search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 244563"

    • 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார்.
    • மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். சிறிது தூரம் தேர் இழுத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கடந்த 6,7-ந் தேதிகளில் தேர் இழுக்–கப்–பட்டு நிலையை வந்தடைந்தது. இதையடுத்து தெப்பத்தேர், காமதேனு வாகனம், குதிரைவாகன உற்சவம் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி அருகே கருவலூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூா் ஏங்கா், கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அமைப்பு, திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் கருவலூா் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், துணைத் தலைவா் ஆறுமுகம், மன்ற உறுப்பினா் வாணி மகேஷ்வரி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

    இந்த முகாமை கருவலூா் நண்பா்கள் குழு, பசுமை விசுவாசம் அறக்கட்டளை நிா்வாகிகள் கபில்தேவ், அருள்குமாா், செல்வம், முத்துசாமி, பாலசந்திரன், மணி, கோபிநாத், சந்தோஷ்குமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். முகாமில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நிறைவாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    கருவலூர் துைண மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துைண மின் நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால் பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பப்பாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பன்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளார்பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
    • காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கே.ஜி.பாளையம் பீடர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், பொரையகவுண்டர் தோட்டம்,அம்மன் டையிங் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    ×