search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகு"

    • 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.
    • கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.

    இவற்றுள் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர்.ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது.

    கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.230 வரை விலைபோனது. இது கடந்த வாரத்தை விடவும் ரூ.20 விலை குறைவு. வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலைபோனது.

    வாளை மீன்களுக்கு வெளியூர் மீன் சந்தையில் நல்ல மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ணைக்காவும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்
    • குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டு மரங்க ளும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதி யில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கண வாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியி லேயே கரை திரும்பின.அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று பலத்த காற்று காரணமாக பைபர் கட்டுமரங்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் குறைவான மீன்களே கிடைத்தன.இதனால் இன்று குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
    • கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது.

    தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது

    இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பைபர் படகு மற்றும் விசைப்படகு. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இன்று கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் வள்ளங்கள் மூலமும் அதிகமான மீன்கள் கிடைக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • குளச்சல் மரைன் போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பொனிப்பாஸ்.இவரது மகன் ஆன்றனி சபில் ராஜ் (வயது 33).

    இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ந் தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து இவரது படகு மீன் பிடிக்க சென்றது. கலஸ்டின் (44) என்பவர் படகை ஓட்டினார்.

    படகில் வடமாநில தொழி லாளர்கள் 6 பேரும், குமரி மாவட்ட தொழிலாளர்கள் 7 பேரும் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்களது விசைப்படகு முட்டம் கடலில் 34 நாட்டிங் கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கெமிக்கல் டேங்கர் கப்பல், எதிர்பாராத வித மாக படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படகின் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் படகில் இருந்த மேற்கு வங்காளம் மீனவர் வினோத் புதிர் (46), வாணியக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (36), பூத்துறையை சேர்ந்த கில்பர்ட் (51) ஆகியோர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றினர். இருப்பினும் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    அவர்கள் நேற்று மாலை குளச்சல் துறைமுகம் வந்தனர். உடனடியாக 4 பேரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படகு மீது கப்பல் மோதியது குறித்து மீனவர்கள் புகார் செய்ததன் பேரில் குளச்சல் மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மோதிவிட்டு சென்ற வெளி நாட்டு கப்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் குமரி கடலில் லைபீரியா நாட்டு எண்ணை கப்பல் விசைப் படகு மீது மோதிச் சென்ற நிலை யில் தற்போது மீண்டும் மற்றொரு படகு மீது கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்
    • விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.

    இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 20 விசைப்படகுகள் இன்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் திரும்பின. இதில் ஒரு படகில் திரட்சி எனப்படும் 4 ராட்சத திருக்கை மீன்சிக்கியது. அவை தலா 700 கிலோ எடை கொண்டதாக இருந்ததால் இந்த மீன்களை கரை சேர்க்க முடியவில்லை. இதனால் மீனவர்கள் 4 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.

    துறைமுக ஏலக்கூடத்தில் கரை சேர்க்கப்பட்ட இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.வியாபாரிகள் இந்த மீனை போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் இன்று நடந்தது
    • ஆழ்கடலில் சாளை மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கும் சாளை மீன் பிடிப்பதற்கும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி இன்று காலை சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் விர்ஜின் கிராசிடம் முறையிட்டனர். அதற்கு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் கன்னியாகுமரி, சின்ன முட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் 6 விசைப்படகு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைப்படகு மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதையடுத்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்ன பாலா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
    • விசைப்படகுகளில் வழக்கம் போல மீன் பிடிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த 5-ந் தேதி முதல் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் தொழிலாளர்களுடனான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி துறைமுக நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு நிலையது.இதனால் தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருந்து வந்தனர்.

    மீனவர்களின் இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு மீனவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட விசை படகு மீன்பிடி தொழிலாளர்கள் தங்கத்தைச் சேர்ந்த தர்மபிச்சை உள்ளிட்ட மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து 8 நாட்களுக்கு பின்னர் இன்று காலை மீன்பிடி தொழிலாளர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம் போல மீன் பிடிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

    • தி.மு.க. மீனவர் அணி செயலாளர் முயற்சியால் இழப்பீடு வழங்கிய வெளிநாட்டு நிறுவனம்
    • விசைப்படகுக்கு இழப் பீடாக ரூ.32 லட்சம், தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.57 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி 

    குளச்சல் மரமடித் தெருவை சேர்ந்தவர் ரெஸ்லின் டானி (வயது 38).இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதா ரராக சேர்ந்து விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.

    கடந்த மாதம் 12-ந் தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து இவரது படகு ஆழ் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றது. 14-ந் தேதி மதியம் கன்னியாகுமரி கடல் பகுதி யில் 69 நாட்டிங்கல் கடல் மைல் தூரத்தில் இவர்களது படகு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணை கப்பல் எதிர்பாராமல் விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படகிலிருந்த 14 மீனவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது.

    படகின் உள் அறை களிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படகை இயக்கினால் படகு க்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். அவர்கள் விரைந்து வந்து 14 மீனவர்களையும், அவர்க ளது விசைப்படகையும் மீட்டு குளச்சல் மீன்பிடித் துறைமுகம் அழைத்து வந்தனர். இது குறித்து ரெஸ்லின் டானி, குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன் ஆகியோர் மூலம் பேச்சு வார்த்தை நடத்த கப்பல் நிறுவனம் முன் வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரச முடிவு ஏற்பட்டது. இதை யடுத்து விசைப்படகுக்கு சேத இழப்பீடு மற்றும் மீன வர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி குளச்சல் விசைப்படகு மீன் பிடிப்ப வர் நல சங்க அலுவலகத்தில் நடந்தது.

