண்பித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில்தஞ்சையில் உள்ள எம்.ஆர். மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்த நிலையில் 2 சிறிய கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் எல்.இ.டி. பல்பு சிறுவன் விழுங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து அவனுக்கு 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பல்பை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் தலைமையில் பொது மற்றும் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மேத்யூ மைக்கேல், மயக்க மருந்து நிபுணர் குளாளன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது என்றனர்.
குழந்தையின் தந்தை சங்கர் கூறுகையில், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் எனது குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். டாக்டர்கள் உரிய சிகிசை அளித்ததால் எனது குழந்தையின் உயிர் திரும்ப கிடைத்துள்ளது என்றார்.
- சிறுமியின் மூளை தண்டுவட பகுதியில் இருந்த கட்டியை அகற்றி ஹானாஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
- 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி முழுமையாக நீக்கப்பட்டது.
மதுரை
திருச்சி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் துரைராஜன். கல்லூரி பேராசிரியர். இவரது 2-வது மகள் நிதிஷா (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி கடந்த சில மாதங்க ளாக அடிக்கடி கழுத்து வலிப்பதாக கூறியுள்ளார். திடீர் திடீரென்று மயங்கியும் விழுந்துள்ளார்.பின்னர் வலது கையில் எழுதி கொண்டிருந்தவர் ரென்று இடது கையால் எழுதுவது, அடிக்கடி கீழே விழுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமியை மதுரை ஹானாஜோசப் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். மருத்துவ மனை நிர்வாக இயக்குனரும், நரம்பியல் தலைமை டாக்டர் அருண்கு மார் சிறுமியை பரிசோதனை செய்தார்.
அதில் ஸ்வானானோமா எனப்படும் கட்டி தண்டுவ டத்தின் முன்பகுதியில் வளர்ந்து, மூளைத்தண்டு மற்றும் கழுத்து தண்டுவடத்தை அழுத்தி கொண்டிருந்தது. இந்த கட்டியானது ரத்த ஓட் டத்தை தடுத்து ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. எனவே சிறுமிக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதை தொடர்ந்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
அதில் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் மைக்ரோ சர்ஜரி எனப்படும் நுண்அறுவை சிகிச்சை மூலம் 9 மணி நேரம் தொடர்ந்து செய்யப் பட்டு 70 சதவீதம் கட்டி முதல் நாள் அகற்றப்பட்டது. அப்போது சிறுமிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச் சையை மேலும் தொடர இயலவில்லை. எனவே அறுவை சிகிச்சை முடிந்த 4-ம் நாள் மறுபடியும் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி முழுமையாக நீக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் கூறியதாவது:-
இந்த சிறுமியின் எடை 23 கிலோ மட்டுமே இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகொடுப்பது கூட மருத்துவக்குழுவிற்கு சவாலாக இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சை நடைபெறும் போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பக்கவாதம் அல்லது வாழ் நாள் முழுவதும் செயற்கை சுவாசம் அளிக்கக்கூடிய நிலை நேரிடலாம்.
எனவே நவீன கருவி மூலம் அந்த கட் டியை அகற்றினோம். இது புற்றுநோய் கட்டி அல்ல. தற்போது அவர் நன்றாக உள்ளார். 17 வயது முதல் 64 வயது உடையவர்களுக்கு தான் இது போன்றகட்டி வந்து அகற்றப்பட்டு உள்ளது. முதன் முறையாக இந்த சிறுமிக்கு இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எங்கள் டாக்டர்கள் குழுவினர் சாதித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்