என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமியின் மூளை தண்டுவட பகுதியில் இருந்த கட்டி அகற்றி டாக்டர்கள் சாதனை
- சிறுமியின் மூளை தண்டுவட பகுதியில் இருந்த கட்டியை அகற்றி ஹானாஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
- 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி முழுமையாக நீக்கப்பட்டது.
மதுரை
திருச்சி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் துரைராஜன். கல்லூரி பேராசிரியர். இவரது 2-வது மகள் நிதிஷா (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி கடந்த சில மாதங்க ளாக அடிக்கடி கழுத்து வலிப்பதாக கூறியுள்ளார். திடீர் திடீரென்று மயங்கியும் விழுந்துள்ளார்.பின்னர் வலது கையில் எழுதி கொண்டிருந்தவர் ரென்று இடது கையால் எழுதுவது, அடிக்கடி கீழே விழுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமியை மதுரை ஹானாஜோசப் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். மருத்துவ மனை நிர்வாக இயக்குனரும், நரம்பியல் தலைமை டாக்டர் அருண்கு மார் சிறுமியை பரிசோதனை செய்தார்.
அதில் ஸ்வானானோமா எனப்படும் கட்டி தண்டுவ டத்தின் முன்பகுதியில் வளர்ந்து, மூளைத்தண்டு மற்றும் கழுத்து தண்டுவடத்தை அழுத்தி கொண்டிருந்தது. இந்த கட்டியானது ரத்த ஓட் டத்தை தடுத்து ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. எனவே சிறுமிக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதை தொடர்ந்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
அதில் தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் மைக்ரோ சர்ஜரி எனப்படும் நுண்அறுவை சிகிச்சை மூலம் 9 மணி நேரம் தொடர்ந்து செய்யப் பட்டு 70 சதவீதம் கட்டி முதல் நாள் அகற்றப்பட்டது. அப்போது சிறுமிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச் சையை மேலும் தொடர இயலவில்லை. எனவே அறுவை சிகிச்சை முடிந்த 4-ம் நாள் மறுபடியும் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி முழுமையாக நீக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண்குமார் கூறியதாவது:-
இந்த சிறுமியின் எடை 23 கிலோ மட்டுமே இருந்ததால், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகொடுப்பது கூட மருத்துவக்குழுவிற்கு சவாலாக இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சை நடைபெறும் போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பக்கவாதம் அல்லது வாழ் நாள் முழுவதும் செயற்கை சுவாசம் அளிக்கக்கூடிய நிலை நேரிடலாம்.
எனவே நவீன கருவி மூலம் அந்த கட் டியை அகற்றினோம். இது புற்றுநோய் கட்டி அல்ல. தற்போது அவர் நன்றாக உள்ளார். 17 வயது முதல் 64 வயது உடையவர்களுக்கு தான் இது போன்றகட்டி வந்து அகற்றப்பட்டு உள்ளது. முதன் முறையாக இந்த சிறுமிக்கு இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி எங்கள் டாக்டர்கள் குழுவினர் சாதித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்