    விசைப்படகுக்கு இழப் பீடாக ரூ.32 லட்சம், தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.57 ஆயிரம் வழங்கப்பட்டது. தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஜோசப் ஸ்டாலின் , கப்பல் நிறுவன பிரதிநிதி ஜாதோவிடம் இருந்து பெற்று மீன்பிடி தொழிலா ளர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விசைப்படகு சங்க தலைவர் வர்கீஸ், செய லாளர் பிராங்கிளின், பொரு ளாளர் அந்திரியாஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மீண்டும் தொழிலுக்கு செல்ல சேதம டைந்த விசைப்படகை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.கப்பல் மோதி சேதமடைந்த விசைப்படகுக்கு துரிதமாக இழப்பீடு கிடைக்க முயற்சி செய்த தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கவுன்சிலர் ஜாண்சன் ஆகியோரை மீனவர்கள் பாராட்டினர்.

    • தூத்துக்குடியில்இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறது.
    • தொடர்ந்து 7 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறது.

    இந்நிலையில், தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.இந்நிலையில் நேற்று தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமை யாளர்கள் தொழிலாளர்க ளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது,

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி துறைமுக நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது. தூத்துக்குடியில் தொடர்ந்து 7 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மீனவர்களின் இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு மீனவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று மீனவர்கள் ஒரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

      இதற்கிடையே, தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

      இந்நிலையில் நேற்று இரவு திடீரென தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தர்மபிச்சை மற்றும் ஜவகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அதிகாலை கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடாமல் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அவர்களுடன் தூத்துக்குடி டி.எஸ்.பி.சத்யராஜ் தொலைபேசியில் விசைப்படகு உரிமையாளர்களுடன் பேசி காலையில் சமூக தீர்வு காணப்படும் எனவே உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

      இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட மீனவர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று காலை மீன்பிடிக்க செல்லாமல் வேலை கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      • படகில் சமையல் செய்யும்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது.
      • தீ மளமளவென பரவி ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது.

      கன்னியாகுமரி:

      குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற இவரது படகு, நேற்று மாலை கரை திரும்பியது. படகை தொழிலாளர்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.

      பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் தொழிலாளர்கள் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியேறி வெளியே வந்தனர்.

      அதற்குள் தீ மளமளவென ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது. இதில் படகின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

      தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைத்தனர். அருகில் படகுகளுக்கு டெம்போவில் கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சி அணைத்தனர். படகில் மீன்கள் பதப்படுத்தி வைத்திருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் பிடித்து வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்கள் தப்பின. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

      • லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
      • படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர்.

      குளச்சல்:

      குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.

      கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு குளச்சல் மீன்பிடித்துறை முகத்திலிருந்து புறப்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றது. படகில் ரீகன் (36), ஜார்ஜ் (43), மர்வின் (37), ராமன் துறையை சேர்ந்த சோனி (53), ஜாண்சன் (50), சின்னமுட்டத்தை சேர்ந்த தியோ (33), அழிக்கால் எட்வின்ராஜ் (27), சிபு (27) மற்றும் ஒடிசாவை சேர்ந்த கேதர் ஜெனோ (28), அமீர் (43), உ.பி.யை சேர்ந்த கமலேஷ் (26), லோகேஸ் (23), பின்று (21), ஆகிய மீன்பிடித்தொழிலாளர்களும் சென்றனர்.

      இவர்களது படகு கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

      இதில் படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர். அவர்கள் என்ன நடந்தது? என்பதை அறிவதற்குள் படகு சாய்வாக சரிய தொடங்கியது. கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. படகின் உள்அறைகளிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது.

      தொடர்ந்து படகை இயக்கினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். இருப்பினும் படகு நிலை தடுமாறி தொடர்ந்து சரிய தொடங்கியதால் 14 மீனவர்களும் பீதியடைந்தனர். அவர்கள் கூச்சலிட தொடங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்து 14 மீனவர்களையும் மீட்டது. விசைப்படகையும் மீட்டு நேற்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்தனர். கப்பல் மோதிய வேகத்தில் மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது.

      இது குறித்து ரெஸ்லின் டானி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் போலீசார் சேதமடைந்த படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மேற்கூறிய போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார். குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதிவிட்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட இந்த படகு மீது கப்பல் மோதியதும் நங்கூரத்தின் கயிறு கப்பலின் பிரப்பலரில் சிக்கியது. இதனால் படகை சிறிது தூரம் கப்பல் இழுத்து சென்றது. இதை கவனித்த மீனவர் மெர்வின் நங்கூரத்தின் கயிறை அறுத்து விட்டு படகை விடுவித்தார்.

      பின்னர் வி.எச்.எப்.-16 ஒயர்லெஸில் காப்பாற்றுமாறு மீனவர்கள் கப்பலுக்கு தகவல் தெரிவித்தும், கப்பல் ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

      ×